Sutras in Tamil

சூத்திரம் 96

சிவனை நேசிப்பவர்கள் தினமும் சூரியோதயதிற்க்கு இருமணி நேரம் முன் எழுந்து நீராடி, தூய ஆடையணிந்து, நீறு பூசி, சுத்தமான அமைதியான இடத்தில் சமய சாதனைக்கு அமர வேண்டும். வார முடிவிலும், விடுமுறை நாளிலும் நோய் வாய்ப்படினும் அவர்கள் நேரம் தாழ்த்தியும் எழலாம்.§

சூத்திரம் 97

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் தினமும் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ அமர்ந்து வழிபாட்டினைச் செய்ய வேண்டும். குரு மந்திரத்தை ஓதி அவர்கள் மந்திரத்தைச் செபித்து வைகறைப் பொழுது வரை புனித நூல்களைப் படித்து தியானமும் யோகமும் செய்வர்.§

சூத்திரம் 98

நான் வருணித்திருக்கும் அடிப்படை யோகங்களான பக்தி, கர்மா, ஹதா யோகங்களை சிவனை நேசிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் மேன்மேலும் அனுஷ்டிக்க வேண்டும். தாமே கற்றுணர்வதால் உள்ளிருந்து எழுப்பப்படும் தீயானது மற்றைய தீயினை அடக்கிவிடும்.§

சூத்திரம் 99

தகுதியுள்ள சிவனை நேசிப்பவர்கள் உயர்ந்த யோகங்களான செப யோகம், ராஜ யோகம், குண்டலினி யோகம் ஆகியவற்றைத் திறமையான வழிநடத்தலின் கீழ் மட்டும் பயிற்சி செய்யலாம். உறுதியாக அடக்கியாள முடியவில்லையெனில் குண்டலினி கட்டுக்கடங்கா ஆசைகளை உருவாக்கும் என அவர்கள் அறிவர்.§

சூத்திரம் 100

கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவற்றுக்கு இலக்கான, சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் தியானமோ செபமோ செய்வது கூடாது. அவர்கள் ஆழ்ந்து தம்முள்ளே செல்லுமுன் பக்தி யோகத்தையும் கர்ம யோகத்தையும் செய்து தம் உணர்வு நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய!§