Sutras in Tamil

சூத்திரம் 31

உண்மையை நாடுவோர் எவரும் ஒரு மனிதனை வேண்டுமென்று கொலை செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது. ஒருவரை எந்த வழியிலும் இம்சிப்பதும் கூடாது. உடலாலும், மனத்தாலும், உணர்சியாலும் அகிம்சை ஒன்றே அவர்களின் உயர்ந்த நீதிநெறிக் கொள்கையாகும். ஆம் இரக்கமும் புனிதமும் நிரம்பியது அவர்கள் வாழ்க்கை.§

சூத்திரம் 32

உண்மையை நாடுவோர் எவரும் எந்த ஜீவராசியையும் கொல்லவோ, காயப்படுத்தவோ கூடாது. நிறைந்த கருணையும், கொலையுணர்வு அற்றவராகவும் அவர்கள் விளங்குவதால் பயம், வேதனை, துன்புறுத்தல் போன்றவற்றிற்கு அவ்ர்கள் காரணமாய் இருக்க மாட்டார்கள். அவர்கள் தாம் எல்லாவற்றிலும் ஒன்றியிருப்பதைக் காண்பார்.§

சூத்திரம் 33

உண்மையை நாடுவோர் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்க்கு தற்கொலையை நாடுவதினின்றும் தடுக்கப் படுகிறார்கள். ஆயினும் முத்திப்போன வியாதியினால் இறுதிநிலையிலிலுள்ள ஒருவர் கடுமையான சமுதாய நிபந்தனைகளின்படி நோன்பிருந்து உயிர் துறக்கலாம் என எமது பாரம்பரியம் அனுமதிக்கிறது.§

சூத்திரம் 34

உண்மையை நாடுவோர் எவரும் காமக்களியாட்டங்களைப் பற்றியோ அளவுக்கு மீறிய வன்முறைகளைப் பற்றியோ பேசுவதோ, கேட்பதோ, பார்ப்பதோ கூடாது. தன்னையோ மற்றவர்களையோ இகழ்வு படுத்தக்கூடியவை அவை உண்மையாக இருந்தாலும் அவர்கள் அதனைக் கூறக் கூடாது.§

சூத்திரம் 35

உண்மையை நாடுவோர் அனைவரும் உண்மை, இரக்கம், உதவி, முக்கியமானவை ஆகியவற்றை மட்டுமே பேச வேண்டும். ஆவர்கள் கெட்டவார்த்தைகளை உபயோகிப்பது அடுத்தவருக்கு எதிராக பொய்சாட்சி சொல்லுதல் அவதூறுகளில் ஈடுபடல் புறங்கூறுதல் கூடாது.§