சிவனை அடையும் வழி

34§

இறப்பதற்கு நாம் எப்படி தயாராகிறோம்?§

மது ரிஷிகளும் ஞானசாத்திரங்களும் மரணம் என்பது ஓரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு கடந்துசெல்லும் ஒரு பேரின்பமான ஒளிசூழ்ந்த நிகழ்வு என்றும் அது சட்டை மாற்றுவதுபோல் எளிமையானதும் இயல்பானதும் என்றும் நமக்கு உறுதியளித்திருக்கின்றனர். அது பயப்படக்கூடிய அளவுக்கு ஒரு பயங்கரமான அனுபவம் அல்ல. உண்மையில் பழங்கால ஞானிகள் மரணத்தை மனிதனின் மிக உன்னத அனுபவமாக விவரித்துள்ளனர். நமது ஆன்மா இறப்பதில்லை. உடல் மட்டுமே இறக்கிறது. மரணத்தைப் பற்றி நாம் கவலையடைவதில்லை. அல்லது அதை எதிர்நோக்கிக் காத்திருப்பதுமில்லை. வாழ்வு, மரணம், மரணத்திற்குப்பின்னுள்ள வாழ்வு—இவையெல்லாம் இறைவனோடு நாம் முழுமையாக ஒன்று சேரும் ஒரு வழி என்று நமக்குத் தெரியும்.§

மரணம் என்பது இந்த உலகத்திலிருந்து நுண்ணிய உலகுக்கு விரைவாக கடந்து செல்வது அதாவது கதவுவழியாக ஓர் அறையிலிருந்து வெளியேறி இன்னொரு அறைக்குள் நுழைவது போலாகும். அப்படி ஒருவேளை நாம் விரைவில் சாகப்போகிறோம் என்று தெரிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தால் நாம் நம்முடைய கடமைகளையெல்லாம் செய்துமுடித்து மனதில் எதுவுமேயில்லாமல் வெறும் சாதனாபயிற்சி மட்டுமே மேற்கொள்கி ேறாம். நாம் திருந்தியவராய் மற்றவர்களோடு கருத்துபேதம் ஏதுமிருந்தால் அதனைப்போக்கிக் கொள்ளவும், கடந்தகால சண்டை சச்சரவுகளையும் மறந்து மன்னிக்கவும் செய்கிறோம். இதனால் நாம் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு கவலையடையாமல் பின்வரும் பிறவிகளுக்கு இந்த வினைப்பயன்களை (கர்மாக்களை) எடுத்துச் செல்லாமல் இருக்கிறோம். நம்முடைய சொத்து சுகங்களையும் ஏற்பாட்டுக் கடமைகளையும் உயிலில் நாம் எழுதிவைக்கிறோம். வேறு ஒருவரிடம் இக்கடமைகளை நாம் ஒப்படைப்பதில்லை. பிறகு தியானம் ஜெபம் மற்றும் புனிதபோதனைகள் வழியாக நாம் கடவுளிடம் சிந்தனையைத் திருப்புகிறோம்.§

பல இந்துக்கள் தங்களின் ‘ இறுதி மகாபயணத்தை’ (இறப்பு) முடிக்க புனித தலங்களுக்குச் செல்கின்றனர். இந்தியாவிலுள்ள வாராணாசி இதற்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இறக்கும் நேரத்தில் நாம் சுயவுணர்வோடும் மனம் சுத்தமாகவும் இருப்பது நல்லது. ஆகவே உடம்பு உயிரோடு இருக்க மருந்து மாத்திரைகள் உட்கொள்வதையும் இதர வீரதீர முயற்சிகளையும் ஆகக் குறைவாகக் குறைத்துவிட வேண்டும். இறுதிகாலம் நெருங்கிவிட்டால் அப்படி ஒருவேளை மருத்துவமனையில் இருந்தால் வீட்டிற்குத் திரும்பிப்போய் அன்புசார்ந்தவர்களோடு இருக்க வேண்டும். இறுதிமூச்சு விடும் நேரத்தில் நமக்குள்ளே இருக்கும் ஆத்ம கடவுளை நாடி நமது மந்திரத்தின்மீது கவனத்தை வைக்கிறோம். அவ்வேளை குடும்ப உறுப்பினர்கள் விழித்திருந்து பிரார்த்தனைகள் மேற்கொள்வர். மரணமடையும்போது சிவபெருமானின் அருளை வேண்டி, உச்சந்தலையிலிருக்கும் சகஸ்ரார சக்கரத்தின் வழியாக உயிர்பிரியும்படி முயன்று விடுதலை நாடி வெட்டவெளி வெளிச்சத்தில் புகுந்து அப்பாலுக்கும் அப்பால் செல்கிறோம்.§

image§

shutterstock§

சுடுகாட்டில் தகனக் காட்சியை ஒரு ஓவியர் தீட்டியுள்ளார். சவத்தை சுத்தப்படுத்தி, வெள்ளைத் துணியில் சுற்றியபின், அடுக்கி வைத்திருக்கும் விறகுக் கட்டைகள்மீது கிடத்தி வைப்பார்கள். அவ்விடம் இயல்பாகவே சோகம் சூழ்ந்திருப்பினும் பயப்படத் தேவையில்லை§

குருதேவர்: மரணம் மட்டுமே வலியை தராது. மரணம் பேரின்பமானது. இதற்கு அறிவுரை ஏதும் உங்களுக்குத் தேவையில்லை. என்ன நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வாக உங்களுக்குத் தெரியும். மரணம் ஒரு தியானம் போன்றது, ஒரு சமாதி போன்றது§