Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

ஆசிரியர் முன்னுரை

image

மாணவர்களுக்கு: சைவ இந்து சமய நான்காம் புத்தகம் உங்களை வரவேற்கிறது. இந்த வண்ணப் புத்தகம் உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் என நம்புகிறோம். உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்து சம்பந்தமான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வளர்ந்து விட்டீர்கள், இந்து சமயத்தின் ஒரு பகுதியாகிய சைவசமயத்தைக் கற்கத் தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் சிவபெருமான், கணேசப் பெருமான் மற்றும் முருகப் பெருமான் ஆகியோரைப் பற்றிப் படிப்பீர்கள். நமது முக்கிய தத்துவங்களான கர்மவினை, தர்மம் மற்றும் மறுபிறவி பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். கோயில் எப்படி செயல்படுகிறது, மற்றும் தெய்வங்கள் நமக்கு எப்படி உதவுகிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள். நமது சைவசமய அருளாளர்கள் மற்றும் குருமார்களைப் பற்றி ஆழ்ந்து தெரிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடைய ஜபம், தியானம், உறுதி மொழியின் பயன் ஆகியவை பற்றிக் கற்பிக்கப்படும். ஏன் நல்ல கர்மவினைகள் செய்ய வேண்டும்? என்பதற்கான சமய ரீதியிலான காரணங்களையும் மற்றும் சகமாந்தருடன் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் முக்கியத்துவம், உறுதியான இந்துவாக இருத்தல் மற்றும் உறுதியான சமயம் சார்ந்த இல்லம் முதலியவற்றைக் கற்பீர்கள். பள்ளியில் படிக்கும் பாடங்களை முழுமூச்சாகப் படிப்பது போன்று உங்கள் சமயத்தையும் பயிலுங்கள். நமது சமயப் பயிற்சி, நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்கள் முதலியவற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள். §

ஆசிரியர்களுக்கு: இப்புத்தகம் 8 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக எழுதப்பட்டது. நீங்கள் ஓர் ஆசிரியராதலால் இப்பாடப் புத்தகத்தில் வரும் அனைத்து வார்த்தைகளையும் உங்கள் மாணவர்கள் விளங்கிக் கொள்வதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்கள் இரு மொழி தெரிந்தவர்களாயின் அம்மொழிகளில் எழுதப்பட்டவற்றையும் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தங்கள் அவர்கள் மனத்தில் நன்கு பதிந்து கொள்ள ஏதுவாயிருக்கும், மாணவர்களைக் கேள்விகள் கேட்கத் தூண்ட வேண்டும். கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியாவிடில் எனக்கு எழுதினால் உடனடியாகப் பதில் தருகிறேன். இப்புத்தக சமபந்தமாக மேலும் அதிகத் தகவல் வேண்டுமாயின் www.himalayanacademy.com/teaching/. என்ற அகப்பக்கத்துக்குச் சென்றால் இதில் கிடைக்கும் தகவல்கள் உங்கள் போதனைக்கு உதவியாயிருக்கும். இவ்வகப் பக்கத்தில் ஆசிரியர் கையேடு, மேலும் அதிகத் தகவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீடியோ கெசட் முதலியன கிடைக்கும். சிங்கப்பூர், மலேசியா, மொரிஸியஸ் நாடுகள் உட்பட பெரும்பாலும் சமய வகுப்புகள் நடைப்பெறும் நாடுகளுக்காக இப்புத்தகம் ஆங்கிலம், தமிழ், மலாய், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்படி ஆலோசனை கூறப்படுகிறது. இதன்வழி அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதோடு போதனை உபகரணங்களையும் பரிமாறிக் கொள்ளலாம். §

பெற்றோர்களுக்கு: இது உங்கள் குழந்தை மேற்கொள்ளும் மிக முக்கியமான கல்வியாகும். இது ஆதியந்தமில்லாத நிரந்தரமான சனாதன தர்மம் எனப்படும் இந்து சமயக் கல்வியாகும். சில பெற்றோர்கள் தங்கள் குழ்ந்தைகளுக்குச் சமயக் கல்வி முக்கியமில்லை என்றும் தங்கள் குழ்ந்தைகள் பள்ளிப் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்தினால் போதும் என்றும் நினைக்கின்றனர். இச்சமய பாடத்தை அறிவார்ந்த முறையில் அணுகினால் இந்நூலில் இந்து சமயக் கருத்துக்கள் நடைமுறைக் கேற்றவாறு கூறப்பட்டுள்ளதை அறிவார்கள். மாணவர்களின் பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதைத் தெரிந்து கொள்வர். குழந்தைகளுக்கு அதிக அளிவிலான மகிழ்ச்சியும் குறைந்த மன அழுத்தம் கொண்ட சமமான குழ்ந்தைப் பருவ வாழ்க்கையையும் தரும். தயவு செய்து உங்கள் குழந்தை நான்காம் புத்தகத்திலுள்ள எல்லா பாடங்களையும் படிக்க ஊக்கமூட்டுங்கள். உங்களுக்கு நேரமிருப்பின் அகப்பக்கத்துக்குச் சென்று ஆசிரியருக்கான பாட சம்பந்தமானவற்றைப் படித்துப் பாருங்கள். உங்கள் குழந்தையின் ஆன்மாவுக்கும் மனத்துக்குமான பயிற்சி சமயத்தைத் தெரிந்து கொள்ளவும், தங்கள் அறிவைப் பயன்படுத்தி பின்பற்றவும் வாழ்க்கையில் அதிகத் துன்பத்தையும் கெட்ட பண்புகளையும் ஏதிர்நோக்கும் போது தெய்வீகப் பாதையில் செல்ல இப்பாடங்கள் தயார்ப்படுத்துகிறதென்றும் நினைத்துப்பாருங்கள். இப்பாடங்களைப் படிக்க ஊக்கமூட்டுகள், அவர்களது கல்விக்கு நீங்கள் உதவுகள். இந்நடவடிக்கையினால் ஒரு வேளை நீங்கள் கூட புதியவனவற்றைக் கற்றுக் கொள்ளலாம். §

image§

சற்குரு போதிநாதா வேலன் சுவாமி
நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையின்
163 வது ஜகதாச்சாரியார்
குருமகாசந்நிதானம் கவாய் ஆதீனம் ஹவாய்,
ஐக்கிய அமெரிக்கா USA
§