சிவனை அடையும் வழி

65§

நாம் யாத்திரையை எப்படி மேற்கொள்கிறோம்?§

ண்டுதோறும் யாத்திரைக்கு போகும் முன்னர் நாம் நம்மை அகத்திலும் புறத்திலும் தயார்படுத்திக் கொள்கிறோம். முதலில் நாம் எங்கே போகப் போகிறோம், எப்படிப் போகப் போகிறோம், எவ்வளவு நாள் வீட்டை விட்டுச் செல்லவிருக்கிறோம் என்று முடிவெடுக்க வேண்டும். ஆன்மீக உணர்வைத் தூண்டும் ஒரு திருக்கோயிலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அது உஜ்ஜயினில் இருக்கும் மிகவும் புகழ்வாய்ந்த மகாகாளீஸ்வரர் கோயிலாக இருக்கலாம். அல்லது வாரனாசியில் இருக்கும் காசி விசுவநாதர் கோயிலாக இருக்கலாம். இரண்டுமே மாநகர் மத்தியில் அமைந்துள்ளவை. அல்லது தென்னிந்தியக் கோடியில் பாவம் போக்கும் கிணறுகள் அமைந்த ராமேஸ்வரக் கோயிலாக இருக்கலாம். அல்லது மிகவும் சிரமப்பட்டு போகக்கூடிய நேப்பாளில் இருக்கும் திருக்கயிலாய மலையாக இருக்கலாம் அல்லது காஷ்மீரில் இருக்கும் அமர்னாத் குகையாக இருக்கலாம். விரும்பினால் ஐரோப்பா, அ௳மரிக்க நாடுகள், மலேசியா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள ஒரு புனிதத் தலத்தையும் நாம் தேர்ந்தெடுக்கலாம். பிறகு நாம் வீட்டில் இருக்கமாட்டோம் என்பதால் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தகுந்த ஏற்பாடுகளைச் செய்கிறோம். இது நம் மனத்தை யாத்திரைமீது மட்டும் பதிய வைக்க உதவும். அகமுகமாகவும் நாம் மனத்தை தயார் படுத்திக்கொள்கிறோம்.§

யாத்திரைக்குப் புறப்படுமுன் சில பக்தர்கள் ஒரு வேளை உணவு மட்டுமே உட்கொள்வோம் என ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ விரதம் கடைப்பிடிப்பர். மற்றும் சிலர் கூடுதல் சாதனாக்கள் செய்து தினமும் கோயிலுக்குச் சென்று வருவர். பயணம் செல்லும் யாவரும் தத்தம் சற்குருவிடம் ஆசீர்வாதம் பெறுகின்றனர். நாம் யாத்திரை செல்லும் திருத்தலத்தை அடைந்ததும் முழுமூச்சாக வழிபாட்டில் ஈடுபடுவதுடன் இயலுமானால் எல்லா பூசைகளிலும் கலந்து கொள்கிறோம். அதன்பின் ஆழமாக தியானிக்கிறோம். நமது அக்கறைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள்—அனைத்தையும் தெய்வத்தின் காலடியில் வைத்துவிடுகிறோம். நாம் வீட்டுக்குத் திரும்பும்போது உற்சாகத்தோடும் மனநிறைவோடும் திரும்புகிறோம். இதுவே உண்மையான யாத்திரை.§

எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட ஓய்வாக விடுப்பில் செல்ல வேண்டிய தேவை இந்துக்களாகிய நமக்கு இல்லை. நடுத்தரமான துரிதமற்ற வாழ்க்கைனய நாம் வாழ்கிறோம். நமது பிரச்சினைகளையும் பிரார்த்தனைகளையும் இறைவன் திருவடிக்கு எடுத்துச் செல்லும் ஒரு விஷேசமான நம்பிக்கையூட்டும் தினமாக நாம் யாத்திரையைப் பார்க்கிறோம். யாத்திரையில் நாம் பெறும் அருளாசி நமக்கு புத்துயுரூட்டி நமது அன்றாட வாழ்வை மேலும் சிறப்பாக நடத்த உதவும் என்று நமக்கு விளங்குகிறது. தெய்வத்துடன் மனதுக்கிசைந்த முறையில் உறவாடவும், யாத்திரை தலத்தில் தெய்வத்தையே நேரில் தரிசிக்கும் வாய்ப்பாகவும் நாம் யாத்திரையை நோக்குகிறோம். இத்தகைய ஆன்மிக தருணங்கள் பின்வரும் பல ஆண்டுகளில் நமக்குள்ளே வளர்ந்து கொண்டு வரும்.§

image§

shutterstock§

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் முருடேஷ்வரா என்ற இடத்தில் கடற்கரையோரம் வீற்றிருக்கும் உலகின் இரண்டாவது சிவன் சிலையை அருகில் காண யாத்ரீகர்கள் படியேறிச் செல்கின்றனர். ஏறிச்செல்லும் ஒவ்வொரு படியும் அவர்களை சிவனுக்கு அருகே கொண்டு செல்கிறது§

குருதேவர்: வெவ்வேறு கோயில்கள் வெவ்வேறு பிரார்த்தனைகளை—அதாவது பண உதவி கேட்கும் பிரார்த்தனை அல்லது நல்ல வாழ்க்கை துணை கேட்டு அல்லது நோய் அகலக் கேட்டு அல்லது உயர் ஆன்மஞானக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு கேட்டு அல்லது யோகப் பயிற்சியில் உதவி கேட்டு அல்லது பக்தியையும் அன்பையும் பெருக்க உதவி கேட்டும்—இப்படி பல்வேறு பிரார்த்தனைகளை பல்வேறு கோயில்கள் நிறைவேற்றி புகழ்பெறுகின்றன.§