சிவனை அடையும் வழி

51§

எது ஒரு நிறைவான இல்லம்?§

ரு சிறந்த நிறைவான இல்லம் என்பது மிகுந்த ஈர்ப்பு சக்தியும் நல்லிணக்கமும் கொண்ட வீடாகும். அவவீட்டை விட்டு வெளியேறுவது என்பது சிரமமான காரியம். உண்மையான ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அன்பு, கருணை, பகிர்ந்து கொள்ளுதல், பாராட்டுரைத்தல் போன்ற இயல்புகளோடு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி நல்கி துணையாக இருக்கிறார்கள். இந்த இடம் தன்னலமற்றது; ஆனால் ஒற்றுமை உணர்வுமிக்க இடம். அங்கு ஒவ்வொருவரிடமும் கலந்துறவாட ஒவ்வொருவருக்கும் நேரம் இருக்கிறது வீட்டை ஒரு அன்பு இல்லமாக மாற்றுவது பெற்றோர்களின் கடமையாகும். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி பிள்ளைகளிடம் அன்பு காட்டுகிறர்கள். பூசை அறையில் வழிபடுவதிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இது வீட்டில் நல்ல ஆன்மீக அதிர்வலைகளை உருவாக்கி வீட்டை கோயில் போன்ற சூழ்நிலையில் வைக்கிறது. வீட்டில் தெய்வங்கள் வணங்கப்படுகின்றனர். தேவதேவதைகளையும், காவல் தேவர்களையும், முன்னோர்களையும் ெகௗரவித்து நாம் வீட்டுக்குள் அழைக்கிறோம். ஒவ்வொரு அறையும் படுசுத்தமாக பளிச்சென்று வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் பூசையறையில் பூசை நடக்கிறது. இயன்றவரை எல்லோரும் உணவை ஒன்றாகவே உண்கின்றனர். உணவுக்குமுன் “உணவு மந்திரத்தை” (அன்னபூர்ணே) சொல்கின்றனர். இந்து பண்டிகைகளை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர். தேவார திருவாசகப் பாடல்களைப் பாடி, பாரம்பரிய இசைகளையும் கேட்கின்றனர். சைவ சித்திர வேலைப்பாடுகளும் கலைப்பொருள்களும் வீட்டின் அறைகளை அலங்கரிக்கின்றன. இவையனைத்தும் ஒரு பாதுகாப்பான முழுமையான வீட்டுச் சூழலை ஏற்படுத்துகிறது. கடுமையான வெளியுலகச் சூழலைவிட்டு ஒர் அமைதியான புகலிடமாக அது விளங்குகிறது. இணக்கத்தோடு வாழ்வதுதான் இங்கு தாரக மந்திரம். அந்த நல்லிணக்கம் குலையாதவாறு குடும்ப உறுப்பினர்கள் கவனமாக நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கிடையே ஒருமித்த கருத்துக்கு இடங்கொடுத்து, வாய்த் தகராற்றையும் கடும் சொற்களையும் தவிர்க்கின்றனர். எல்லா கருத்து வேறுபாடுகளும் தூங்கப் போகுமுன் தீர்த்து வைக்கப்படுகின்றன. விருந்தினர்கள் கடவுளாகப் பாவிக்கப்படுகின்றனர். விருந்தோம்பல் தாராள மனதுடன் செய்யப்படுகின்றது. வீட்டை நன்கு பேணி கட்டுக்கோப்புடனும் உறுதியுடனும் வைத்திருப்பதற்கு பிள்ளைகள் உதவலாம். காலையில் வீட்டு பூசையிலும் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா கொண்டாட்டத்திலும் அவர்கள் உதவலாம். வாரம் ஒருமுறை குடும்ப நிகழ்ச்சியாக “மாலை வேளை குடும்ப ஒற்றுமை நேரம்” என்பதை குருதேவர் பரிந்துரைக்கிறார். அன்று மாலை குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக வீட்டில் அமர்ந்து இரவு உணவு உண்கின்றனர்; திட்டங்கள் தீட்டுகின்றனர்; விளையாடுகின்றனர்; விருப்பமானவற்றை பகிர்ந்து கொள்கின்றனர்; ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்கின்றனர்; தொலைக்காட்சியை மூடிவிட்டு,, டிஜிட்டல் கருவிகளை அடைத்துவிட்டு,, மனதை திசை திருப்பும் எல்லாவற்றையும் மறந்து, குடும்ப ஒற்றுமை நாளில் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.§

image§

shutterstock§

வீடே நமது கோட்டை. அது நமக்கு பாதுகாப்பு அளித்து நம் குடும்பத்தையும் ஒன்றாக பிணைத்து வைக்கிறது. இங்கு தாயே சக்தி. தந்தையே சிவன். பிள்ளைகளே தேவர்கள். நாளும் நாளும் அன்பில் பிணைந்து அனைவரும் வலுவாக வளர்கின்றனர்§

குருதேவர்: எந்த வீட்டில் சுத்தம் ஒழுங்கு பேணப்படுகிறதோ, காலை உணவும், மதிய உணவும், இரவு உணவும் ஒழுங்காக பரிமாறப்படுகிறதோ, காலை வழிபாடு பக்திப் பெருக்குடனும் மரியாதையுடனும் நடக்கிறதோ, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக வசித்து, ஒன்றாக உணவருந்தி, ஒன்றாகப் பேசி மகிழ்ந்து, ஒன்றாக வழிபாட்டில் ஈடுபடுகிறார்களோ, அந்த வீட்டில் தேவ தேவதைகள் வந்து குடியிருக்க இயலும்§