Sutras in Tamil

சூத்திரம் 61

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் தமது சமயத்தின் அடிப்படைத் தத்துவம் சித்தாந்த வேதாந்த ஐக்கியத்தில் தான் இருக்கின்றது என்றெண்ணிப் பெருமையடைய வேண்டும். இந்த அத்வைத துவைத மறை பொருள் நடனம் அத்வைத ஈஸ்வரவாதம் என்றழைக்கப்படும்.§

சூத்திரம் 62

அத்வைத ஈஸ்வரவாதம், அத்வைத சித்தாந்தம், சுத்த சைவ சித்தாந்தம் எனப் பல நாமங்களில் அழைக்கப்படும் தம் மதக் கோட்பாடுகளைச் சிவனை நேசிப்பவர்கள் படித்துக் கொண்டு அவற்றை இவ்வுலக மக்களுக்கு ஆர்வத்துடன் போதித்துக் கொண்டு வாழ்தல் வேண்டும்.§

சூத்திரம் 63

காலம், உருவம், இடம் இவற்றைக் கடந்த பரசிவமாகிய முழுமுதற் கடவுள் சிவபெருமான் என சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவர். யோகி மௌனமாகக் கூறுவார் இது அல்ல அது அல்ல என்று. ஆம், இப்படிப்பட்ட பெருமை மிக்க கடவுள் சிவபெருமான். §

சூத்திரம் 64

தனது உள்ளார்ந்த அன்பு நிலையில் பராசக்த்தியாக எல்லா வடிவங்களோடும் வெளிப்படும் ஆதாரப்பொருள் அல்லது மூலவஸ்த்துவமாகவும் தூய உணர்வாகவும் திகழும் சிவபெருமானே கடவுள் என சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவர். இது சத், சித், ஆனந்தம்.§

சூத்திரம் 65

தனது உள்ளார்ந்த நிலையில் பரமான்மாவாக மேலான மகாதேவராக, சிவ சக்தியாக விளங்கும் அனைத்தையும் படைப்பவர், காப்பவர், அழிப்பவராகத் திகழுக்கும் சிவபெருமானே கடவுள் என சிவனை நேசிப்பவர்கள் யாவரும் நம்புவார். அவர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்.§