Sutras in Tamil

சூத்திரம் 16

உண்மையை நாடுவோர் மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது அன்புடனும் தன்னலம் பாராமலும் எதுவித பிரதியுபகாரம் கருதாமலும் உதவி செய்யவேண்டும். தம்மிடமில்லாதவை பற்றிக் குறைகூறாமல் அவர்கள் தம்மிடமுள்ளவை பற்றி நிரந்தர நன்றியுணர்வோடு வாழ்தல் வேண்டும்.§

சூத்திரம் 17

உண்மையை நாடுவோர் அனைவரும் நேர்மை, மகிழ்ச்சி, அடக்கம், இயற்கை பண்பு ஆகிய குணங்கள் கொண்டவர்கள். கோபம், பயம், பொறாமை, மற்றவரை இகழ்தல் ஆகியவற்றைத் தம்மிடமிருந்து அகற்றிவிடுவதால், அவர்கள் முகத்தில் ஆன்மாவின் அன்பு கலந்த கருணை சுடர்விட்டுப் பிராகாசிக்கும்.§

சூத்திரம் 18

உண்மையை நாடுவோர் சிவபெருமானோடு அவரின் பரம இரகசியத்திற்கருகில் வாழ்வார்கள். மற்றவர்கள் பெயர், புகழ், பெண், பொன் எனத் தேடியலையும் போது இவர்கள் தம்முள் தூய வெள்ளொளியைத் தேடி, சாந்தத்தில் தஞ்சமடைந்து, உண்மையைத் தம் உள்ளங்கையில் வைத்திருப்பார்கள்.§

சூத்திரம் 19

உண்மையை நாடுவோர் மலையுச்சிக் காட்சியாக இவ்வுலக வாழ்க்கை ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஒரு சந்தர்ப்பம் எனக் கொள்வர். மிருகவுணர்வாலும் பகுத்தறிவாலும் கவரப்பட்டு அவர்கள் இந்த ஞானத்தை ஒரு போதும் இழக்க மாட்டார்கள்.§

சூத்திரம் 20

உண்மையை நாடுவோர் அனைவரும் சிந்தனை, ஆசை ஆகியவற்றின் மாபெரும் சக்தியைத் தெரிந்து வைத்திருப்பதால் அவைகளை விவேகமாகத் தெரிந்தெடுப்பார்கள். கடவுளை அறிய வேண்டும். §