Sutras in Tamil

சூத்திரம் 56

தமது பரம்பரையின் அடிப்படைப் புனித நூல்களின் அதிகாரத்துவம் சைவ ஆகமங்களிலிருந்தும் உபநிடதங்கள் உட்பட நான்கு உயர்ந்த வேதங்களிலிருந்தும் பெறப்பட்டது என்பதை சிவனை நேசிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அவர்களது பாரம்பரியம் வேத ஆகம பாரம்பரியமாகும்.§

சூத்திரம் 57

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் சைவ இந்து சமயத்தின் புனித விவிலிய ஏடுகளென ரிஷி திருமூலரின் திருமந்திரம் அனுபூதிமான் திருவள்ளுவரின் திருக்குறள் இரண்டையும் தெய்வீக புனித நூல்களாகப் போற்றி வணங்கி அவை கூறும் அறிவுரைகளூக்கெதிராகச் செயல்படக்கூடாது.§

சூத்திரம் 58

சிவனை நேசிப்பவர்கள் தமிழ் சைவ அனுபூதிமான்களின் அரிய பாடல்களைத் தெய்வீக நூல்களாகப் போற்றுவர். மிகமுக்கியமாக சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், தாயுமானவர் ஆகியோரின் பாடல்களையும் பதஞ்சலியின் நாத யோக சூத்திரங்களையும் போற்றி வணங்குதல் வேண்டும்.§

சூத்திரம் 59

நந்திநாத அடியவர்கள் அனைவரும் முனிவர் யோகசுவாமியின் நற்சிந்தனைப் பாடல்களைப் புனித நூலாக கருதி அதனைப் போற்றி வணங்குதல் வேண்டும் அந்நூல் முற்றிலும் தமது பரம்பரைப் போதனைகளை உட்கொண்டு ஒவ்வொருவரையும் தன்னைத் தன்னால் அறி எனக் கட்டளையிடுகின்றது.§

சூத்திரம் 60

நந்திநாத அடியவர்கள் அனைவரும் இந்து வினா விடையும் கோட்பாடுகளும், சுப்பிரமணியம் சாஸ்த்திரங்கள் மற்றும் எம் புனித மூல வாக்கியங்கள் அருளுரைகள் இந்த நந்திநாத சூத்திரங்கள் உட்பட அனைத்து நூல்களையும் புனித நூல்கள் எனக் கருதிப் போற்ற வேண்டும்.§