சிவனை அடையும் வழி

38§

நமது ஆண்/பெண் மகான்கள் யார்?§

சைவ சமயத்தில் பல ஆண் மகான்களும் பெண் மகான்களும் உள்ளனர். அனைவருமே சிவபெருமான், முருகன் மற்றும் கணேசரின் தீவிர பக்தர்கள். உயிருடன் வாழும் அவர்களின் பிறந்த நாளை அல்லது ஜெயந்தியை நாம் (குருபூசை)விழாவாகக் கொண்டாடுகிறோம். இவ்வுலகைவிட்டுப் பிரிந்தவர்களுக்கு அவர்கள் உயிர்நீத்த நாளை அல்லது மகாசமாதி அடைந்த தினத்தை புதிய பிறந்த நாளாக நாம் கொண்டாடுகிறோம். சமயஞானிகளின் பக்திபூர்வமான வாழ்க்கை அமைதி, பணிவு, தூய்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. முனிவர்கள் என்போர் புறத்தே சாதாரணமாகத் தோன்றும் மகா ஆத்மாக்களாவர். சற்குருக்கள் என்போர் பிறரையும் ஞானவழியில் இட்டுச்செல்லும் மெய்ஞ்ஞானமடைந்த மகான்கள். ஆண் மகான்களும், பெண் மகான்களும், திருமணமானவர்களும், குருமார்களும், சாதுக்களும், சுவாமிகளும் சரித்திரம் முழுதும் நெருக்கடியான நேரங்களில் சைவ சமயத்துக்காகக் குரல் கொடுத்து பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். பலபேர் பல புதிய இடங்களுக்கு பரவலாகச் சென்று சைவ சமய அறிவையும் கலாச்சாரத்தையும் பரப்பியிருக்கின்றனர். சிலர் தியானமும் யோகமும் செய்துகொண்டு தனிமையில் வாழும் சித்தர்களாக இருந்தனர். மேலும் சிலர் ஞானசாத்திர நூல்களை இயற்றினர் அல்லது கடவுள்மீது நாம் இன்று பாடும் அழகிய (தேவாரப்) பாடல்களைப் பாடினர்.§

நமது பரம்பரை 2000 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீர் தேசத்திலிருந்து வந்த நந்திநாதர் மகரிஷி என்ற மகா யோகியிடமிருந்து தொடங்கியது. அவரின் சீடர் சுந்தரநாதர் பின்னர் திருமூல ரிஷி என்று அழைக்கப்பட்டவர். அவர் கால் நடையாகவே சைவ சமயத்தை போதிக்க தென் இந்தியாவுக்குச் சென்றார். நமது குருமார்களில் பலர் அவரைப் பின்பற்றி வந்தவர்களே. இதற்கிடையே மச்சேந்திரநாதரும் அவரின் சீடர் கோரக்ஷநாதரும் தொடங்கிய இன்னொரு பிரிவும் சைவ சமய சம்பிரதாயத்தில் அடங்கும். அவர்கள் ஹடயோகம் என்ற நாத சைவசமயத்தை மத்திய இந்தியா முழுதும் நேபாள நாட்டிலும் பரப்பினார்கள். பெண் ஞானிகளில் கடுந் தவசியான காரைக்கால் அம்மையாரையும் அன்பான ஔவையாரையும் நாம் சேர்க்கலாம். ஔவையாரின் செய்யுள்களை பள்ளி மாணவர்கள் சமயம் மற்றும் நன்னடத்தை பயிலக் கற்கிறார்கள். சைவ ஞானிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்கள் தமிழ் சமயக் குரவர்கள் என்றழைக்கப்படும் நால்வர் ஆவர். (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர்). இவர்களே பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் சைவ சமயத்தை வலுவாக நிலைநிறுத்தியவர்கள்.§

image§

shutterstock§

செல்லாச்சியம்மா ஸ்ரீலங்காவில் வாழ்ந்த ஒரு ஞானப் பெண்மணி.யோகசுவாமியால் பெரிதும் அன்புசெய்து மதிக்கப்பட்டவர். தன் ஆசிரமத்துக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் அந்த ஞானப் பெண்மணி ஆன்மீக ஆதரவு கொடுத்துபோல், யோகசுவாமியும் மைல் கணக்கில் நடந்து அவருக்கு சோறு சமைத்து உணவூட்டி ஆதரித்தார்.§

குருதேவர்: உலக வாழ்வைத் துறப்பது உங்களின் தர்மமாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும் மகான்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைத்தார்கள், எப்படி வாழ்க்கையை எதிர்கொண்டார்கள் என்பதை ஊன்றி கவனித்து படித்துக் கொள்வதால் பெரும் நன்மை அடையலாம். அவர்களின் அனுபவ உதாரணத்தை நீங்கள் உங்கள் வாழ்வினிடையே பயன்படுத்தலாம்.§