சிவனை அடையும் வழி

3§

வாழ்வின் முடிவான குறிக்கோள் என்ன?§

டவுளைத் தெரிந்து கொள்வதே வாழ்வின் உயர்ந்த குறிக்கோள். அதுவே ஆன்மீக வாழ்வைப் பின்பற்றிச் சென்ற பக்குவ ஆன்மாக்கள் அடைந்த பாதையாகும். ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் மலைமுகட்டை கட்டொழுங்குமிக்க மலையேறிகள் மட்டுமே அடைவதைப்போல், மிகச்சில முதிர்ந்த ஆன்மாக்களே வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை இவ்வாழ்வில் அடைகின்றனர். ஏனெனில் எல்லா ஆன்மாக்களும் ஒரே நேரத்தில் படைக்கப் படுவதில்லை. பழம் ஆன்மாக்கள் என்றும் இளம் ஆன்மாக்கள் என்றும் உள்ளன. பல பிறவிகள் எடுத்துவந்ததால் பழம் ஆன்மாக்கள் பக்குவம் அடைந்தவைகளாகின்றன. வாழ்வின் பல சுகங்களையும், எல்லா துக்கங்களையும் அனுபவித்து எண்ணற்ற சவால்களையும் அவை சந்தித்து விட்டன. இந்த வழிமுறை அவர்களை திடமாக்குகிறது. ஒரு மலைமுகட்டை அடைய தயாராகிவிட்ட மலையேறியின் வலிமையைப்போல் சிவபெருமானோடு ஒன்றாகிவிட தயாராகிவிடுகின்றனர்.§

பக்குவம் அடைய அடைய நாம் அன்புள்ளங் கொண்டவராக, தாராள குணமுடையவராக புரிந்துணர்வுடையவராக, உண்மையாளராக ஆகிறோம். ஒருகாலத்தில் நம்மை ஆட்டிப்படைத்த கோபம், பயம், பொறாமை போன்ற குணங்கள் நம்மை கட்டுப்படுத்துவதில்லை. நாம் அறிவுமிக்கவர்களாகவும் நேசமிக்கவர்களாகவும் ஆகிறோம். இந்த பக்குவத்தை அடைந்ததும் நாம் வாழ்வின் உண்மை நோக்கத்தை நோக்கி முன்னேறுகிறோம். கடைசியில் நமக்கு உலக அனுபவங்கள் இனி தேவைப்படுவதில்லை என்பதால் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக நாம் நூண்ணிய உடம்பில் விண்ணுலகில் தொடர்ந்து பரிணாமம் அடைந்துகொண்டு மனித நேயத்துக்கு சேவை செய்கிறோம்.§

மீண்டும் பிறப்பெடுத்தல் என்ற சுழற்சியிலிருந்து வெற்றிகரமாக வெளியாவதைத்தான் மோட்சம் என்கிறோம். மோட்சம் என்றால் சுதந்திரம், விடுவித்தல் அல்லது விடுதலை என்று பொருள். ஆனால் மோட்சம் அடைவதற்கு முன், ராஜயோகத்தின் உயரிய நோக்கமான ஆத்ம ஞானத்தை (தன்னை அறிதல்) கடவுள் தரிசனத்தைக் கட்டாயம் அனுபவிக்கவேண்டும். ஆத்ம ஞானத்திற்குப்பிறகு நீங்கள் ஏதோ ஓரிடத்தில் இருக்கும் ஒரு மனிதன் என்று உங்களைக் காணமாட்டீர்கள். அதற்குப்பதிலாக உள்முகமாக நோக்கினால் நீங்கள் சிவனைக் காண்கிறீர்கள். மற்றவர்களை நோக்கினாலும் சிவனையே காண்கிறீர்கள்.§

எல்லா ஆன்மாக்களும் மோட்சம் அடையும் என்றாலும் இப்பிறவியில் ஒருசில உயிர்களே மோட்சம் அடைகின்றன. இந்துக்களுக்கு இது தெரியும் என்பதால் இப்பிறவிதான் கடைசிப்பிறவி என்று அவர்கள் எண்ணிக்கொள்வதில்லை. தொண்டு, வழிபாடு மற்றும் யோகத்தின் மூலம் பூரணப்படுவதற்கு அவர்கள் முயன்றாலும், வாழ்வின் இதர மூன்று நோக்கங்களான அறம், பொருள், இன்பம் என்பனவற்றை பூர்த்தியாக்க மேலும் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியும். மோட்சம்கூட நம்முடைய இறுதி பாதை அல்ல. மறுபிறப்பு சுழலிலிருந்து விடுதலை அடைந்ததும், இறைவனோடு முழுமையாக ஐக்கியமாகும்வரை ஆன்ம உடல் தொடர்ந்து உள்ளுலகில் பரிணாமமடைந்து கொண்டிருக்கிறது.§

சீவன் சிவனாகின்றது. இந்த இணைவு விஷ்வகிரஷம் எனப்படுகிறது. எண்ணற்ற ஆன்மாக்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த தொன்மை பாதையில் இருக்கும்போது, உள்ளது உள்ளபடி இருந்துகொண்டு யாவும் சரியாகவே இருக்கின்றது என்ற தூய உணர்வு கிட்டுகிறது.§

image§

shutterstock§

ஒரு சாதகன் சூரியன் அஸ்தமிக்கும் அந்திவேளையில் திடலில் தன் கைகளை விரித்து ஆனந்தமாய் நிற்கிறான். மதிமயங்கும் அந்த அழகிய நேரத்தில் அவன் அனுபவிக்கும் அந்த ஆனந்தத்தை மனத்தின் உள்ளொளி ஆனந்தத்தோடு ஒப்பிடும்போது அது மிகமிகச் சிறியதே.§

குருதேவர்: ஒவ்வொரு ஆன்மாவும் காலமற்ற, உருவமற்ற, பரவெளி கடந்த தன் சுய கடவுள்தன்மையை, சிவத்தன்மையை, முழுமுதற் பொருளை, பரசிவத்தைக் கண்டுணர்ந்து கொள்கிறது§