சிவனை அடையும் வழி

50§

சுற்றுச்சூழழை நாம் எவ்வாறு மதிக்கிறோம்?§

னிதன் இயற்கைக்குப் புறம்பானவன் அல்ல என்று இந்து சம்பிரதாயம் புரிந்து வைத்திருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பஞ்சபூதங்களோடு நாம் ஆன்மிக ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சம்பந்தப்பட்டுள்ளோம் என்றும் அது விளக்குகிறது. எங்கும் எதிலும் தெய்வீகம் இடம்பெற்றுள்ளதால் உயிர்கள்மீது இந்துக்கள் ஆழமான மதிப்பு வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்ச வலையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் பெரும் சக்திகளுடன், செடிகள் மரங்கள் விலங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இதர உயிர் வர்க்கங்களாலும் ஒன்றுக்கொன்று தொடர்பால் பின்னப்பட்டிருக்கிறோம் என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நமது சமய சாத்திரங்களில் மிகவும் உள்ளன்போடு தெய்வமாக நாம் போற்றும் பூமாதேவி என்னும் இந்த பூமி, கோடிக்கணக்கான ஆண்டுகள் மனித இனத்தைக் காத்து வளர்த்து பரிணமித்து வந்துள்ளது. ஆனால் உலகின் பெரிய மக்கட்தொகையும், தொழிற்துறைகளும், வாகனங்களும், மனித வாழ்வியலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. உலகக் குடும்பத்தில் ஆறில் ஒரு பகுதி என்ற வகையில் இந்துக்கள் பெரும் அழுத்தம் கொடுக்க இயலும். பூமிக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் நட்புறவாக வாழவும், தனிப்பட்ட ரீதியில் அதிகம் செலவழிக்காமல் வாழவும், மின்சக்தி போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவும், மாற்று சக்திகளை பயன்படுத்தவும், நிலையான உணவு உற்பத்தியையும், சைவ உணவை உட்கொள்ளச் செய்வதிலும் நாம் முன்னோடியாக செயல்பட வேண்டும். மண், நீர், காற்று முதல் பல்வேறு வகையான விலங்கினங்கள்வரை, பூமியின் அனைத்துவகை இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இதை அடைவதற்கு உலகின் எல்லா வளங்களையும் நாம் வீணடிக்காமல் குறைவாக உபயோகிக்க வேண்டும். அதன் கனிம வளங்களையும், நீர், எண்ணெய் அல்லது மண் வளங்களையும் நாம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வீணடிக்கக்கூடாது. நமது இந்த நீல பூமிக் கிரகத்தை மாசு படுத்துவதைத் தவிர்க்கிறோம். பல வகையான அரிய தாவரங்களையும் விலங்கினங்களையும் நாம் பாதுகாக்கப் பணியாற்ற வேண்டும். வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தோல்கள், தந்தங்கள் அல்லது ஊர்வன பிராணிகளின் தோல்களை நாம் வாங்குவதில்லை; பயன்படுத்துவதுமில்லை. காகிதம், கண்ணாடிப் பொருள்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை நாம் மறுசுழற்சி செய்கிறோம். குறைவான சக்தியை பயன்படுத்தும் வாகன ஊர்திகளை உபயோகிக்கிறோம். மரங்களை நடுகிறோம். உணவை வீணடிப்பதில்லை. இப்படியாக நாம் இந்த பூமியையும் அதில் வாழும் எல்லா உயிர்களையும் மதிப்பதன் மூலம் நாம் இந்துவின் அடிப்படை கொள்கைகளை வெளிப்படுத்துகிறோம்.§

image§

shutterstock§

நாம் இந்த உலகத்தை ஓர் அழகான கிரகமாகமும், தாயாகவும், வாழ்க்கை ஜீவிதமாகவும், என்றும் நம்மை காப்பாற்றி வளமளிக்கும் உலகமாகவும் பார்க்கிறோம். இந்த பூமி தெய்வத்தை நாம் பூமாதேவி என்றழைக்கிறோம். இந்த பூமியை நாம் எல்லா வகையிலும் பாதுகாக்கிறோம்§

குருதேவர்: மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் இந்து சமயம் ஒருமித்த பார்வையை வைத்துள்ளது. அதில் மரியாதையும் மதிப்பும் உள்ளதே தவிர ஆளுமையோ அல்லது பொறுப்பின்மையோ இல்லை. உயிரினங்களைத் தாங்கும் இந்த பூமித்தாய் வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது….இந்துக்கள் இந்த பூமிக் கிரகத்திற்கு விருந்தாளியாக வந்தவர்கள் என்றும் இயற்கைமீது பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்றும் உணர்கின்றனர். அப்பொறுப்பை பூர்த்தி செய்ததும் அக் கடமையும் சமநிலையில் பூர்த்தியாகிறது. இயற்கையிடமிருந்து வந்த இந்த மானிட உடல் இயற்கைக்கே திரும்பிப் போகிறது.§