சிவனை அடையும் வழி

2§

நான் எங்கு செல்கிறேன்? என் பாதை யாது?§

வாழ்க்கையிடம் ஒரு நோக்கம் உள்ளது. நம்முள்ளே இருக்கும் தெய்வீகத் தன்மையை மலரச் செய்து முதிர்ச்சியடையவே நாம் இப்பிறவியை இந்த தூல தேகத்தில் எடுத்திருக்கிறோம். பல பிறவிகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த முதிர்ச்சிப் படலத்தில் இப் பிறவி என்பது இன்னொரு அத்தியாயமே. எல்லா ஆன்மாக்களும் இதே ஆன்மப் பயணத்தைத்தான் மேற்கொள்கின்றன.§

நம் ஆன்மாவின் மையக்கருப்பகுதியான ஆன்மச்சாரம் இன்றும் என்றும் சிவபெருமானோடு ஒன்றாகவே இருக்கிறது. எனினும் நமது ஆன்ம உடல் இன்னும் முதிர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. ஒரு சிறு விதையே பெரிய “ஓக்” மரமாக (இது ஒருவகை மரம்) வளர்கிறது. அதுபோல் நாமும் நமது மனம், உடல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்கிறோம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு திடமாக வளர்ச்சி அடைகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் சிவத்தை உணரமுடியும். முதலில் துன்பத்தினால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அது மீண்டும் வாராமல் இருக்க கற்றுக்கொள்கிறோம். பயத்தை பயமின்மையாக மாற்றுகிறோம். கோபத்தை அன்பாக மாற்றுகிறோம். சர்ச்சையை அமைதியாக மாற்றுகிறோம்.§

அதன்பிறகு நாம் சேவையாற்ற பழகுகிறோம். தன்னலமற்ற சேவையே ஆன்மீக முயற்சியின் ஆரம்பமாகும். தன்னலமற்ற சேவை ஆற்றுவதன் மூலம் நாம் ஆண்டவனின் பேரன்பை ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். அதன்பின் நாம் வாழும் இவ்வுலகமும் நாம் சந்திக்கும் மக்களும் நாமும் சிவனே தவிர வேறில்லை என்று உணர்கிறோம்.§

இறுதியாக நாம் மிக ஆழ்நிலையில் தியானம் செய்யப் பழகுகிறோம். மனதை அமைதியாக்கி நமக்குள்ளே சாந்தியையும் மௌனத்தையும் காண்கிறோம். நமது சுய சொரூபம் ஆன்மா என்றும் அது சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறது என்றும் புரிந்துகொண்டு, திரைப்படத்தில் ஒரு நடிகனைப் பார்க்கும் காட்சியைப்போல், எல்லா அனுபவங்களும் கடந்து போவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பயிற்சியினால் நாம் நமக்குள்ளேயே இறைவனைக் காண்கிறோம். இந்த பரிணாமப் பயணத்தின் முடிவில் எவ்வித வேறுபாடுமின்றி இறைவனோடு முழுமையாக ஒன்றித்து விடுகிறோம். இந்தப் பழங்கால ஆன்மீக முயற்சியை சன்மார்க்கம்—“உண்மை வழி“—என்று அழைக்கிறோம். சேவை, வழிபாடு, யோகம், ஞானம் என்பதே அதன் பாதை. ஒரு ரயில்வண்டி ரயில்தடத்திலேயே சென்று போகும் இடத்தைச் சேர்வதுபோல், சன்மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வதன் மூலம் பிறவித்தளையிலிருந்து§

image§

shutterstock§

ஒரு கிராமத்தில் சைக்கிளோட்டிய ஒருவர் எல்லையைத் தாண்டி தெரியாத பகுதிக்குள் சென்றதால் நின்று, பிரிகின்ற இரண்டு பாதையில் எதில் செல்வது என திசை காட்டியில் பார்க்கிறார். அதில் ஓம் என்ற சின்னம் தர்ம வழியே முன் செல்ல வேண்டிய வழி என்று காட்டுகிறது.§

குருதேவர்: நாம் அனைத்துப் பொருள்களிலும் நிறைந்தொழுகும் இறப்பற்ற விழிப்புணர்வும் சக்தியும் ஆவோம். நம்முள் மிக ஆழத்தில் இக்கணம் நாம் பூரணமானவர்களாக இருக்கிறோம். இதைக் கண்டுபிடித்து பூரணமுடன் வாழ்ந்து முழுமையடைய வேண்டுவதே.§