The History of Hindu India (Part 1)

With Tamil Subtitles

இந்து இந்தியாவின் வரலாறு (பாகம் 1) இந்துஸ்ம் டுடே சஞ்சிகையின் ஆசிரியர்கள் கலிபோர்னியா மாநில நார்றிஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று கௌரவப் பேராசிரியரான டாக்டர் சிவ பஜ்பாய் அவர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு மற்றும் இந்துமதம் ஆகியவற்றின் நம்பகமான படைப்பு ஒன்றை அமெரிக்காவின் 6வது படிவ சமூகவியல் படிப்புக்காகவும் இந்துக் கோயில்களில் போதனைக்காகவும், இந்து மதம் மற்றும் அதன் வரலாற்றின் பொது அறிவையும் நோக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. 2011இல் பிரசுரிக்கப்பட்ட இந்து இந்தியாவின் வரலாறு என்ற பாடபுத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தை இந்த ஆவணப்படம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கும் வகுப்பு போதனா திட்டங்களுக்கும் இங்கே செல்லுங்கள், www.hinduismtoday.com/education/. யுபராய் அறக்கட்டளை, பாடத்திட்ட மேம்பாடு நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது. கல்வி நோக்கிற்காக இலவசமாக பகிரப்படலாம்.


Transcript:

வணக்கம். என் பெயர் ராஜ் நாரயண். நான் இந்து வரலாறு, நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம் தொட்டு பேசவிருக்கின்றேன்.

உலகத்தில் இன்றுவரை வாழ்ந்திருக்கும் மிகவும் தொன்மையானதும் மூன்றாவது மிகப்பெரியதுமான மதம் இந்துமதம் ஆகும்.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் 150 நாடுகளில் வாழ்கின்றனர், பெரும்பான்மையோர் இந்தியாவில் இருக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க தேசம் மட்டும் இரண்டு மில்லியன் இந்துக்களின் வீடாகும்.

இந்து மதத்தின் மூலம்.

இந்து மதத்தின் தொன்மையான ஆரம்பத்தை அறிய நாம் 6000 ஆண்டுகள் பின்னோக்கி

இந்திய துணைக் கண்டத்தின் சரஸ்வதி-சிந்து பள்ளத்தாக்கிற்குச் செல்ல வேண்டும்.

இந்தியா அப்போது தெற்கில் இலங்கையும் வடக்கில் இமயமலை வரை அகண்டு விரிந்திருந்தது

மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் இருக்கின்றன.

சரஸ்வதி-சிந்து நாகரீகம் இங்கேயே தோன்றி வளர்ந்து, இறுதியில் உலகத்தின் மிகவும் பெரியதும், மிக மிக முன்னேறிய ஒன்றாக உருவெடுத்து

எகிப்து, மெசபடாமிய மற்றும் சீன நாகரீகங்களையும் விஞ்சி நின்றது.

இப்பகுதியின் இரண்டு மகத்தான நதிகளாகிய சரஸ்வதி மற்றும் சிந்துவின் பெயரிலேயே இந்நாகரீகம் பெயர் பெற்றது.

ஆதி இந்து புனித நூட்களை ஒட்டி இந்நாகரீகம் வேத கலாச்சாரம் எனப்படுகின்றது.

இந்நாகரீகம் 1920-இல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை ஒட்டி இது ஹரப்ப நாகரீகம் எனவும் அறியப்படுகின்றது.

மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைந்த பட்டணங்கள் சூழ்ந்த ஒரு நகரக் கலாச்சாரம் இதுவாகும்,

சிலவற்றில் மக்கள் தொகை 80,000. இது அக்காலத்தில் அரிதான ஒன்று.

மேற்கில் மெசபடாமியவிற்கும் கிழக்கில் மத்திய ஆசியாவிற்கும் என பட்டணங்கள் வியாபார பாதைகளால் தொடர்பிக்கப்பட்டிருந்தன.

ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தது மண்பாண்டங்கள்,

முத்திரைகள்,

சிலைகள்,

ஜப மாலைகள்,

ஆபரணங்கள்,

கருவிகள்,

பொம்மைகள்,

சிறு வண்டிகள்

மற்றும் பாய்ச்சிகாய்கள்,

இவை யாவும் நவீன இந்தியாவின் பரிணாமத்திற்கு காரணமாக இருந்த மூலக் கலாச்சாரத்தின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. தட்டையான கல் முத்திரைகளில் எழுத்துக்கள் மட்டுமின்றி தெய்வங்கள், சடங்குகள், மனிதர்கள், தாவரங்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அத்தகு எழுத்துமுறை மக்களிடையே பரவலாயிருந்தாலும், நாம் இன்னும் அவற்றை புரிந்துக் கொள்ளவில்லை. இந்த பழம் உருவாக்கங்களில் காணப்படும் குறிப்பிட்ட மத, கலாச்சார பழக்கங்கள் இந்நாளில் இந்துக்கள் பின்பற்றி வருவனவற்றுடன் ஒத்து இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

ஒரு முத்திரையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் உருவம் ஒன்றினை அறிஞர்கள் சிவபெருமான் என்கின்றனர்...

பத்மாசன இருக்கை இந்நாள் யோகாசனத்துடன் சுட்டப்படுகின்றது.

ஏனைய கண்டுபிடிப்புக்கள் மிக கடந்த காலத்தை இந்நாளுடன் தொடர்பிக்கின்றன, எ.கா சுவாஸ்திகம்,

அன்னை தேவியின் சிலைகள்,

சிவலிங்க வழிபாடு

ஆரியர்கள் என்றும் அழைக்கப்படும் வேதகால இனத்தின் சடங்குகளைக் காட்டும் அக்கினி குண்டங்கள்,

புனித குளியல்கள்,

பூஜாரிகள்,

புனித விலங்குகள்

மற்றும் கலைகளில் குறியீடுகள்

நமஸ்காரம் எனப்படும் பாரம்பரிய வாழ்த்து நமக்கு புதிதான ஒன்று இல்லையே.

அதனைக் காட்டும் சிறிய களிமண் சிலை ஒன்று.

இந்தச் சிலையில் ஒரு பெண்மணி தனது முடிப்பிளவில் சிவப்புத் தூள் பூசியுள்ளார்.

இந்நாள் வரை திருமணமான பெண்கள் இந்த கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். கி.மு 2,000 ஆண்டுவாக்கில் நதிகள் வறண்டு போகையில் சரஸ்வதி-சிந்து கலாச்சாரம் மறையத் தொடங்கியது, மக்கள் இன்னும் செழிப்பான பகுதிகளாகிய

கிழக்கு & மத்திய இந்தியா, குறிப்பாக கங்கை நதிக்கரை மற்றும் துணைக்கண்டத்தின் எல்லையையும் தாண்டி இடம் மாறிச் சென்றனர்.

இந்து மறைநூட்கள்

குறைந்த பட்சம் 6,000 ஆண்டுகளுக்கு முன்புதான், இந்து மதத்தின் புனித நூட்களான நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்படுவது துவங்கியது.

நான்கு வேதங்களிலும் மிகப்பழையதான ரிக் வேதம், சரஸ்வதி நதியைப்பற்றி பல முறை திரும்பத் திரும்பப் பேசுகின்றது

இமயமலைகளில் ஆரம்பித்து கடலுக்குள் வழிந்தோடும், நதிகளிலேயே மிகவும் வல்லமையான ஒன்றாக சரஸ்வதி விவரிக்கப்படுகின்றது. ஆக, இந்த மறைநூலின் பெரும்பகுதி கண்டிப்பாக கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும் என நாம் அறிகின்றோம் -- ஏனெனில் இக்காலத்தில்தான் இந்நதி வறண்டு போனது.

வேத துதிகள் கடவுள், தேவர்கள் மற்றும் தேவிகளை புகழ்ந்து பாடுகின்றன.சக்திமிக்க ஆன்மீக மக்களையும்

இனங்கள், மன்னர்கள், சக்ரவர்த்திகள், சண்டை மற்றும் போர்கள் ஆகியவற்றையும் விவரிக்கின்றன.

அவர்களின் வலுவான பொருளாதாரம் விவசாயம், தொழில்துறை, வாணிபம் மற்றும் கால்நடை வளர்ப்பைக் கொண்டிருந்தது.

வேதங்கள் அந்த நாட்டினை சப்த சிந்து, அதாவது ஏழு நதிகளின் நிலம் என அழைக்கின்றன.

சிந்து (நதி என பொருள்) என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்தே இந்து மற்றும் இந்தியா என்ற இரண்டு வார்த்தைகளும் வந்தன.

பீடம் ஒன்றினைச் சுற்றி நடத்தப்படும் யக்ஞம் எனப்படும் நெருப்பு வழிபாட்டினை வேத துதிகள் வருணிக்கின்றன.

அத்தகைய பீடங்களை சரஸ்வதி-சிந்து பட்டிணங்கள் பலவற்றில் இருந்து அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

இத்தகைய நெருப்பு வழிபாட்டை இந்துக்கள் இன்னும் செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில், இந்த ஆயிரக்கணக்கான துதிகள் எழுதப்படவில்லை, அவை மனனம் செய்யப்பட்டிருந்தன.

இந்நாளிலும் கூட, 50மணி நேரம் பிடிக்கும் 10,500 துதிகளை மனப்பாடமாக ஓதக்கூடிய பண்டிதர்களை நாம் காண்கின்றோம்.

இந்துக்கள் போற்றி மதிக்கும் இன்னும் பல புனித நூட்கள் இருக்கின்றன,

புராணங்களும் ஞானிமார்களின் எழுத்துப்படிவங்களும் இதில் அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரிய வரலாற்றுக் கதைகளாகிய இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்களாகி, இந்து மரபின் உரிமை எனப்படுகின்றன. இராமாயணம் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் அல்லது பிறவியாகிய இராமபிரான் மற்றும் அவர்தம் தெய்வீக துணைவியான சீதையைப் பற்றியதாகும்.

மஹாபாரதம் உலகத்தின் மிக நீளமான பெருங்காப்பியம்.

பண்டைய இந்தியாவில், ஒரே பெருங்குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் பெரிய இராஜாங்கத்தின் ஒன்றின் ஆட்சிக்காக நடத்திய பெரும் போரைப் பற்றியதே இது.

இதன் மையப்பகுதியான பகவத் கீதை போர்த்தளபதி அர்ஜுனருக்கும்...

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகிய கிருஷ்ணபிரானுக்கும் இடையே, யுத்தக்களத்தில் நடைபெற்ற உரையாடல் ஆகும்.

தனது தலையாய கருத்தான நீதியுடன் மஹாபாரதம் உலகில் மிகவும் பரவலான சமயநூலாக நிலைத்துள்ளது.

இந்த இரண்டு காப்பியங்களையும் மூலமாகக் கொண்டு இந்து இசை, நடனம், நாடகம் மற்றும் ஏனைய கலைகள் நிறையவே வளர்ந்துள்ளன.

இந்து சமூகம்

இந்நாள் இந்துமதத்தில் நடுநாயகமாகக் காணப்படும் மதம், தத்துவம் மற்றும் சமூகவியல் கருத்துக்களும் நடைமுறைகளும் கி.மு 600 காலத்திலேயே சிந்து-சரஸ்வதி கலாச்சாரம், வேதங்கள், திராவிடக் கலாச்சாரம், மற்றும் ஆதிவாசி கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து தோன்றி நிலைபெற்றிருந்தது உறுதிபட தெரிகின்றது.

சமூகத்தின் ஒரு தனித்துவம் வர்ணம் அல்லது வகுப்பு முறை.

மக்கள் குறிப்பிட்ட தொழில்சார்ந்த குழுக்களாக வகுக்கப்பட்டனர்.

பெற்றோர் தமது திறன்களை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு போதித்ததால், ஒரு தொழில் அல்லது வணிகத்திற்குத்

தேவையான உறுதியான அடித்தளத்தை அமைத்தனர், இறுதியில் இவை தலைமுறைச் சொத்தாகிவிட்டன.

பூஜாரிகள்,

போர்வீரர்கள்,

வணிகர்கள்,

தொழிலாளிகள் (கைவினையாட்கள் மற்றும் விவசாயிகள் அடக்கம்).

இருப்பினும் இந்த வகுப்பு முறையில் பல்வேறு விதமான வனவாசி இனங்கள் இல்லை.

மேலும், அசுத்தமான தொழில் புரிபவர்கள் எனக் கருதப்பட்ட சமூகங்களும் இந்த முறையில் சேரவில்லை. எ.கா.

சுடுகாட்டில் பணியாற்றும் சண்டாளர்கள்,

துப்புரவுத் தொழிலாளிகள்

மற்றும் தோல்பதனிடும் தொழிலாளர்கள்

இந்த முறைமை உறவுமுறை குழுக்களுக்கு வித்திட்டது

மேலும் எல்லா குடிமக்களுக்கும் ஒரு பந்த பிணைப்பையும், சமூகத்திற்கு ஒழுங்கு மற்றும் நிலைத்தன்மையைக் கொடுத்தது.

ஜாதீயத்தின் சமூகவாரி பிணைப்பின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக ...

பொருளாதாரம், சமூகவியல் மற்றும் அரசியல் துறைகளில் தொடர்கையில் திருமணம் மற்றும் தேர்தல்களில் எளிதில் வெளிப்படுகின்றது.

பண்டைய காலத்தில் வாழ்க்கை ஆண் பெண் இருபாலருக்கும் கடினமான ஒன்றாகவே இருந்துள்ளது.

பெண்கள் குடும்ப மற்றும் வீட்டு வேலைகளுக்கு பொறுப்பாயிருந்தனர்,

ஆண்கள் தமது தொழில், தோட்டம் மற்றும் குடும்ப பாதுகாப்பை கவனித்து வந்தனர்.

பொதுவில், மதச் சடங்குகள், விழாக்கள் மற்றும் சமூக உறவுகளில் பெண்கள் சரிசமமாக பங்கெடுத்து உள்ளனர். இந்தியாவின் வரலாற்றில் மதம் மற்றும் அரசியல் துறைகளில் முண்ணனி தலைவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். சிலர் வேத துதிகளையும் படைத்திருந்தனர்.

கி.மு 1000 ஆண்டு முதல், குப்தர்களின் காலம் ஊடாக, கி.பி 6-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டம் மாபெரும்

விஞ்ஞான மற்றும் கணித முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இந்நாளைய எண்ணியல் முறையை இந்துக்கள் உருவாக்கினர், இதில் பூஜியம் மற்றும் தசமம் கருத்துக்களும் ஒருங்கே இடம் பெற்றுள்ளன. இந்திய வானவியல் சாஸ்திரிகள் பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறிந்து இருந்தனர், மற்றும் வருடம் ஒன்றின் நீளத்தை ஆச்சரியப்படும் அளவிற்குத் துல்லியமாக கணக்கிட்டு இருந்தனர்.

மருத்துவத்துறையும் மிக முன்னேறி இருந்தது, வைத்தியர்கள் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளைச் செய்துள்ளனர்

இதற்கு நிகர் கி.பி 18வது நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் இல்லை.

உலகத்திற்கு எஃகு (இரும்பு+கரிமம்) வழங்கும் நாடுகளில் இந்தியாவே தலையாய நாடாக இருந்தது.

கி.பி 400 ஆண்டுகளில் அதன் பட்டறைகள் உருவாக்கிய ஓர் இரும்பு தூண் இன்றுவரை துருப்பிடிக்காமல் உறுதியாக நிற்கின்றது.

இந்த ஓர் அபூர்வ-கடினச் செயலை நவீன விஞ்ஞானத்தால் நிகர் செய்யமுடியவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா உலகமக்கள் குடும்பத்தினரில் கால் பாகத்தினருக்கு வீடாக இருந்துள்ளது.

இந்தியா ஒரு செல்வச் செழிப்பும் ஞானமும் பொருந்திய நாடு என போற்றப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்த நாளும் கூட, உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக தேசமாக இந்தியா பிரபலம் கொண்டுள்ளது.

இந்து நம்பிக்கைகள், செயல்பாடுகள் மற்றும் ஞானிமார்கள்.

உண்மை ஒன்றே, வழிகள்தான் பலவாறானது என்ற நம்பிக்கையுடையதால், இந்த மண்ணின் மதமாகிய இந்துமதம் எப்போதும் திறந்த மனப்பான்மையும் பொறுமை-சகிப்பும் கொண்டுள்ளது.

இந்துக்கள் எல்லா மதங்களையும் மதிக்கின்றனர்.

கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும் உருவகம் கொண்டு வழிபடும் ஒரே பெரும் மதம் இந்துமதம் மட்டுமே, மேலும் இதில் கடவுள் குணங்கள் கொண்டும் அவற்றைக் கடந்தும் உள்ளவராகப் போற்றப்படுகின்றார்.

நிரந்தரமான மதம் எனப் பொருள்படும் சனாதன தர்மம் என்ற சமஸ்கிருத பெயரே இந்துமதத்தின் ஆதி பெயர் ஆகும்.

பெருவாரியான இந்துக்கள் ஓர் உச்சப் பரம்பொருள்,

தேவர்கள், தேவிகள், ஆன்மீக உலகங்கள்,

உயிரின் தெய்வீகத் தன்மை, தர்மம், கர்மம், மறுபிறவி, கடவுளை அறிதல் மற்றும் மறுபிறவி விடுதலை ஆகியவற்றை நம்புகின்றனர்.

ஒவ்வொரு இடத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஏற்ப உச்சப்பரம்பொருள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது:

பிரம்மம், பகவான், சிவன், சக்தி, விஷ்ணு என பல.

அவன்-அவள் சர்வ சக்திகளும் பூண்டு, சர்வமும் அறிந்து, சர்வ அன்புமயமாகி, அனைத்துள்ளும் ஊடுருவி அதாவது எங்கும் வியாபித்து இருக்கும் தன்மை உண்டு.

மற்றும் கடந்து நிற்றல், அதாவது எல்லாவற்றுக்கும் அப்பால் இருக்கும் தன்மை உண்டு.

கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஆத்மனாக இருக்கின்றார்.

தன்னுள் உறையும் கடவுளை அனுபவித்து உணரும் செயலே கடவுளை அறிதல் எனப்படுகின்றது.

மிகவும் ஆழமானதாகிய, கடவுளுடன் நிகழும் நேரடியான இந்த சந்திப்பே வாழ்க்கையின் உச்சக் குறிக்கோள் எனப்படுகின்றது.

ஒவ்வொரு தனிமனிதனும் கடவுளை சுயமாகத் தெரிந்துக்கொள்ள முடியும் என இந்துக்கள் போதிக்கின்றனர்.

ஏனைய தேவாதி தேவர்களையும் இந்துக்கள் வழிபடவே செய்கின்றனர்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிப்பட்ட சக்தியும், பொறுப்புக்களும் உள்ளன.

எடுத்துக்காட்டுக்கு, கணேசப் பெருமான் தடைகளை நீக்கும் தெய்வமாகின்றார்.

சரஸ்வதி தேவி அறிவை வழங்குபவர்,

ஹனுமான் சேவைக்கும் பக்திக்குமான தெய்வம்.

தனக்கு விருப்பமான தேவதையை தேர்ந்தெடுத்து வழிபட ஒவ்வொரு இந்துவுக்கும் சுதந்திரம் உண்டு.

தர்மம் அல்லது அறம் இந்துமதத்தின் நடுநாயகக் கொள்கை.

இதில் நன்னெறி, உண்மை, புனிதச்சட்டங்கள், ஒழுக்கம், கடமை, நீதி, மதம் மற்றும் இயற்கைச் சட்டங்கள் அடங்கியுள்ளன.

தர்மத்திற்கு “தாங்கி நிற்கும் பொருள்” என்ற அர்த்தம் உண்டு.

தர்மக் கொள்கையாகிய அஹிம்சை அல்லது வன்முறையற்றமை இந்நாள் வரை முக்கியமாகின்றது.

வன்முறையற்ற யுக்தியைக் கையாண்டே மகாத்மா காந்தி 1947இல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிச்செய்தார்.

அமைதியான எதிர்ப்பு, ஒதுக்கி வைத்தல், வேலைநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் ஆகியனவே பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கியெறிய உதவின.

“வன்முறையின்மையே மனுக்குலம் கொண்டுள்ள உச்ச சக்தி.

மனிதனின் மதிநுட்பம் உருவாக்கிய உச்சசக்திமிக்க நாசாகர ஆயுதத்தைக் காட்டிலும் அதிக வல்லமை பொருந்தியது இதுவே” என அவர் ஒருமுறைச் சொல்லியுள்ளார்.

1950-களில் மார்தின் லூர்தர் கிங் Jr. காந்தி பூண்டிருந்த வழிமுறைகளின் சக்தியை உணர்ந்து

அவரது தொண்டர்களைச் சந்திக்க இந்தியா சென்றார்.

பின்னர் அவர் இந்த யுக்திகளைக் கையாண்டே அமெரிக்காவின் கருப்பின சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுத்தார்.

அதே பாணியில், சீசர் செவேஸ், கலிபோர்னியாவின் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெறுவதில் வெற்றிப் பெற்றார். நெல்சன் மண்டேலாவின் தென்னாப்பிரிக்க விடுதலை மற்றும் இன சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு காந்தியின் உந்துதல் இருந்திருக்கின்றது.

இந்துக்களின் கர்மவினைக் கொள்கையாகிய காரண காரிய விதியை இந்நாளில் அனைவரும் அறிந்துள்ளனர்.

ஒருவன் செய்யும் நல்லதோ கெட்டதோ,

இந்தப் பிறவி அல்லது எதிர்காலப் பிறவியில் அவனிடமே திரும்பி வரும், என்பதே இதன் அர்த்தம்.

“புறப்பட்டது எதுவோ, அதுவே திரும்பும்” என்ற பிரபல வாக்கியம் இதையே சொல்கின்றது.

ஆத்மன் புதிய புதிய உடல்களில் மீண்டும் மீண்டும் பிறப்பதே மறுபிறவி எனப்படும் முக்கியமான ஓர் இந்திய நம்பிக்கையாகும். மீண்டும், மீண்டும் பிறந்து மனித வாழ்க்கை கொடுக்கும் எல்லா அனுபவங்களின் மூலமாக வளர்ந்து முதிர்ச்சியடையவே இது நிகழ்கின்றது. இறுதியில், ஒவ்வொரு உயிரும் தான் சதாகாலமும் கடவுளிடன் ஒருமித்தே இருந்து வந்த உண்மையை அறிகையில், விடுதலை அடைகின்றது. ஆக மீண்டும் பிறப்பது இல்லை.

சாத்தான் ஒருவன் இருப்பதையோ, நிரந்தரமான நரகம் ஒன்றுண்டு என்பதையோ இந்துக்கள் நம்புவது இல்லை.

இந்துவின் வாழ்வில் வழிபாடு நடுநாயகமாகும்.

ஆக, எல்லா ஓர் இந்து வீட்டிலும் வழிபாட்டு இடம் இருக்கும்.

சுவற்றில் தெய்வப்படங்களைக் கொண்ட, எளிமையான ஒரு சுவர் தடுப்பாக இது இருக்கலாம்,

அல்லது குடும்பத்தாரின் தினசரி வழிபாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முழு அறையாக இருக்கலாம். பூஜை எனப்படும் வழிபாட்டுச் சடங்கு சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ இருக்கும், இது தினமும் கோயில் அல்லது வீட்டு பூஜை மாடத்தில் நிகழும்

இதனால் தேவாதி தேவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதங்களும் சந்தோஷமும் பெறப்படுகின்றன.

பூஜையில் ஸ்லோக உச்சரிப்பு, தெய்வ மூர்த்தத்தை குளியாட்டுதல்

உணவு, பூக்கள், வாசனை மற்றும் திரவியங்கள் படைத்தல், மற்றும் ஒளியால் வழிபடுதல் போன்றவற்றை இடம் பெறும்.

சாதனை எனப்படும் அன்றாட யோக ஒழுக்கங்களை இந்துக்கள் செய்கின்றனர்.

யோக ஆசனத்தில் தரையில் அமர்ந்து, அவர்கள் பக்திப்பாடல்கள் பாடியும்

கடவுளின் திருநாமத்தை ஜெபமாலை கொண்டு பலமுறை உச்சரித்தும், அல்லது அசைவற்ற அமைதியில் தியானிக்கவும் செய்வர்.

கோயில் கடவுளின் இல்லமாகப் போற்றப்படுகின்றது.

இந்தியாவில் மில்லியன் கணக்கான கோயில்கள் உள்ளன, பெரும்பாலானவை மிகவும் தொன்மையானவை. நுட்பமான இந்தக் கட்டுமானங்களில் முக்கியமான கோயில்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு செல்கின்றனர்.

கோயில்களுக்கும் தூரமான ஸ்தலங்களுக்கும் யாத்திரைச் செல்ல வேண்டும் என்ற கடப்பாடு இந்துக்களுக்கு உண்டு. இந்த யாத்திரைகளால் மதம் ஒன்றுபடுகின்றது, ஏனெனில் துணைக்கண்டம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்து ஏனையவரிடம் பழகுகின்றனர். எல்லா வகுப்பு மக்களிடத்து இருந்தும் ஏராளமான புனித ஆண் மற்றும் பெண் ஞானிமார்களை உடைய செழிப்பான வரலாறு இந்துமதத்திற்கு உண்டு.

மாபெரும் ஞானியர்களில் சிலர் உபநிஷதங்களுக்கும் ஏனைய நூட்களுக்கும் விரிவான விளக்கவுரை எழுதியுள்ளனர்

எடுத்துக்காட்டுக்கு கி.பி 8வது நூற்றாண்டின் ஆதிசங்கரர்,

11வது நூற்றாண்டின் இராமானுஜர்

மற்றும் 15வது நூற்றாண்டின் வல்லபச்சாரியர்.

திருஞானசம்பந்தர், மீராபாய், துகாரம் போன்ற ஏனையோர் தமது சுய கடவுள் அனுபூதியை பக்திப்பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளனர். தற்கால ஞானிமார்கள ்இராமகிருஸ்ன பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஆனந்தமயி மா, சுவாமி நாராயண் மற்றும் சீர்டி சாய்பாபா ஆகியோர்.

மில்லியன் கணக்கான சுவாமிகளும் ஞான உயிர்களும் இந்துமதத்தின் நிர்வாகத் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளனர்.

சுவாமிமார்கள் உலகத்தைத் துறந்து முழுநேர ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுள்ளனர். இவர்களுள் முக்கியமானவர்கள் குருமார்களாவர்; ஞானஒளி பொருந்திய இத்தகைய ஆண்களும் பெண்களும் மத ஆசிரியர்களாக சேவை புரிகின்றனர்.

சில குருமார்களுக்கு மில்லியன் கணக்கான பக்தர்கள் இருப்பர். ஏனையரோ எளிமையான துறவிகளாயிருப்பர்.

இந்து மதத்திற்கு மத்திம நிர்வாகக் குழு அல்லது கேள்வியே கூடாது என்ற கொள்கை ஒன்று கூட இல்லை.

எந்த ஒரு தனிமனிதனோ அமைப்போ பொறுப்புதாரி என்பது இல்லை.

மாறாக, ஆயிரக்கணக்கான சுதந்திரமான குருபரம்பரைகள், ஆன்மீக பாரம்பரியங்கள், துறவி சங்கங்கள் மற்றும் மத அமைப்புக்கள் இருக்கின்றன.

இந்து பெருநாட்கள்

இந்துக்கள் விழாக்களை விரும்பி, ஒவ்வொரு ஆண்டும் பல புனித நாட்களை பெரும் ஊக்கத்துடன் கொண்டாடுவர்.

இதில் பெரியது தீவாளி அல்லது தீபாவளி எனப்படும் ஒளித் திருநாள்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதுநிலவின் போது, ஐந்து நாட்களுக்கு இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது,

நன்மையானது தீமையை வெல்லுதல், ஒளியானது இருளை நீக்கி வெற்றிப் பெறுதலை இது கொண்டாடுகின்றது.

பாரம்பரிய மண் விளக்குகள் உட்பட, ஆயிரக்கணக்கான விளக்குகள் எல்லா இடங்களிலும் ஏற்றப்படும்,

பட்டாசு வானவேடிக்கைகள் மனுக்குலத்தின் நம்பிக்கைக்கு சமிக்ஞை செய்யும்.

இந்நாள் இந்தியாவிலும் இந்துக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலும் ஒரு பொதுவிடுமுறை ஆகும்.

திரு.பராக் ஓபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளியைக் கொண்டாடிய முதல் அமெரிக்க அதிபர் ஆவார்.

அதிபர் பராக் ஓபாமா: “நான் உங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.”

கும்ப மேளா எனும் சிறப்பு திருவிழா, ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் ஒருமுறை, நான்கு புனித நதிகளிடத்தில் இடம் பெறும்.

2013-இன் கும்பமேளா வட இந்தியாவிலிருக்கும் ப்ரயக் (நவீன கால அலகாபாத்) என்ற இடத்தில் நடந்தது.

அந்த ஆறு வார காலத்தில், 130 மில்லியன் மக்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் யாத்திரைக் கோலம் பூண்டிருந்தனர்.

ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் 30மில்லியன் யாத்திரீகர்கள் இருந்துள்ளனர்!

இதுவே பூமிப்பந்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மனித ஒன்றுகூடல் ஆகும்.

தர்மம், இறைநம்பிக்கை மற்றும் கலாச்சாரம் ஆகியன ஒருங்கே

ஒவ்வொரு இந்துவிலும் தனித்துவமும் உறுதியும் மிக்க அடையாளம், குடும்ப மற்றும் ஆன்மீக குறிக்கோளை நிறுவியதால்தான் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கின்றது.

இது தாக்குபிடிப்பதற்கு காரணம் இது ஓர் உயிரோட்டமுள்ள மதம், இதில் பரிபூரண செயல்முறைச் சுதந்திரம் உண்டு. கடவுளை வழிபட பல வழிகள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு, திருவிழாக்கள், கோயில்கள், யாத்திரைகள், குருமார்கள் மற்றும் மறைநூட்களைக் கொண்டு வழிக்கு ஒளி ஏற்றுகின்றது,

ஒட்டுமொத்தத்தில் வாழ்வை கொண்டாடி மகிழ்கின்றது.

இந்துமதம் மற்றும் அதன் வரலாற்றைப் பற்றிய உங்களின் புரிந்துணர்வை இந்த ஆவணம் அதிகரித்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

Photo of  Gurudeva
"I will be what I will to be. I will do what I will to do." You can repeat these two powerful affirmations over time and time again and thus rearrange, restructure, the forces of your subconscious mind and create a great inner peace within yourself.
—Gurudeva