Sutras in Tamil

சூத்திரம் 76

சிவனை நேசிப்பவர்கள் முற்றும் பிரமாதமான ஒரு வீட்டுப் பூஜை அறையை திருவடி, சிவலிங்கம், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், முருகன், கனேசர் ஆகியோரை வழிபடுவதற்க்கென்று அர்ப்பணிக்க வேண்டும். இதுவே வீட்டின் மிக அழகிய அறையாகும்.§

சூத்திரம் 77

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் சைவ ஆத்மார்த்த பூஜையைத் தமது குருவின் ஆசியுடன் தம் வீட்டுப் பூஜை அறையில் மட்டும் செய்யலாம் முறையாகவும் பார்ம்பரியமாகவும் தீட்சை அளிக்கப் பட்டிருந்தாலொழிய அவர்கள் பரார்த்த பூஜையை கற்கவோ, கற்பிக்கவோ செய்யவோ கூடாது. §

சூத்திரம் 78

சிவனை நேசிப்பவர்கள் அடிக்கடி யாத்திரை செய்வதற்கும், வழிபடுவதற்கும், ஆன்மீக பாதுகாப்பிற்கும் எங்கெல்லாம் கனேசர், முருகன், சிவன் கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் அவர்கள் குடியேறுவர். இப் புனித தலங்களைச் சென்றடைய ஒருநாளுக்கு மேல் பயணம் செய்யும் தொலைவில் அவர்கள் வசிக்கக் கூடாது.§

சூத்திரம் 79

சிவனை நேசிப்பவர்கள் இத்தலங்களைப் புனிதமாகப் பேணி ஒருமுறையேனும் யாத்திரை செய்ய வேண்டும். சிவனின் குவை இறைவன் கோயில், இமயத்திலும் கங்கைக் கரையிலுமுள்ள அவர் தலங்கள், அவரின் பஞ்ச பூதத்தலங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில்.§

சூத்திரம் 80

சிவனை நேசிப்பவர்கள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும், கனேசரின் ஏராளமான கோயில்கள், தெருக்கரைக் கோயில்கள் குறிப்பாகக் கும்பிளாவளை, தமது பரம்பரைச் சமாதி ஆலயங்கள்கள் ஆகியவற்றுக்கு யாத்திரை செய்து ஆழ்ந்து வணங்குதல் வேண்டும்.§