To attend worship at Kadavul Hindu Temple make a reservation here
FRONT GROUNDS ARE OPEN DAILY FROM 9AM to 12PM WITHOUT A RESERVATION

Mini Catechism

When Gurudeva was traveling throughout the South of India and Sri Lanka, he was met with massive crowds, mostly in Siva temples where he gave some of his most moving talks, urging Saivites to be strong, to love Siva, to not submit to conversion efforts. He would give out small booklets and cards to tens of thousands who came to hear the guru from Hawaii speak boldly. One year he had the monks produce a small pamphlet, which folded down to 3" by 5". It was a catechism, in English on one side and Tamil on the other. He called it "SAIVA DHARMA: A Catechism for Saivite Hinduism." Since Tamil script had not reached the computer, he had it hand-written. We share it with you today. The Tamil was recently typed in by Ramesh Sivanathan in Malaysia, so now it is captured for posterity.

SAIVA DHARMA
A Catechism for Saivite Hinduism

சைவ தர்மம்
சைவ இந்துசமயத்திற்கு ஒரு சமய பாடம்
For further information write to Saiva Siddhanta Church, P.O.Box 10, Kapaa, Hawaii, USA 96746.
நமது பெருங்கடவுள் சிவபெருமான்
சிவபெருமானுடைய இயல்பு யாது? உண்மையில் சிவபெருமானே எல்லாமாய் விளங்குகிறார். அவருக்கு இணை எவருமில்லை. அவரே பரம்பொருள். அவரே நம் பதி. அவரே கடவுள்.

சிவபெருமான் ஒருவரே. இருப்பினும் பரப்பிரம்மம், சுத்தசைதன்னியம், ஆதி ஆன்மா என்ற மூன்று பூரணப்பொருளாக அவரை நாம் உணர்கிறோம். பரப்பிரம்மம் என்ற நிலையில் அவர் வெளிப்படாதவர்; மாறுதலற்றவர்; எல்லாம் கடந்தவர்; தான்தோன்றி; காலமற்றவர்: உருவம் அற்றவர்; இடம் அற்றவர். சுத்த சைதன்னியம் என்ற நிலையில் காட்சியருளும் பரம்பொருள் அல்லது தூய அன்பும் ஒளியுமாய் எல்லா வடிவங்கள் மூலமாகவும் வெளிப்படுகிறார்; எல்லா இடங்களிலும் காலங்களிலும் ஒரே நேரத்தில் வியாபித்து வரம்பற்ற எல்லையற்ற அறிவாகவும் ஆற்றலாகவும் திகழ்கிறார்.

ஆதி ஆன்மா என்ற நிலையில் அவர் முத்திறங்களில் வெளிப்படுகிறார்: படைப்பவராகிய பிரம்மா, காப்பவராகிய விஷ்ணு; அழிப்பவராகிய ருத்திரன். இம்மூல ஆன்மாவே நமக்குரிய தெய்வம்; மூவுலகங்களுக்கும் அவற்றின் நியதிகளுக்கும் மூலகாரணர்; நமது தெய்வீகத் தந்தை /தாயாக அமைந்து, நம்மைப் பாதுகாத்துப் பேணி, வழிகாட்டி, நாம் உழலும்போது தன் உண்மையை மறைத்தும், அவரது அளவற்ற கருணையைப் பெறத்தக்க முதிர்ச்சியை நாம் அடைந்த காலத்து தன்னை வெளிப்படுத்திக் காட்டியும் அவர் அருளுகின்றார். சிவபெருமானை எல்லாமாயும், எல்லாவற்றுள்ளும், நமது எண்ணத்திற்கப்பாற்பட்ட பெரியதாயும், நேரடித் தொடர்பு மூலமாக மட்டுமே அறியக்கூடிய புனித இரகசியமாகவும், முற்றிலும் விளக்கவோ வருணிக்கவோ முடியாததாயும் நாம் அறிகிறோம். அவரை அறிந்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும்.

000 சிவபெருமான் உலகைப் படைத்தாரா? ஆம். தேவருலகையும், பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் படைத்தார். வினாடிதோறும் காணும் பெளதிக மற்றும் புலப்படாத ஆன்மப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் அவர் படைத்து நீடிக்கச் செய்கிறார்.

000 சிவபெருமான் உருவமுடையவரா அல்லது உருவமற்றவரா? சிவபெருமான் உருவமுடையவராகவும் உருவமற்றவராகவும் விளங்குகிறார். அவர் சுத்த சைதன்னியம் அல்லது தூயவடிவினர். எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படும் தனிக்கடவுள். எல்லா வடிவங்களையும் கடந்த பரம்பொருளாகப்- பொதுக்கடவுளாகவும் திகழ்கிறார்.

000 சிவபெருமானை நாம் எந்தெந்த வடிவங்களில் வழிபடுகிறோம்? உண்மையில், எல்லா வடிவங்களுமே சிவபெருமானது வடிவங்களேயாம். ஆனால் நெடுங்காலமாகச் சிவலிங்கம், அர்த்தநாரீசர், நடராஜர் என்னும் மூன்று மூர்த்திகளைக் குறித்தே சிறப்பாக நம் வழிபாடு அமைந்துள்ளது. 7
நமது அழிவற்ற ஆன்மா நமது ஆன்மாவின் இயல்பு யாது? நம் ஆன்மா அழியாத ஆன்மீக ஒளிவடிவமானது. அதுவே வாழ்வுக்கு உயிரூட்டி. தேவையான கர்மாக்கள் அனைத்தும் உருவாகி அனுபவிக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் அதன் முக்கிய ஐக்கிய நிலையை அடையும் வரையில் அது மீண்டும் மீண்டும் பிறக்கிறது.

000 நம் ஆன்மா சிவபெருமானுடைய படைப்பாகும். நமது உயிர்ப்பணிகள் அனைத்திற்கும், அறிவு எண்ணம் அன்பு உட்பட அனைத்திற்கும் அதுவே மூல ஊற்றாகும். ஆன்மா என்பது ஆணோ பெண்ணோ அல்ல. பெளதிக, பிராண, சூட்சும, மன தேகங்களாகிய நமது நான்கு புறக்கூடுகள் உருமாறி அழிவது இயல்பாயினும் ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. ஆன்ம உடம்பு என்பது ஐந்தாவதும் மிக ஆழ்ந்த அக உடம்புமாகும். பெளதிக உடலோ மனமோ அல்லது உணர்ச்சிகளோ நாம் அல்ல. அழிவற்ற ஆன்மாவான பசு என்று அழைக்கப்படுவது நாம். “நாமே ஆன்மா. இதனை முற்றிலும் அறிந்தவனாக நீ இருக்க வேண்டும்” என்று பரமகுரு சிவயோக சுவாமி நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.

000 சிவபெருமானிடமிருந்து ஆன்மா எவ்வாறு வேறுபட்டுள்ளது? பரமான்மாவான சிவபெருமானது வடிவத்தைப் போலவே நமது ஜீவான்மாவின் உடலும் படைக்கப்பட்டது. அனால் தனது முதிர்ச்சியில் அது பரமான்வாவிலிருந்து வேறுபட்டது.

8 சிவபெருமானுக்கு ஆன்மா எவ்வாறு இணையாகும்? உள்ளார்ந்த அன்பும், கடந்த உண்மையும், ஒருபோதும் படைக்கப்படுவதில்லாத நமது ஆன்மாவின் சாரமாகும். சிவபெருமானுக்கு அது என்றும் இணையாயுள்ளது.
000
சிவபெருமானுக்கு நாம் இணை எனில் நாம் ஏன் எல்லாம் அறிந்தவராயில்லை? ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நம் பார்வையை மறைக்கின்றன. சிவபெருமான் வேண்டுமென்றே இதனால் நம் உணர்வைக் கட்டுப்படுத்தியுள்ளார். இதுவே நாம் நமது தனித்தன்மையைப் பெற்றிருக்கவும் பரிணாம வளர்ச்சி பெறவும் நம்மை அனுமதிக்கின்றது. ஆன்மாவின் துரியாதீத நிலையில் இறைவனின் எல்லாம் அறிந்த தன்மையை நாம் பங்கு கொள்கின்றோம்.

000 சில ஆன்மாக்கள் ஏனையோரைவிட மிக முன்னேறிக் காணப்படுவது ஏன்? ஆன்மாக்கள் எல்லாம் திடீரென்று படைக்கப்படவில்லை. தொடர்ந்து ஆன்மாக்களைச் சிவபெருமான் படைத்துக் கொண்டிருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பு படைக்கப்பட்ட ஆன்மாக்கள் பழைய ஆன்மாக்களாவர். நெடுநாள் முன்பு படைக்கப்படாத ஆன்மாக்கள் இளைய ஆன்மாக்களாம்.
000
நாம் இறக்கும்போது நமது ஆன்மாவுக்கு என்ன நேருகின்றது? நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. ஸ்தூல உடல்தான் இறக்கிறது. மரணத்திற்குப் பிறகு ஆன்மதேகம் (சூட்சும உடல்) தொடர்ந்து முடிவற்ற தொடர்ச்சியில் அகநிலை உலகங்களில் மலர்ந்து மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறது.

000 தவறாகச் சிந்தித்துச் செயல்படும் அல்லது தன்னை நம்பாதிருக்கும் ஆன்மக்களை சிவபெருமான் தண்டிக்கிறாரா? இல்லை. சிவபெருமான் பூரணமாய் நன்மை பயப்பவர். .அன்பு, உண்மை வடிவினர். அவர் சினம் கொள்வதில்லை; பழிவாங்குவதுமில்லை.
நாம் வாழும் உலகம் இவ்வுலகம் எங்கிருந்து வந்தது? அது உண்மையானதா? ஆன்மாக்கள் மலர்ச்சியுறும்போது தங்கியிருப்பதற்காகச் சிவபெருமான் இவ்வுலகினையும் இணையான உண்மையுடைய எண்ணற்ற பிற உலகங்களையும் படைத்தார்.

000 இவ்வுலகம் எப்பொழுதாவது முடிவடையுமா? படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முடிவற்ற சுழற்சியில் ஸ்தூல உலகம் உள்ளது. மீண்டும் படைக்கப்படுவதற்காகவே உலகம் முடிகின்றது.

9 இவ்வளவு துன்பங்களும் வேதனைகளும் உலகில் காணப்படுவது ஏன்? உலகின் இயல்பே இருமைதான். இன்பமும் துன்பமும்; நன்மையும் தீமையும்; அன்பும் வெறுப்பும் என்று இவ்வாறு ஒவ்வொரு பொருளும் அதன் எதிர்மறையும் இதில் அடங்கியுள்ளன. இவற்றை அனுபவிப்பதன் மூலமே நாம் கற்று வளர்ந்து இறுதியில் எல்லா எதிர்மறைகளையும் கடந்த உண்மையை நாடிச் செல்கின்றோம்.

000 உண்மையான மகிழ்ச்சியும் மெய்யறிவும் இப்பெளதிகப் பிரபஞ்சத்தில் கிட்டாது எனின் இவ்வுலகில் நாம் ஈடுபடுவதனைத்தையும் தவிர்த்துவிட வேண்டும் அல்லவா? இல்லை. இவ்வுலகம் நமது பெருங்கருணைச் சிவபெருமானுடைய வள்ளல் தன்மை கொண்ட படைப்பாகும். இதில் நாம் நன்றாக வாழ வேண்டும். கன்மத்தை எதிர்நோக்கியும் தர்மத்தை நிறைவேற்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே இது படைக்கப்பட்டுள்ளது. உலகைக் கண்டு நாம் வெறுப்படையவோ அச்சம் கொள்ளவோ கூடாது.

000 மனிதனும் உலகமும் இயல்பாகவே பாவம் படைத்தவர்களா? இல்லை. மனிதனும் உலகமும் இயல்பாகவே நல்லவர்களே. இயற்கையில் தீமை என்று ஒன்றில்லை. ஆன்மா எக்காலத்திலும் இழக்கும் நிலையைப் பெறுமாறு அமைந்த மரணத் தீவினை என்று எதுவும் இல்லை. இருப்பினும் வேண்டுமென்றே தெய்வீக விதியை மீறிச் செய்யும் செயலே தீவினை எனப்படுகிறது.

000
கடவுளின் விதிகளை மீறியவர்கள் நிரந்தரமாகத் துன்புறும் நரகம் என ஒன்று உள்ளதா? இல்லை. நிரந்தரமான நரகம் என்று எதுவும் இல்லை. ஆயினும் தவறாகச் சிந்தித்துச் செயல்படுவோர்க்கு நரகவேதனை தரும் மனமும், வேதனை நிறைந்த பிறப்புக்களும் உள்ளன.

000 சைவ சுவர்க்கம் என ஒன்று இருகிறதா? ஆம். துரியமான ஆழத்தில்- இரண்டாவது மூன்றாவது உலகங்களில் – வானுலகப் பகுதிகளான தேவலோகமும் சிவ லோகமும் உள்ளன. அங்கே முதிர்ந்த ஆன்மாக்கள், உலகப் பிறவிகள் முடிந்த பின்னரும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறன.


One Response to “Mini Catechism”

  1. Rajendra Giri says:

    Jai Gurudeva!

Leave a Comment

Archives are now available through 2001. Light colored days have no posts. 1998-2001 coming later.

Subscribe to RSS Feed