சிவனை அடையும் வழி

30§

நான்கு படிகள் யாவை?§

ன்மாவை சிவபெருமான் படைத்தபோது அது இளம் ஆன்மாவாகவும் பக்குவப்படாமலும் இருந்தது. அது பலபிறவிகள் எடுத்து முதிர்ச்சி பெற்று பக்குவப்படும் முறையானது நான்கு படிமுறைகளில் நடக்கிறது. ஒரு தாமரைப்பூ எப்படி வளர்ச்சியடைகிறதோ அதுபோலவே இதுவும் நடக்கிறது. முதலில் அது குளத்திலிருக்கும் சேற்றுக்குள் வேர்களை அனுப்புகிறது. பிறகு அதன் தண்டு மற்றும் இலைகளை நீரின் மேல்நிலைக்கு அனுப்புகிறது. இறுதியாக முழு சூரிய ஒளியில் அது பூவாக மலர்கிறது. கடந்து வந்த ஒவ்வொரு படியும் அத்தாமரை மலர் மலர்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இப்படித்தான் சிவபெருமானின் அருள் நம்மையும் வழிநடத்துகிறது.§

கர்மவினை என்னும் தெய்வீக வினைக் கோட்பாட்டின்கீழ் நாம் பாடம் பயின்று முதிர்ச்சிபெற்று அனுபவம் அடைந்ததும் ஞான ஒளியை நோக்கி நம்மை அது நகர்த்துகிறது. ஒவ்வொரு படியிலும் ஆன்மா முன்னேறிச் செல்லும்போது அதன் இச்சைமன ஆட்டம் குறைகிறது. ஆன்மீக இயல்பு இன்னும் அதிகமாக வளர்கிறது. சிவபெருமான் தொடர்ந்து ஆன்மாக்களைப் படைத்துக் கொண்டேயிருக்கிறார் என்பதால் எந்நேரத்திலும் இந்நிலவுலகில் இளம் ஆன்மாக்களும், வாலிப ஆன்மாக்களும், பழம் ஆன்மாக்களும் இருந்துகொண்டே இருக்கின்றனர். ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் அந்த படிமுறைகளே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படிகள். சரியை என்பது நன்னடத்தை, பணிவான தொண்டு, திருக்கோயிலுக்குச் செல்வது, அங்குள்ள திருப்பணிகளுக்கு உதவி செய்வதுமாகும். இச்சைமனத்தை அடக்கி மேலான நற்குணங்களை வளர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம். கிரியை என்பது வீட்டில் செய்யும் பூசை மற்றும் கோயில் வழிபாடு மூலம் கடவுள் மீது பக்தியும் அன்பும் செலுத்தும் படிமுறையாகும். யோகம் என்பது ஒரு குருவின் பார்வையின்கீழ் தியானத்தில் ஈடுபடுவதும் மனதை உள்முகமாகத் திருப்ப கடும் முயற்சியில் ஈடுபடும் படிநிலையாகும். இந்த படிநிலையில் கோயில் ஒரு புனித இடமாக மாறி ஆழ்தியானத்துக்கு இடங்கொடுக்கிறது. இவ்விடத்தில் சிவனின் மறைக்கும் சக்தியானது (திரோதன சக்தி) சிவனின் அருளும்சக்திக்கு வழிவிடுகிறது.§

ஞானம் என்பது மெய்ப்பொருள் உணர்ந்த படிநிலை. இதில் ஆன்மாவானது தன்னையும் கோயில் தெய்வத்தையும் ஒன்றாகவே காண்கிறது. இந்தப் படிமுறைகள் ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கப்படுகின்றன. சிறுவர்களாக இருக்கும் நாம் யாமம் நியமத்தில் சுருக்கமாகச் சொல்லியிருப்பதுபோல் நன்னடத்தைப் பழகுகிறோம். பிறகு நமக்கு வழிபாட்டு முறைகள் சொல்லித்தரப்படுகின்றன. கடவுளையும் தெய்வங்களையும் சற்குருவையும் மனம் உருகும்படி எப்படி வணங்குவது என்று நமக்கு சொல்லித்தரப்படுகின்றது. அடுத்து உண்மை ஞானம் அடையும் நோக்கில் நாம் தியானம் செய்யப் பழகுகிறோம். இந்த நான்கு படிகளும் ஒன்றுக்கு இன்னொன்று மாற்றுவழி என்றில்லாமல் அவை சன்மார்க்கம் என்ற ஒரே பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக முறையாக முன்னேறிச் செல்லும் வழிமுறைகளாகும். அல்லது ஆன்மாவானது முதல் படியிலிருந்து அடுத்த படிக்கு செல்லும்போது முதல்நெறியை விட்டுவிடுவதில்லை. எனவே ஞானப்படிநிலையில் பக்குவப்பட்ட ஆன்மாவானது மிகுந்த ஞானத்தோடும், யோகத்தோடும், பக்தியோடும் ஒழுக்கசீலராகவும் இருக்கும். ஆகப் பெரிய யோகிகள்கூட இன்னும் சிவனை அன்போடு வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.§

image§

shutterstock§

ஒன்றன்பின் ஒன்றாகவுள்ள இந்த நான்கு கற்களும் நாம் பின்பற்றும் நெறியைக் குறிக்கின்றன. கற்களை பின்னேவிட்டுவிட்டு தாண்டிச் செல்லும் இவரைப்போல நாமும் இல்லாமல், ஒவ்வொரு படியும் நமக்குத் தேவை முக்கியம் என்று தாண்டி முன்னே செல்வோம்.§

குருதேவர்: சிலர் யோகப்படியில் இருந்துகொண்டு கடவுளை வணங்கத் தேவையில்லை என்றும், தொண்டுசெய்யத் தேவையில்லை என்றும் யோகம் மட்டுமே செய்தால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் நமது சைவசித்தாந்த தத்துவத்தில் யோகப்படியிலும் ஞானப்படியிலும் இருப்போர் கடவுளை சந்தோஷத்தோடு வணங்குகின்றனர். திருத்தொண்டை சந்தோஷத்தோடு செய்கின்றனர். அவை உங்களுக்கு மிகவும் பிரியமானவை; உங்கள் வாழ்வின் முக்கியமான அங்கமாகும்§