Loving Gaṇeśa: Hinduism’s Endearing Elephant-Faced God

Image§

Image§

Image§

In Praise of Pillaiyar§

Pillaiyar Stutiḥ§

पिल्लैयर् र्स्तुितः§

A Collection of Tamil Devotional Poetry Rendered
Into English by Sangaratna Dr. S.M. Ponniah
§

ImageANGING FROM TIRUMULAR TO KASSIAPPA SIVACHARYA, FIFTEEN DIFferent devotees have composed this anthology of Tamil hymns in praise of Gaṇapati, the Lord of Hosts, popularly known as Pillaiyar. They are sung daily in Hindu homes and temples where Tamil is spoken. An attempt has been made to give their meanings in English, but they need to be sung in prescribed Tamil tunes to attain maximum effect. In accordance with Āgamic tradition, all cultural concerts, literary endeavors and religious rites and rituals must begin with an invocatory verse seeking the grace of the Lord Gaṇapati to ensure success. The hymns of invocation found here help strengthen the belief that through love and devotion and ultimate surrender to God, man can attain moksha.§

TIRUMANTIRAM, INVOCATION§

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை§

இந்து இளம்பிறை போலும் எயிற்றனை§

நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்§

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.§

திருமூலர் திருமந்திரம்§

Implant in your intelligence the worshipful feet of Umāśaṅkara’s son, the first-born, five-handed, elephant-faced, elegant One with twin white tusks curved like the crescent-moon. He is wisdom’s embodiment.§

TIRUMANTIRAM§

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை§

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்§

கணபதி என்றிடக் கரும மாதலால்§

கணபதி என்றிடக் கரும மில்லையே.§

If you but utter Gaṇapati, our Lord’s name, the gaunt karmic ills that bind us fast will become loose; the Lord of Death himself will in submission raise his hands in worship. Therefore, dutifully utter daily Gaṇapati’s gracious name which will, without fail, your karmic bonds sever.§

TIRUJNANA SAMBANDAR’S TIRUKKATAIKKAPPU§

பிடியத னுருவுமை கொளமிகு கரியது§

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்§

கடி கண பதிவர அருளினன் மிகுகொடை§

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.§

The bountiful Being who reigns over Vallivalam’s shrine, united with Umā-Maheśvarī, the Mother of the Universe, manifesting in manifold forms, bestowed upon His devotees the elephant-visaged God in order to remove their obstacles and impediments and to confer His grace upon all who follow the eternal Śaivite path.§

ARATAMPATIYA PERUNTEVANAR§

ஓத வினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்§

காதற் பொருள் அனைத்தும் கைகூடும் – சீதப்§

பனிக் கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்§

தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!§

Those who worship the redeeming feet of the single-tusked, elephant-visaged Lord of the heavenly hosts, who recorded with His tusk the Mahābhārata battle upon the snow-capped hills of the Himālayan mountains, will gain great glory, attain their hearts’ desires and become freed from the
fetters of karma.
§

SAINT AUVAIYAR§

வாக்குண்டாம், நல்லமனமுண்டாம், மாமலராள்§

நோக்குண்டாம், மேனி நுடங்காது பூ க்கொண்டு§

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்§

தப்பாமல் சார்வார் தமக்கு.§

Those who worship without fail the grace-granting feet of Gaṇeśa with flowers fresh and fragrant shall acquire eloquence of speech and fruitful friendship—besides gaining the graceful glance of the lotus-seated Lakshmī’s eyes, which will ensure every human happiness on Earth.§

SAINT AUVAIYAR§

பாலும் தெளிதேனும், பாகும் பருப்பு மிவை§

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்§

துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ எனக்குச்§

சங்கத்தமிழ் மூன்றுந் தா§

I shall offer to you, O Lord, the delicacies four—fresh milk, pure honey, cane sugar with cereals mixed—O elephant-visaged, bright-jewelled Lord of the Universe, if you will enrich me with the triple-treasured Tamil tongue acclaimed by the ancient academies.§

KABILADEVAR’S IRATTAI MANI MALAI§

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்§

விநாயகனே வேட்கை தணிவிப்பான், விநாயகனே§

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்§

தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.§

Vināyaka cuts asunder the very roots of all human suffering and sorrow. Vināyaka destroys all desires. Vināyaka is Lord indeed of heaven and Earth. Surrender, therefore, unto Him with hearts that melt with devotion.§

திருவாக்கும், செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்§

பெருவாக்கும், பீடும் பெருக்கும் உருவாக்கும்§

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்§

காதலால் கூப்புவர் தம்கை.§

Your words and deeds shall with success meet. Eloquence and eminence shall be your rewards. Therefore, worship Him even as the celestials raise their hands high in adoration and love of the elephant-visaged Vināyaka, the matchless Lord.§

கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப§

பணங்கொண்ட பாந்தட் சடைமேல் – மணங்கொண்ட§

தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்த§

போதகத்தின் தாள் பணியப் போம்.§

Your burdensome bonds of karma will disintegrate and dissolve if you but worship the grace-granting feet of Gaṇapati, the Lord of Hosts bestowed upon us all by the triple-eyed Lord Śiva, whose ruddy locks are entwined by a serpent strand and whose head is adorned by honey rich, bright golden konrai blooms which fill the air around with their fragrance.§

NAKKIRADEVA NAYANAR’S VINAYAKA AHAVAL§

வெண்ணீ றணியும் விமலன் புதல்வா§

பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே§

அரிதிரு மருகா அறுமுகன் துணைவா§

கரிமுக வாரணக் கணபதி சரணம்§

குருவே சரணம் குணமே சரணம்§

பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்§

கண்ணே மணியே கதியே சரணம்§

விண்ணே யொளியே வேந்தே சரணம்.§

O first-born son of Śiva who adorns His head with sacred ashes, beloved of Umāsundarī, Kumāran’s companion, beloved of Hari! O dark-hued, elephant-visaged, elegant Lord of heavenly hosts, my divine guru, unto you, O Lord, I surrender myself. O matchless Lord! Embodiment of wisdom and all excellence—O portly Gaṇapati, unto your golden feet I surrender myself. O precious jewel bright! O heavenly light! O Lord of the universe, I surrender unto you.§

NAMBI ANDAR NAMBI§

தந்தையும் நீயே தாயும் நீயே§

எமரும் நீயே ஈசனும் நீயே§

போத ஞானப் பொருளும் நீயே§

நாதமும் நீயே நான்மறை நீயே§

அரியும் நீயே அயனும் நீயே§

திரிபுர தகனஞ் செய்தவன் நீயே§

சத்தியும் நீயே சதாசிவம் நீயே§

புத்தியும் நீயே புராந்தகன் நீயே§

பத்தியும் நீயே பந்தமும் நீயே§

முத்தியும் நீயே மோஷமும் நீயே§

ஏகமும் நீயே என்னுயிர் நீயே§

தேகமும் நீயே தேகியும் நீயே§

உன்னரு ளன்றி யுயிர்த்துணை காணேன்§

பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்.§

You are indeed my father and mother both, my kith and kin—the infinite Lord, wisdom’s embodiment, substance of all sound and the Vedas four. You are indeed Hari and the lotus-seated Brahma, Śakti and Sadāśiva, the triune beings. The dauntless destroyer of the roving cities three, that dared to defy You! You are the Lord of heaven and Earth, devotion and its binding force, moksha and its meaning. O matchless Lord! My life is Yours, and You are my sole support. But for Your grace, friends I’ve none. O Indwelling Lord, I’ll speak only of Your glory!§

NAMBI ANDAR NAMBI§

என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்§

தன்னை நினையத் தருகின்றான் – புன்னை§

விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்§

அரசு மகிழ் அத்தி முகத்தான்.§

The triple-eyed Pillaiyar, enshrined under the shade of the flower-filled punnai tree in splendid Naraiyur Park, thinking of me, enslaved me, removed all my ills and impediments and conferred upon me His infinite grace. My thoughts are of Him and none else on Earth.§

SEKKILAR’S PERIYAPURANAM§

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்§

நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்§

தடக்கை ஐந்துடைத் தாள்செவி நீள்முடிக்§

கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.§

Before I venture to narrate in vivid Tamil verse the moving great story of the ennobling lives of the saintly sixty-three enslaved by the Lord Śiva, I shall first retain in my mind the guiding hand of the dark-hued, high-crowned, five-handed Gaṇapati, in order that we may all gain by His divine grace the enriching rewards of this endeavor.§

UMAPATI SIVAM§

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்§

பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க§

ஞானமத, ஐந்துகர மூன்றுவிழி, நால்வாய்§

ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.§

In order that, O man, the heavens and Earth may prosper and thrive, the Vedic ways endure and the sacred Tamil tongue be renowned the world over, worship without fail the sagacious, five-handed, triple-eyed, elephant-visaged Vināyaka of victory.§

KUMARA GURUPARAR§

சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்§

பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த்§

தார்கொண்ட நற்றிருப்பாட் டீரைந்தும் ஞாலமிசைத்§

தொண்டரெலாங் கற்றிருப்பார் மேலாங் கதி.§

Those who sing with devotion this garland of twice-five hymns in praise of the elephant enshrined at famed Varāṇasī washed by the sacred Gaṅgā—known by His devotees as Ḍhuṇḍhirāja Gaṇapati, the five-handed Lord—shall surely attain in time the heavenly abode above.§

KASSIYAPPA SIVACHARYA’S KANDAPURAIAM§

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற§

எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்§

கண்ணுதல் உடையதோர் களிற்றுமாமுகப்§

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.§

In order that your birth becomes free of its fetter and you attain with ease human perfection on Earth, worship, O man, with devotion true the flower-like feet of the triple-eyed, elephant-visaged divine guru, Mahāgaṇapati, who grants without fail all your wishes.§

ARUNAGIRINATHAR’S TIRUPUGAL§

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி§

ஒண் கடலிற் றேனமுதத் துணிர்வூறி§

இன்பரசத் தேபருகிப் பலகாலும்§

என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே§

தம்பிதனக் காகவனத் தனை வோனே§

தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே§

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே§

ஐந்து கரத்தானை முகப் பெருமானே.§

O five-handed Lord! By Your innate wisdom You gained the coveted fruit from Umāśaṅkara’s hand. O matchless Lord who relishes the nectar churned by the celestials out of the shimmering sea, did You not venture forth Your beloved brother to help wed the doe-eyed Valli upon the Kuruñchi hill? O refuge of Your devotees! My labored life on Earth you must support and sustain. Enslave me by Your grace.§

ARUNAGIRINATHAR’S TIRUPUGAL§

கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி§

கப்பிய கரிமுகன் அடிபேணிக்§

கற்றிடும டியவர் புத்தியி லுறைபவ§

கற்பக மெனவினை கடிதேகும்§

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்§

மற்பொரு திரள்புய மதயானை§

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை§

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே§

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்§

முற்பட எழுதிய முதல்வோனே§

முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்§

அச்சது பொடிசெய்த அதிதீரா§

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்§

அப்புன மதனிடை இபமாகி§

அக்குற மகளுட னச்சிறு முருகனை§

அக்கண மணமருள் பெருமாளே.§

I’ll seek in worship the feet of the one who dwells within the minds of the learned—one whose firm hand is filled with the pomegranate fruit and delicacies sweet.§

I’ll offer flowers fresh for the one who destroys the inherited karmic ills of all His devotees—the broad-shouldered being born of Umāśaṅkara whose head is adorned by the crescent moon and the konrai’s bloom.§

I’ll offer fragrant flowers unto the redeeming feet of portly Gaṇapati, born of Gaurīśaṅkara, the first-born, who did inscribe with His own tusk the Mahābhārata epic.§

Upon the Himālayan peaks I’ll worship true the redeeming feet of the valiant one who dared to break the chariot wheel of the three-eyed Lord, whose mere laughter destroyed the roving cities three of the adharmic asuras.§

I’ll worship the feet of the wise being who, by His timely intervention on Bālasubrahmaṇya’s behalf, performed the marriage rites of youthful Kumaran and the doe-eyed Valli upon the Kuruñchi Hill.§

ABHIRAMI PATTAR’S ABHIRAMI ANTATI§

தாரமர் கொன்றையும் சண்பக§

மாலையும் சாத்தும் தில்லை§

ஊரர்தம் பாகத்து உமைமைந்த§

னேஉல(கு) ஏழும்பெற்ற§

சீரபி ராமி அந் தாதிஎப்§

போதும்என் சிந்தையுள்ளே§

காரமர் மேனிக் கணபதி§

யேநிற்கக் கட்டுரையே.§

O dark-hued Gaṇapati, son of Umāsundarī who mothered the seven worlds and is ensconced in the Lord of Tillai, He who is ever adorned by bright konrai blooms and champaka garlands. Dwell You must, O Lord, within my mind and being as I sing of Abhirami, the paragon of beauty, in this anthology of a hundred hymns by Your benign grace.§

RAMALINGA ADIGAL’S TIRU ARUTPA§

முன்னவனே யானைமுகத்தவனே, முத்தி நலம்§

சொன்னவனே, தூய்மைச் சுகத்தவனே மன்னவனே§

சிற்பரனே, ஐங்கரனே, செஞ்சடையஞ் சேகரனே§

தற்பரனே நின்தாள் சரண்.§

O first-born, elephant-visaged harbinger for good tidings who guides mankind unto the attainment of mukti; the immanent Lord, five-handed son of Śiva of the sacred tresses, unto Your feet I surrender myself.§

FROM SENTHANAR’S TIRUPPALLANDU§

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி§

எங்கும் குழாம் பெருகி§

விழல்ஒலி விண்ணளவும் சென்று விம்மி§

மிகு திருவாரூரின்§

மழவிடையார்க்கு வழிவழி ஆளாய்§

மனஞ்செய் குடிப்பிறந்த§

பழவடியாரொடுங் கூடி எம்மானுக்கே§

பல்லாண்டு கூறுதுமே.§

Your devotees, O Lord, are gathered in groups to dance in joy and sing Your praise. The music of the flute and the vina’s string resound in the heavens in praise of You who rides the white bull and rules over Tiru-arur. We’ve come to join Your dear devotees who’ve enslaved themselves for succeeding generations. We are gathered to sing Your eternal glory.§

SEKKILAR’S PERIYAPURANAM§

ஐந்து பேரறிவுங் கண்களே§

கொள்ள வளப்பருங் கரணங்கணாற்கும்§

சிந்தையேயாக குணமொரு மூன்றுந்§

திருந்து சாத்து விகமேயாக§

இந்து வாழ் சடையானாடு மாணந்த வெல்லையில்§

தனிப் பெருங்கூத்தின் வந்து பேரின்ப§

வெள்ளத்துள் திளைத்து மாறிலாமகிழ்ச்சியில்§

மலர்ந்தார்.§

The throbbing senses five become by the eyes absorbed, the intrinsic organs four become in the mind absorbed and the innate guṇas three become transformed into one sattvic state for those who behold the singular dance of joy by Him who adorns His tresses long with the crescent moon, delighting in everlasting bliss, immersed in an ocean of love.§

BENEDICTORY VERSE BY KASSIAPPA SIVACHARYA§

வான் முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன்§

கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க§

நான் மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க§

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்.§

May the rain-rich clouds descend without fail and enrich this earth. May the monarchs rule this resplendent earth with unfailing justice. May all living beings of this enduring earth live without want. May all righteous deeds, governed by the Vedas four, prevail upon this earth. May the sacrificial fires and deeds of penance grow in abundance. May the glorious Śaivite truths become renowned the world over.§

Image§