Sutras in Tamil

சூத்திரம் 11

உண்மையை நாடுவோர் அனைவரும் இப்பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தாமாகவே கடுமையான கடமைகளைத் தம்முள் முன் நிறுத்தி, சமயம், குடும்பம், சமுதாயம், இவ்வுலகம் ஆகியவற்றுக்கு தாம் ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து தவறமாட்டார்கள். ஆம் அவர்கள் சிங்கத்தின் மனவுறுதி படைத்தவர்கள். §

சூத்திரம் 12

உண்மையை நாடுவோர் அனைவரும் தாம் ஈடுபடும் எந்தச் செயலிலும் சிறந்து விளங்குவதோடு, மிஞ்சி நின்று ஒரு சிறந்த மாற்றத்தையும் காண்பிக்க வேண்டும். ஆயினும் அவர்கள் சச்சரவும் கீழ்மையுமுடைய வென்றவர், தோற்றவர் என்ற போட்டி மனப்பான்மையிலிருந்து விலகி நிற்பர்.§

சூத்திரம் 13

உண்மையை நாடுவோர் பஞ்ச நித்திய கர்மங்களாகிய நல்லொழுக்கம், தினசரி வழிபாடு, படித்தல், உற்சவங்கள், சமஸ்காரங்கள், வருடாந்த யாத்திரை ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் மிகுந்த மனவுறுதியும் தெளிந்த மனச்சாட்சியும் உடையவராதலால் தம் பாதையிலிருந்து விலகமாட்டர்கள்.§

சூத்திரம் 14

உண்மையை நாடுவோர் கற்பதில் ஆர்வம் கொள்வர். தம் கடின உழைப்பால் தம் பிள்ளை களின் இளம்பிராயத்தில் அவர்களின் ஆன்மீகக் கல்விக்கும், உலகப் படிப்புக்கும் தாமே வழிகாட்டியாக இருப்பர். நான் போதிய அளவு படித்து விட்டேன் என அவர்கள் வெளிப்படையாகக் கூறவே கூடாது.§

சூத்திரம் 15

உண்மையை நாடுவோர் எங்கிருந்தாலும் சமாதானத்தின் கருவியாய் இருந்து, ஒற்றுமையில்லா இடத்தில் ஒற்றுமையைப் போதித்தும் மற்றவர்களால் ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாத பட்சத்தில் உடன்படிக்கைக்கு வழியும் காண்பார்கள். ஆம் அவர்கள் அனைவரும் சமாதானம் செய்பவர்கள்.§