Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

அருஞ்சொற்றொடர் அகராதி

அர்ச்சகர்: கோயிலில் பூசை செய்வதற்காக பயிற்சியளிக்கப்பட்டவர். ஓர் அர்ச்சகருக்கு சமஸ்கிரத மொழியும் பாரம்பரிய சடங்குகளும் தெரிந்திருக்கும். §

அன்னபிரசன்னம்: முதலாவது திடப்பொருள் உணவு ஊட்டுதல். குழந்தையின் ஆறாம் மாதத்தில் நடத்தப்படும் சடங்கு. §

அஞ்சலி முத்திரை: மரியாதை செலுத்தும் அடையாளம். நமஸ்காரம் கூறுவது போன்றது. இந்து முறையிலான வாழ்த்து. மார்பின் முன்னால் இரு கைகளையும் சேர்த்து வணக்கம் கூறுதல். §

அஹிம்சை: "வன்முறையில்லாதிருத்தல்." மற்றவகளுக்கு மனத்தால், எண்ணத்தால் அல்லது உடலால் தீங்கிழைக்காமை. §

ஆகமம்: பழங்கால சமஸ்கிரத திருமறைகள். ஆகமங்களில் கோயில் கட்டும் முறைகள். கோயில் சடங்குகள், தத்துவங்கள் மற்றும் யோகம் முதலியன விளக்கப்பட்டுள்ளன. §

ஆதி ஆன்மா: சிவபெருமானே ஆதி ஆன்மா. மற்ற ஆன்மாக்களைப் படைத்தவர். §

ஆன்மா: நம் உள்ளுக்குள் இருக்கும் ஒன்று. சிவபெருமானால் படைக்கப்பட்டது. §

ஆஸ்ரமம்: சாதுக்கள், அருளாளர்கள் (ஞானிகள்), சுவாமிகள், உலகைத் துறந்த குரு ஆகியோரின் இருப்பிடம். ஓர் ஆஸ்ரமம் என்பது சாதாரண மலைக் குகையாக அல்லது பல கட்டடங்கள் கொண்ட பரந்த வலாகத்தில் துறவிகளும் மாணவர்களும் இருக்குமிடம். §

இந்து: இந்து பெயர் கொண்டு இந்து சமயத்தைப் பின்பற்றுபவர். §

இந்து சமயம்: இந்த உலகத்திலேயே மிகப் பழமையான சமயம். இந்து சமயத்தை ஒரு பில்லியன் பேர் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலோர் இந்தியாவிலும் நேப்பாலிலும் இருக்கின்றனர். சமஸ்கிரத மொழியில் சனாதன தர்மம் "ஆதியந்தமில்லாத சமயம்" என்றழைக்கப் படுகிறது. §

இறைவன்: சிவபெருமான், எல்லாவற்றிற்கும் மேலான முழுமுதற் கடவுள். இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரையும் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர். அவரே கணபதிப் பெருமானாகவும் முருகப்பெருமானாகவும் திகழ்கிறார். §

ஈஸ்வரக் கடாட்சம்: இறையன்பினால் கிடைக்கக் கூடிய பேறு. §

உண்டியல்: கோயில் நன்கொடைக்காக வைக்கபடுவது. §

ஓம்: திருமறைகள் அல்லது புனித நூல்களைப் படிப்பதற்கு முன்னரும் மந்திரங்கள் சொல்வதற்கு முன்னரும் கூறப்படும் மந்திர ஒலி. §

ஓம் கம் கணபதையே நமஹ: கணபதி பெருமானுக்கு வணக்கம். கணபதி பெருமானுக்குரிய புனித மந்திரம். §

ஹோமம்: புனித நெருப்பில் புனிதமான பொருட்களை நைவேத்தியமாக அளித்து இறைவழிபாடு செய்தல். §

கணபதி: கணங்களின் தலைவர். கணேசப் பெருமானின் மற்றொரு பெயர். கணங்கள் எனப்படுவோர் சிவபெருமானுக்குத் தொண்டு செய்யும் ஒரு வகை தேவர்கள்.§

கணேசா: யானைமுகம் கொண்ட தெய்வம். சிவபெருமானின் முதல் மகன். இந்து மதத்தின் எல்லா பிரிவினரும் கணேசப் பெருமானை மதிக்கின்றனர். வழிபாட்டைத் தொடங்குவதற்கு முன் அல்லது ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அவரை முதலில் வணங்குவார்கள். §

கர்மா: நல் வினை தீவினைக் கோட்பாடு. §

கர்ணவேதம்: தங்கக் காதணி அணிவிக்கும் ஆண் பெண் குழந்தைகளுக்கான காதுகுத்தும் விழா. §

கலாச்சாரம்: நெடுங்காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு அவ்வப்போது புதிய மாற்றமும் கொண்டு திகழுக் கூடியது. §

குங்குமம்: நெற்றியில் குங்குமத்தால் பொட்டு இட்டுக் கொள்ளுவது. §

குத்துவிளக்கு: வீடுகளிலும் கோயில்களிலும் தரையிலிருந்து உயரமாக நிறுத்தி வைக்கப்படும் உலோக (செம்பு, வெங்கலம்) எண்ணெய் விளக்கு. §

குரு: ஓர் ஆசிரியர். மிக மேலான குறிப்பாக ஒரு ஞானி நம்மை கடவுள் அருகில் கொண்டு செல்பவர். §

குருதேவா: குருவானவருக்கு அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு சொல். சிவாய சுப்பிரமுனியசுவாமி போன்றவர். §

கவாய் இந்து மடம்: ஐக்கிய அமெரிக்காவின் ஹவாயில் ஆதீனம், ஆஸ்ரமம், கோயில் சார்ந்த வலாகம் முதலியவை சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமியால் நிறுவப்பட்டது. §

குளிர்ந்த பொட்டு: நெற்றியில் இட்டுக் கொள்ளும் திலகம். கனடா நாட்டுத் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிக்கு (டோக்யுமெண்ட்ரிக்கு) இதே பெயர் சூட்டப்பட்டுள்ளது.§

கோயில்: இறைவனின் இல்லம். கோயிலில் இறை தரிசனத்தை எளிதில் உணரலாம். §

சமயம் அல்லது மதம்: இறைவனை வழிபடவும் நல்ல மனிதனாகத் திகழவும் காட்டும் மார்க்கம். புத்த மதமும் இந்து மதமும் சமயங்கள் அல்லது மதங்கள் எனப்படும். §

சமயம்சார்ந்த: இறைவனிடம் பக்தியோடிருத்தல். §

சமஸ்கிரதம்: இந்தியாவின் பழமை வாய்ந்த மொழி. இம்மொழியில் இந்து திருமறைகள் எழுதப்பட்டுள்ளன. இந்து சடங்குகளின் பெரும்பாலான மந்திரங்கள் சமஸ்கிரத மொழியில் உள்ளன. §

சமஸ்கிரத மொழி: உலகத்தின் மிகப் பழமையான மொழி. §

சற்குரு: ஒரு சிறந்த சமய ஆசிரியர். அவர் இறைவனிடம் நெருங்கி இருந்து மற்றவர்கள் சரியான பாதையில் நடக்க வழிகாட்டுகிறார். §

சிவா: மிக மேலான ஈடு இணையற்ற கடவுள். பிரபஞ்சத்தைப் படைத்தவர். §

சிவதொண்டு: "சிவாவுக்குத் தொண்டு செய்தல்" மற்றவர்களிடம் எவ்வித கைமாறும் எதிர் பார்க்காமலும் எவ்வித எண்ணமுமின்றியும் உதவி செய்தல். §

சுப்பிரமுனிய சுவாமி, சற்குரு சிவாய: இதற்கு முன்னிருந்த சற்குரு இவர். (1927-2001) நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையைச் சார்ந்தவர். அவரது குரு ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்து ஞானி யோகசுவாமியாவார். சிவாய சுப்பிரமுனிய சுவாமி ஐக்கிய அமெரிக்கா ஹாவாயிலுள்ள கவாய் ஆதீனத்தில் வாழ்ந்து வந்தார். அவரது இடத்தில் இப்போது உள்ளவர் சற்குரு போதிநாத வேலன்சுவாமி. §

சுவாமி: இந்து துறவி. திருமணமாகாத பிரம்மச்சாரி. தன் வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்தவர். §

சுவாஸ்திகா: நான்கு முனைகளும் வளைந்திருக்கும். இது மிகப்பழமை வாய்ந்த இந்து சமய அடையாளம். இதன் பொருள், இறைவனை நேரடியாக அணுகாமல் மறைமுகமாக அணுக வேண்டும் என்பதாகும். §

சூடகரணா: குழந்தைப் பருவத்தில் தலையை (மழித்தல்) மொட்டையடிக்கும் சடங்கு. §

சைவம்: சைவ சமயத்தைச் சார்ந்தது. நான்கு பிரிவுகளில் ஒன்று அல்லது இந்து சமயம். §

சைவ சமயம்: சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள். §

சைவன் (சைவ உணவு உண்பவர்): இறைச்சி, மீன், முட்டை, கோழி. பறவைகளை உண்ணாதவர்.§

தர்மம்: பிரபஞ்சத்தில் வழி வழியாக இருந்து வரும் தெய்வீகச் சட்டம். இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தக் கூடியது. §

தம்புரா: இந்து இசையில் பயன்படுத்தப்படும் நரம்பு இசைக்கருவி. §

தற்பெருமை அல்லது கர்வம்: நம்மை அடையாளம் காட்டும் தன்மை. எப்போதும் "நான்", "எனது" என்று கூறும் தன்மை கொண்டது. §

திரிகோணம்: முக்கோணம். சிவபெருமானுக்குரிய அடையாளம் அல்லது நெருப்பின் அடையாளம். §

திரிபுண்டரம்: நெற்றியில் விபூதியால் மூன்று கோடுகளாக அணியப்படுவது. §

திரிசூலம்: மூன்று கூர்மையான ஈட்டி போன்ற ஆயுதம். இது சிவபெருமானின் அன்பு, செயல், ஞானம் ஆகியவற்றின் சக்தியைக் குறிக்கும் அடையாளமாகும். §

தியானம்: அமைதியாய் அமர்ந்து நமது சுவாசத்தையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தியிருத்தல். §

தெய்வீகம்: இறைவனால் விரும்பக்கூடியது புனிதமானது. தெய்வீகத் தன்மையானது. §

தெய்வங்கள்: மிக மேலான ஆன்ம முன்னேற்றமடைந்தவர்கள். கணபதிப் பெருமான், முருகப் பெருமான் போன்றவர்கள் முழுமுதற் கடவுள் சிவபெருமானால் படைக்கப் பட்டவர்கள். §

தேவர்: நம்மைப்போன்ற பௌதிக உடலல்லாது ஒளி உடலுடன் சொர்க்கத்தில் இருக்கக்கூடிய ஒன்று. தேவர்கள் நம்மைப் போன்று மறுபிறவிக்குக் கட்டுப்பட்டவர்கள் இங்கேயிருப்பார்கள். §

நாமகரணம்: குழந்தை பிறந்து 11வது நாளிலிருந்து 41வது நாட்களுக்குள் நடத்தப்படும் பெயர் சூட்டும் விழா. §

பாக்கு: கோயிலில் நைவேத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. §

பிரதட்சணம்: வழக்கமாக பக்தி சிரத்தையோடு கோயில் சந்நிதி அல்லது கோயிலை வலம் வருதல். §

பிரார்த்தைனை எரித்தல்: இறைவனுக்கும் தெய்வங்களுக்கும் எழுதப்பட்ட பிரார்த்தனைகளை கோயிலில் உள்ள புனித தீயில் எரித்தல். §

பூசை செய்யும் புனித இடம்: கோயில் கருவறையில் சுவாமி விக்கிரகம் உள்ள இடம். இல்லங்களிளும் இறைவழிப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட அறை. §

பூசை: இறைவழிபட்டுக்காக நடத்தப்படும் ஒரு சடங்கு. இதில் ஊதுபத்தி, சூடம், விளக்கு, தீர்த்தம், நைவேத்தியம், பூக்கள், மற்றும் சமஸ்கிரத மந்திரங்களும் அடங்கும். §

பொட்டு: நெற்றியில் சிறியதாக அணியப்படும் குங்குமப் பொட்டு. இது இந்து என்ற அடையாளத்தைக்காட்டுகிறது. §

மடாலயம்: ஆஸ்ரமம் அல்லது துறவிகளுக்கான இருப்பிடம். வழக்காமாக ஒரு சற்குருவின் வழிகாட்டலில் இருப்பார்கள். §

மந்திரம்: நமது திருமறையிலிருந்து சமஸ்கிருத மொழியில் புனித வார்த்தை அல்லது வாக்கியங்கள் கோயில் பூசை, மகேஸ்வர பூசை மற்றும் கூட்டங்கள் முதலியவற்றின்போது கூறப்படுவது. §

மஹாசமாதி: புனித ஆன்மாக்களின் இறப்பைக் குறிப்பது. §

மறுபிறவி: "மறுபடியும் வேறொரு உடலில் (பிறத்தல்) புகுதல்". இதன் வழி ஆன்மா புதிய பௌதிக உடலை எடுக்கிறது. இதை சமஸ்கிரதத்தில் புணர் ஜென்மம் என்பார்கள். §

முத்திரை: பூசை, நடனம் மற்றும் யோகத்த்தின்போது கைகளால் காட்டப்படும் அடையாளங்கள். §

முருகன்: சிவப்பெருமானின் இரண்டாவது மகன். கணேசப் பெருமானின் சகோதரர். மயில் வாகனத்தில் வேலுடன் செல்லும் சக்தி வாய்ந்த கடவுள். §

வழிபாடு: இறைவனிடம் உதவி, விசேஷமான வேண்டுதல் மற்றும் அவருடைய ஆசி வேண்டி பிரார்த்தித்தல்.§

வழிபாடு: இறைவனிடம் நமது அன்பை வெளிபடுத்தும் பொருட்டு அவர் நாமத்தைக் கூறுதல், பக்திப் பாடல்களைப் பாடுதல். நைவேத்தியப் பொருட்களான உணவு, சூடம், சாம்பிராணி. ஊதுபத்தி, விளக்கு முதலியவற்றை நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கிறோம். §

விபூதி: புனித நீறு அல்லது புனித சாம்பல், அனைத்தும் சைவ சமயத்தவர்களுக்கும் மிகப் புனிதமானது. இது சாணத்தோடு புனிதப் பொருட்களாகக் கருதப்படும் பால், நெய், தேன் முதலியவற்றைச் சேர்த்து எரிக்கப்பட்டது. இது பரிசுத்ததைப் பறைசாற்றுகிறது. §

வீணை: தந்திக் கம்பிகளால் மீட்டக் கூடிய இந்து இசைக் கருவி. §

வெற்றிலை: கோயில் பூசை சடங்கு முதலியவற்றிற்கு நைவேத்தியமாகப் பயன் படுத்தப்படுகிறது. §

வேதங்கள்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சமஸ்கித மொழியில் எழுதப்பட்ட திருமறை. உலகத்திலேயே மிகபழைமையான நூலாகும். §

யாழ்ப்பாணம்: வட ஸ்ரீ லங்காவிலுள்ள முக்கிய பட்டணம். சற்குரு யோகசுவாமியின் இருப்பிடம். §

யோகம்: மனத்தையும் உடலையும் மிக அமைதியாக வைத்திருத்தல். யோகத்தில் நாமஞ்சொல்லுதல், அசையாது அமர்ந்திருத்தல் நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி தியானத்தில் இருத்தல் முதலியன அடங்கும்.§

யோகசுவாமி, சற்குரு: ஸ்ரீலங்காவில் வாழ்ந்த சிறந்த ஞானகுரு (1872-1964). இவருக்கு அடுத்து வந்தவர், அவரது சிஷ்யர் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி. §