Sutras in Tamil

சூத்திரம் 66

எந்த ஒரு வழிபாடு அல்லது செயலைத் தொடங்கு முன்பும் நாம் முதற்கண் பணிந்து வணங்க வேண்டியவர் சிவசக்த்தி பாலகனாகிய மகாதேவர் கனேசப் பெருமான் என சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவர். அவரது ஆட்சி இரக்கம் மிகுந்தது. நீதியே அவரது மனமாகும்.§

சூத்திரம் 67

அறியாமைத் தளைகளை அகற்றும் கருணையாகிய வேலினைக் கொண்ட சிவசக்தி மைந்தனாகிய மகாதேவர் முருகப் பெருமானை சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் நம்புவர். யோகி, பத்மாசனமிட்டுக் கொண்டு முருகனைப் பூசிக்க, அவரது மனம் சாந்தம் அடைகிறது.§

சூத்திரம் 68

ஒவ்வொரு ஆன்மாவும் சிவபெருமானால் படைக்கப் பெற்று அவருக்கு இணையனது எனவும் அவரது கருணையின் மூலம் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயை ஆகியவை அகற்றப்படும் போது எல்லா ஆன்மாக்களும் இந்த இணையான தன்மையை உணர முடியும் என சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவர்.§

சூத்திரம் 69

ஆன்மாக்கள் தூல சரீரம் எடுத்துக் கொள்ளூம் பூலோகம், ஆன்மாக்கள் சூக்கும் சரீரம் எடுத்துக் கொள்ளும் அந்தர் லோகம், ஆன்மாக்கள் தமக்குரிய சுய ஒளி வடிவில் திகழும் சிவலோகம் என மூன்று உலகங்கள் மேல் சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.§

சூத்திரம் 70

ஒருவன் செய்த அனைத்துச் செயல்களின் விளைவையும் அவனே அனுபவித்தாக வேண்டும் எனவும், தனது கர்மாக்கள் எல்லாம் கழிந்து மோட்சம், வீடுபேறு கிட்டும் வரையிலும் ஒவ்வொரு ஆன்மாவும் தொடர்ந்து மறுபிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் எனவும் கூறும் கர்ம விதியை சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவர்.§