Sutras in Tamil

சூத்திரம் 36

அகிம்சையைப் பூரணமாக நிறைவேற்ற முடியாத உண்மையை நாடுவோருக்கு ஒரு உயிரின் மூலம் இன்னொரு உயிரைக் காப்பாற்றும் வகையில் யான் மனமின்றி மூன்று விதிவிலக்குகளை அங்கீகரித்துள்ளேன். ஒரு உயிருக்கு இன்னல் விளைவிக்காமலிருக்கக்கூடிய எல்லா வழிகளையும் முயன்று பார்த்து அது முடியாத பட்சத்தில் மட்டுமே இந்த அங்கீகாரங்களை மிதமாக உபயோகிக்க வேண்டும்.§

சூத்திரம் 37

உண்மையை நாடுவோர் ஆபத்து வேளையின் போது தன்னுயிரையோ அடுத்தவர் உயிரையோ காப்பாற்றும் பொருட்டு ஒரு வீரனாகச் சமுதாயத்தைத் தற்காக்கவும் சமூக ஊழியராக சேவையிலிருக்கும் போது ஒரு உயிரைக் காயப்படுத்தவோ கொல்லவோ முடிவு செய்யலாம். இது முதல் விதிவிலக்காகும்.§

சூத்திரம் 38

உண்மையை நாடுவோர் தம் பாதுகாப்பிலிருக்கும் மனிதர், ஜீவராசிகளின் உயிரையும் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு ஊறுவிளைவிக்கக் கூடிய புழு நுண்ணிய கிருமிகள் போன்ற கீழ் ஜீவராசிகளின் உயிரைப் போக்க முடிவு செய்யலாம். இது இரண்டாம் விதிவிலக்கு.§

சூத்திரம் 39

உண்மையை நாடுவோர் வீட்டையோ, ஊரையோ, நாட்டையோ தற்காக்கும் பொருட்டு கொடிய விலங்குகளையும், கொடிய ஜந்துக்களையும், நோய்களைப் பரப்புவதன் மூலம் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிரட்டலாய் இருக்கும் ஜீவராசிகளையும் அழித்தொழிக்க முடிவு செய்யலாம். இதுவே மூன்றாவதும் இறுதியுமான விதிவிலக்காகும்§

சூத்திரம் 40

உண்மையை நாடுவோர் கொல்லாமை எனும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டினுள் வசிக்கக் கூடிய சிறு ஜந்துக்களைக் கூடக் கொல்லாமல் அவை வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டும். §