Sutras in Tamil

சூத்திரம் 86

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் வேதங்களையும் தமது பரம்பரைத் தந்திரங்களையும் தினமும் படித்து அதன் ஞான நடைமுறைப் போதனைகள் தம் அக மார்க்கத்துக்கு ஒளியெற்ற வழி செய்ய வேண்டும். இந்த புனித நூல்களின் வழியாக அவர்கள் வாழ்க்கையின் பல பாடங்களுக்கு அர்த்தங்களைக் கண்டு தெளிவர்.§

சூத்திரம் 87

சிவனை நேசிப்பவர்கள் மனிதன் ஐந்து நிலைகளான உணர்வு, உப உணர்வு, அடி உபவுணர்வு, உப உயர் உணர்வு, உயர் உணர்வு ஆகியவற்றைப் படித்துணர வேண்டும். எதிர்மறைப் பற்றுக்களை விட்டு விடுவதன் மூலம் அவர்கள் மனம், உடல், உணர்ச்சி மூன்றுக்கும் ஆசான் ஆவர்.§

சூத்திரம் 88

தாம் செல்லும் மார்க்கத்தில் வெற்றியடையும் பொருட்டு தம் உப உணர்வின் ஈர்ப்புச் சக்தியைப் புதுக்கருத்துகளாலும் எண்ணங்களாலும் மற்றியமைக்க முடியும் என சிவனை நேசிப்ப்வர்கள் அறிவர் உறுதிப்பாட்டின் சக்தியால் இது நிறைவேற்றப்படும்.§

சூத்திரம் 89

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் ஞானவொளியை அடையக் கூடிய ஐந்து படிகளான கவனம், ஒருமைப்படுத்துதல், தியானம், தீர்க்க சிந்தனை, சமாதி ஆகியவற்றைப் படித்துப் பூரணத்துவம் பெற வேண்டும். இதன் மூலம் அறிந்தவர் மட்டுமே அறிந்த பேசமுடியாத உண்மையை அவர்கள் உணருவர்.§

சூத்திரம் 90

உளதாம் தன்மையின் மறைபொருளை அறியும் பொருட்டு இந்த மூன்றையும் சிவனை நேசிப்பவர்கள் படிப்பர். மனிதனின் நுண்மிய உடல்கள், பரிவட்டம் இது எண்ணமும் உணர்ச்சியும் கொண்டதோர் வண்ணக் கலவை, உணர்வு நிலையின் பதின்னான்கு சக்கரங்கள், மையங்கள்.§