Sutras in Tamil

சூத்திரம் 6

உண்மையை நாடுவோர் அனைவரும் தினசரி தியானம், உள்ளொளி தேடல், வாழ்க்கை அனுபவப் பாடங்கள், தாம் ஓர் எல்லையற்ற அறிவு நுட்பம் என அறிதல் ஆகியவற்றின் மூலம் தெய்வீகத் தன்மையை அனுசரிப்பரே அல்லாமல் உடல், உணர்ச்சி, அறிவால் அல்ல.§

சூத்திரம் 7

உண்மையை நாடுவோர் அனைத்து அனுபவங்களையும் அவை கொடூரமாய், துன்பமாய் இருப்பினும் எதுவித குறையும் கூறாது தமது சொந்த கர்மவினைகள் என ஏற்பர். எது எப்படியுள்ளதோ அதை அப்படியே ஏற்பதோடல்லாமல் அவை தமக்கு வேண்டியபடி இருக்க வேண்டும் என அவர்கள் கருதுவதில்லை, இதுவே அவர்களின் சரணடையும் பலம்.§

சூத்திரம் 8

உண்மையை நாடுவோர் அனைவரும் தம்மைக் கட்டுப்படுத்தும் கடந்த கால உணர்வுகளான எதிர்மறைப்பற்று, வேதனை, அநீதி, பயம், வருத்தங்களைக் கைவிட்டு வாழ்க்கையெனும் நதியின் வழியே சென்று உறுதியுடன் எல்லையற்ற நிகழ்காலத்தில் வாழ்வர்.§

சூத்திரம் 9

உண்மையை நாடுவோர் அனைவரும் எந்த முயற்சியில் ஈடுபடினும் நிதானமாக யோசித்து அதன் பின்னரே கவனமாய்ச் செயலில் ஈடுபடுவர். தெளிந்த நோக்கம், விவேகத்திட்டம், உறுதி, உந்துகை ஆகியவற்றுடன் செயல்ப்படுவதன் மூலம் எல்லாச் செயல்களிலும் அவர்கள் வெற்றியடைவார்கள்.§

சூத்திரம் 10

உண்மையை நாடுவோர் அனைவரும் தம் அசைக்க முடியாத மனோபலத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆன்மீக வழியில் உறுதியுடன் நிலைத்து நிற்பர். உலோகாயுத உலகின் சக்திகளை நேர்மையான முறையில் வழிநடத்துவரே அல்லாமல் அவற்றால் அசைக்கப்படவோ, தாக்கப்படவோ மாட்டார்கள்.§