சிவனை அடையும் வழி

59§

கர்ம யோகத்தை நாம் எப்படி கடைப்பிடிக்கிறோம்?§

ர்மயோகம் என்பது தன்னலமற்ற தொண்டு அல்லது சேவை. இது பெரும்பாலும் கோயிலில் ஆற்றப்ப டுகின்ற தன்னார்வ சேவையாகும். கோயில் பராமரிப்புக்கும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படை உதவிகள் செய்தல்-அதாவது. வெண்கல பொருள்களை சுத்தமாக விளக்குதல், தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தல், பூமாலை கட்டுதல் மற்றும் பூஜைக்கு தயார் பண்ணுதல் போன்ற சேவைகளை செய்வதாகும். இப்பணிவான தொண்டு நற்குணங்களை வளர்க்கிறது. நல்லதையே செய்ய எடுக்கப்படும் இவ்வாறான முயற்சிகளை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தலாம். வேலைசெய்யும் இடம், வீடு போன்ற இடங்களிலும் சத்தமின்றி உளப்பூர்வமாக எவ்விதப் புகாரும் இன்றி நன்றியைக்கூட எதிர்பாராமல் சேவை செய்யலாம். இத்தகைய சேவைகள் மறைமுகமான அருளைப் பெறுகின்றன.§

பரந்த பார்வையில் கர்ம யோகம் என்பது ஆன்மீகச் செயலே. அது ஒவ்வொரு செயலையும் தன்னுணர்வோடு, தன்னலமின்றி, மிகச் சிறப்பாக தெய்வத்துக்கு அர்ப்பணமாக செய்யப்படும் சேவையாகும். சற்குரு யோகசுவாமி “எந்த வேலையை நீங்கள் செய்வதாக இருந்தாலும் அவ்வேலையை சிறப்பாகச் செய்யுங்கள். அதுவே ஒரு யோகம்” என்று கூறியுள்ளார். இத்தகைய உணர்வோடு ஆற்றும் சேவைகளும் ஒருவகை வழிபாடாகும். அன்றாடம் நாம் ஆற்றக்கூடிய சாதாரணக் கடமைகளும் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் சக்தி வாய்ந்த சாதனையாகிறது. இந்த யோகம் நம் கவனத்தை ஓரிடத்தில் குவிக்கவும் பலன் மிக்கதாகவும் நிறைவானதாகவும் ஆக்குகிறது. வேலைக்கும் சமய வாழ்வுக்குமிடையே இருக்கும் ஒருவகை போலியான பிரிவினையை அது போக்கிவிடுகிறது. இது குறித்து சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும்போது, “நீங்கள் ஒரு காரியம் ஆற்றும்போது வேறு எதையும் சிந்திக்காமல் அதை ஒரு வழிபாடாக, மிகவும் உயர்ந்த வழிபாடாக ஆற்றுங்கள். உங்கள் முழு வாழ்வையும் தற்சமயத்துக்கு அதற்காகவே அர்ப்பணியுங்கள்,” என்று கூறியுள்ளார்.§

வேலையை வழிபாடாக்கி வெற்றிபெற இதோ சில முக்கிய ஆலோசனைகள்:§

1) உங்கள் வேலையை தொடங்குவதற்கு முன் கணேசப் பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்§

2) பலனை எதிர்பாராமல் தன்னலமின்றி செய்யுங்கள். சேவை செய்வதிலும், உதவி புரிவதிலும், கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.§

3) கடுமையாக உழையுங்கள். ஒத்திப்போடுதல், சோர்வு ஆகிய தன்மைகளையும் குழப்பம் சந்தேகத்தையும் போக்குங்கள்.§

4) பிறரோடு இணக்கத்தைப் பேணுங்கள்.§

5) எடுத்த முயற்சியில் மகிழ்சச்சியாக இருங்கள். அவசர அவசரமாக செய்ய வேண்டியதில்லை.§

6) நீங்கள் செய்த அப்பணியை ஒரு நிறைவான காணிக்கையாக்கி மிகுந்த நேர்த்தியுடன் முடித்துக் காட்டுங்கள். பிறகு நிதானித்து நீங்கள் செய்த பணியை மீண்டும் ஒரு மீள்பார்வை செய்து அதை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்யுங்கள்.§

image§

shutterstock§

இந்தியாவில் சாதுக்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் இரண்டு தொண்டர்கள் மதிய உணவு பரிமாறுகின்றனர். மற்ற தொண்டர்கள் பின்னால் சமையல் அறையில் காலை முழுதும் உணவு தயாரித்து உதவினர். பிறருக்கு தன்னலமற்ற உதவி செய்யும் இச்சேவை கர்மயோகத்தின் ஒரு பகுதியாகும்.§

குருதேவர்: இவ்வாரம் வெளியே சென்று உங்களின் கனிவான எண்ணத்தில் ஒளிபடரச்செய்து அந்த எண்ணத்தை செயலுருவம் பெறச்செய்து யாராவது ஒருவருவருக்கு ஒரு நன்மை செய்யுங்கள். அவர்களின் பாரம் குறைய கொஞ்சம் உதவி செய்யலாம். அதனால் நீங்கள் அறியாமலேயே உங்களைக் குடைந்து கொண்டிருந்த பிரச்சினையும் தீர்ந்து போகலாம். பிறர்க்கு உதவி செய்வதன்மூலம் உங்கள் சொந்த மனக் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் அழுக்கை நீக்குகிறீர்கள். இதை நாம் கர்ம யோகம் என்கிறோம்§