Sutras in Tamil

சூத்திரம் 71

சரியை நல்லொழுக்கத்துடன் வாழுதல், கிரியை கோயில் வழிபாடு செய்தல், யோகம் வாழும் சற்குருவின் கருணையால் பரசிவத்திற்கு வழிகாட்டும் யோக அனுட்டானம் ஆகிய மூன்றும் ஞான நிலையை எய்துவதற்கு மிகவும் முக்கியம் என சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் நம்புவர்.§

சூத்திரம் 72

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் இயல்பாகவே தீமை என எதுவும் இல்லை என்று நம்புவர். அறியாமை தன் தீமையின் மூலமாகக் காட்சிதருவதைத் தவிர, தீமைக்கு ஆதாரமே இல்லை. ஆம் உண்மையில் கருணயுடையோர் ஒரு பொல்லாப்பும் இல்லை என்று அறிவர். எல்லாம் சிவன் செயல்.§

சூத்திரம் 73

மூன்று உலகங்களும் ஒருங்கிணைந்து ஒன்றாகச் செயல்படுவதே சமயம் எனவும் மூன்று உலகத்தில் உள்ளவர்களோடும் தொடர்பு கொள்ளக் கூடிய கோயில் வழிபாட்டின் மூலம் இந்த இணக்கத்தை உருவாக்க முடியும் என்றும் சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் நம்புவர்.§

சூத்திரம் 74

பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்னும் புனித ஐந்தெழுத்துக்களையும் முதன்மையான, மிகமுக்கியமான மந்திரம் என சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் நம்புவர். நமசிவாயவின் இரகசியம் அதனைச் சரியான உதடுகள் வாயிலாகச் சரியான நேரத்தில் கேட்ப்பது தான்.§

சூத்திரம் 75

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் அன்பே சிவமயம் சத்தியமே பரசிவம் என்பதை நம்பிக்கை உறுதி மொழியாகக் கொள்வர். சிவபெருமான் உள்ளார்ந்த அன்பாகவும் எல்லாம் கடந்த உண்மையாகவும் விளங்குகின்றார். இதுவே சைவ சித்தாந்த உண்மையயின் பூரண சாரமாகும்.§