Sutras in Tamil

சூத்திரம் 91

சிவனை நேசிப்பவர்கள் பரவசம், உருஎறியும், முற்பிறப்பு மறுபிறப்பு வாசித்தல், ஆத்மப்புத்தி புகட்டல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. குருவினால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர்ந்த மற்ற சோதிடர்களையோ ரேகை சாத்திரகாரர்களையோ அவர்கள் சந்தித்து ஆலோசனை கேட்கக் கூடாது.§

சூத்திரம் 92

சிவனை நேசிப்பவர்களுக்கு சுயமாகச் சில அனுபவங்கள் ஏற்படக் கூடும் ஆயினும் அவர்கள் ஞானதிருஷ்டி, ஞானசெவி, உருஎறியம், தெளிந்த கனாக் காணல், பரவ் ஊடகம், நெஞ்சு வாசித்தல், குறி சொல்லுதல், மாந்திரீகம், மாயவேலை ஆகியவற்றைக் அனுஷ்டிக்கக் கூடாது.§

சூத்திரம் 93

சிவனை நேசிப்பவர்கள் எல்லோரும் தமது சற்குருவின் ஆத்மசக்திப் பாதுகாப்பில் இருப்பதால் எதிர்மறை மாயசக்திகள் அவர்களை தொடமுடியாது இருப்பினும் யாராவது மாயசக்த்களால் பீடிக்கப் பட்டிருந்தால் அவர்கள் ஆச்சார்யர்களின் அறிவுரைப்படி அதனைப் போக்க முற்பட வேண்டும்.§

சூத்திரம் 94

சிவனை நேசிப்ப்வர்கள் அனைவரும் தம் குருவினால் வழங்கப்பட்ட விசேட சாதனையாய் இருந்தாலன்றிக் கனவுகளை நினைத்திருப்பதோ அதற்கு விளக்கம் கூறுவதோ கூடாது. அவர்கள் வேண்டுமென்றே கனவுகளை மறந்து விட்டு விழித்திருக்கும் நிஜ வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும்.§

சூத்திரம் 95

சிவனை நேசிப்பவர்கள் புராதன பாரம்பரியமான அக்கினி மூலம் மகாதேவர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டுதல்களை வழங்கும் முறையைக் கைகொள்ளலாம். ஆனால் இதனை தமது குருவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்கள், கோயில்களிலும் மட்டுமே செய்ய வேண்டும்.§