சிவனை அடையும் வழி

49§

நாம் ஏன் சைவ உணவு உண்பவர்களாக இருக்கிறோம்?§

ர்மம், கன்மம், தன்னுணர்வுநிலை, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய ஐந்து காரணங்களுக்காக சைவ உணவு பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கின்றனர். முதலாவதாக, நம்முயிர் பிழைக்க பிற உயிர்களை நாம் கொல்லக்கூடாது என்று தர்மம் உரைக்கிறது. இரண்டாவதாக மாமிசம் உண்பவர்கள் மறைமுகமாக விலங்கினத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இது எதிர்மறையான கர்மவினையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் துன்பம் அனுபவிக்க வைக்கிறது. மூன்றாவதாக மாமிசம் உண்பதால் நமது தன்னுணர்வில் ஏற்படும் தாக்கங்கள். விலங்குகளின் உயிர் பறிபோகும்போது ஏற்படும் வலி, பயங்கரம், சித்ரவதை ஆகியன அவ்வுயிர்களின் சதையில் வேதியல் ரீதியாக பதிந்து விடுகிறது. அந்த விலங்குகளின் மாமிசத்தை நாம் உண்ணும்போது அந்த விலங்கு அனுபவித்த அந்த வேதனை உணர்வுகளும் நம்முள்ளே சென்று நம் தன்னுணர்வை எதிர்மறையாகத் தாக்குகிறது. நான்காவது காரணம் உடல் நலம் தொடர்புடையது. புற்றுநோய் உட்பட இன்னும் பல நோய்களுக்கு மாமிசம் உண்ணுதலே காரணம் என்று தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.§

மனிதர்கள் மாமிசம் உண்பதற்கு எவ்விதமான உடற்சத்து காரணங்களும் இல்லை. சைவ உணவே அடிப்படையில் நல்ல ஆரோக்கியமான உணவு என்று நவீன ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஐந்தாம் காரணம் மனிதர்களின் தேவைக்கு மாமிசத்தை வினியோகம் செய்யும் பெரிய தொழில் நிறுவனங்களால் சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றத்துக்கும், காடுகளை அழிப்பதற்கும், மேல் அடுக்கு மண் இழப்பிற்கும், உயிரினங்கள் முற்றாக அழிவதற்கும் அது பங்காற்றுகிறது. மாடுகள், பன்றிகள், கோழிகள் வளர்ப்பதற்கு இப்போது செலவிடப்படும் பணத்தை காய்கறி உணவுகள் உற்பத்திசெய்ய செலவிட்டால் அது உலக அளவில் பசியைத் தீர்க்கவும் உலக வெப்பத்தைக் குறைக்கவும் செய்யும்.§

இன்று சைவ உணவு உண்ணுவது உலக இயக்கமாகிவிட்டது. எல்லா மதங்களிலும் சைவ உணவுக்காரர்கள் உள்ளனர். அதேபோல் எம்மதத்திலும் இல்லாதவர்கள்கூட சைவ உணவுக்காரர்களாக உள்ளனர். அமெரிக்கர்களில் மூன்று சதவிகிதம் சைவ உணவுக்காரர்களாக இருக்கின்றனர். அவற்றில் எட்டு சதவீதம் இளையோர்கள். பிரிட்டன் நாட்டில் 15 சதவிகிதம் இளையோர்கள் தங்களை சைவ உணவுக்காரர்கள் என்று பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர். உலகத்திலேயே அதிகமான சைவ உணவுக்காரர்களைக்கொண்ட நாடு இந்தியாதான். அந்நாட்டு மக்கள்தொகையின் 30 சதவிகிதம்—அதாவது 50 கோடி (500 மில்லியன்) மக்கள் சைவ உணவை மட்டுமே உண்பவர்களாக உள்ளனர். சைவ உணவு என்பது மனிதனின் இயற்கையான கௌரவமான உணவு என்று நமது ஞானிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர். நமது சமயத்தை தமிழில் சைவம் என்று அழைக்கிறோம். சைவம் என்பதற்கு இன்னொரு பொருள் சைவ உணவு என்பதாம்.§

image§

shutterstock§

ஒரு ரொட்டியின்மீது வெண்ணெய் உருகுகிறது. அதைச் சுற்றிலும் சுவையான ரசமும், கொண்டைக்கடலைக் கறியும், சோயா தோஃபும், மீ வகைகளும், பச்சை காய்கறிகளும் உள்ளன. இத்தகைய சைவ உணவுவகை நம் உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் இந்த உலகத்துக்கே நல்லது.§

குருதேவர்: சைவ உணவு உண்ணுதல் என்பது பிற உயிர்களுக்கு இயற்கையாகவே மிகக் குறைந்த அளவில் துன்பம் இழைத்து வாழ்வதாகும். எனது ஐம்பது வருட ஆன்மீக அனுபவத்தில் கண்டது என்னவென்றால் சைவம் அல்லாத குடும்பக்காரர்களைவிட சைவ உணவுக்கார குடும்பத்தார் சொற்ப பிரச் சினைகளையே சந்திக்கின்றனர் என்று வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.§