Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

அருஞ்சொற்றொடர் அகராதி

image

அஞ்சலி முத்திரை: மரியாதை செலுத்தும் அடையாளம். இந்து முறையிலான வாழ்த்து. மார்பின் முன் இரு கைகளையும் வைத்து வணக்கம் அல்லது நமஸ்காரம் கூறுவது போன்றது. §

அத்த யோகம்: உடலையும் மனத்தையும் அமைதிப்படுத்த தியானத்துக்கு உதவ மேற்கொள்ளப் படும் உடல் மற்றும் மனப் பயிற்சிகள். §

அந்தர்லோகம்: தேவர்கள் வாழும் இரண்டாவது உலகம் அல்லது சூக்கும் தளம். இந்த உலகத்தில் தான் நாம் கனவு காண்கிறோம். §

அப்பர்: சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். அப்பர் என்றால் தந்தை என்று பொருள். §

அவ்வையார்: பு.பி.முன் 200இல் வாழந்த தமிழ்ப் பெண் புலவரும் அருளாளருமாவார். இவர் கணேச மற்றும் முருக பக்தையாவார். §

அறிவு ஜீவி: மேல்நிலையில் அனைத்தும் அறிந்தவர். ஆன்மாவின் உள்மனம். §

அஹிம்சை: வன்முறையற்ற செயல். மற்றவர்களுக்கு எண்ணத்தால், பேச்சால் மற்றும் செயலால் துன்பம் தராதிருத்தல் §

ஆகமம்: பழங்கால சமஸ்கிரத மொழியிலுள்ள புனித நூல். ஆகமத்தில் கோயில் சடங்குகள், கோயில் கட்டும் முறை, தத்துவங்கள் மற்றும் யோகம் முதலியன உள்ளன. §

ஆதீனம்: சற்குருவும் அவரின் வழிகாட்டலில் இருக்கும் சந்நியாசிகளும் வாழுமிடம். §

ஆளவெட்டி: குருதேவர் இளவயதில் தங்கியிருந்த ஸ்ரீலங்காவின் வடக்கிலுள்ள ஒரு சிறு கிராமம். §

ஆசீர்வாதம்: கடவுளின் கிருபையால் (அன்பால்) கிடைக்கப் பெறும் பரிசு. §

ஆராத்தி: வணங்குவதற்காகப் பூசையின் போது விக்கிரகத்துக்கு முன்னால் சூடம் அல்லது ஜோதி காட்டப்படுவது. §

ஆலமரம்: பொதுவாக இந்தியாவில் காணப்படும் பெரிய மரம். இம்மரத்தின் கிளைகளிலிருந்து விழுதுகள் (வேர்கள்) பூமியை நோக்கி வளரும். §

ஆன்மா: நம்மில் அதி ஆழத்தில் உள்ள ஒன்று. அது உண்மையானது. இறவா இயல்புடையது. இறைவனால் படைக்கப்பட்டது. சமஸ்கிரதத்தில் ஆத்மா எனப்படும் §

ஆஸ்ரமம்: குரு அல்லது சந்நியாசிகள் வாழும் இடம். §

இந்து: இந்து பெயர் கொண்டு இந்து சமயத்தைப் பின்பற்றுபவர். §

இந்துசமயம்: சமஸ்கிரதத்தில் சனாதன தர்மம் என்று அழைக்கப்படும். ஆதியந்தமில்லாத சமயம் என்று பொருள். மிகப் பழமையான சமயம். ஒரு ஆயிரம் கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள். §

இமாலயம்: உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர் கொண்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் காஷ்மீர் அஸ்ஸாம் வரை 2400 கி.மீ தூரம் வியாபித்துள்ளது. §

இமாலயரிஷி: நந்திநாத சம்பிர தாயத்தின் முதன் முதலாக அறியப்பட்ட நவீன குரு. §

இராமேஸ்வரம்: இந்தியாவின் தெற்கு முனையிலுள்ள சிவாலயம். இராம பிரானால் ஸ்தாபிக்கப்பட்டது. §

இறைவன்: சிவபெருமான், முழுமுதற் கடவுள். இப்பிரபஞ்சத்தைப் படைத்து அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர். கடவுளாகவும் கணேசப் பெருமானாகவும் முருகப் பெருமானாகவும் இருக்கிறார். §

இறைவி: இறைவனைப் பெண்ணாகக் காணுதல். உண்மையாக இறைவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல பெண்பாலைக் குறிப்பிடக் கடவுளைத் தாயே எனப்படுகிறது. §

இறைவன் கோயில்: ஐக்கிய அமெரிக்காவின் ஹாவாயிலுள்ள காவாய் தீவில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த சிவாலயம். மேற்கு நாடுகளில் கட்டப்பட்ட கோயில்களில் கைகளால் செதுக்கப்பட்ட முதல் கருங்கல் கோயில் இதுவேயாகும். §

இஸ்லாம்: அரோபியாவில் 625 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது நபியால் நிறுவப்பட்டது. §

உயர்நிலை: மிக மேலானது. மிகப் பெரியது. உயர்வாக மதிக்கத் தூண்டும். §

உறுதிமொழி: இனிய பயன்கள் அடைய திரும்பத் திரும்ப உணர்ச்சியோடு கூறப்படும் இனிய வாக்கியம். §

உஜ்ஜெய்ன்: மத்திய இந்தியாவில் மகா காளீஸ்வரர் சிவாலயம் உள்ள ஒரு நகரம். §

ஒடிசி: இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பாரம்பரிய நடனம். §

ஓம்: புனித ஓசை. திருமறைகள் மந்திரங்கள் ஓதுவதற்கு முன்னர் கூறப்படும் புனித ஓங்கார நாதம். §

ஓம் கம் கணபதியே நம: “கணபதியே போற்றி” கணேசப் பெருமானுக்குரிய புனித மந்திரம். §

கடையிற் சுவாமி: செல்லப்ப சுவாமியின் குரு. அவரது காலம் 1820 - 1875. அவர் இந்தியாவிலுள்ள பங்களூரிலிந்து ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்துக்கு வந்தவர். §

கணபதி: கணங்களின் தலைவர். கணேசப் பெருமானுக்கு மற்றொரு பெயர். கணங்கள் எனப்படுவோர் சிவபெருமானுக்கு உதவியாக இருக்கும் தேவர்கள். §

கணேசர்: யானைமுகம் கொண்ட தெய்வம், சிவபெருமானின் மூத்தமகன், இந்து மதத்தின் எல்லா பிரிவினரும் கணேசப் பெருமானை மதிக்கின்றனர். அவர் எப்போதும் முதல் வணக்கத்துக்குரியவர். §

கணேச சதுர்த்தி: கணேசப் பெருமானின் பிறந்த நாள். ஆகஸ்டு அல்லது செப்டெம்பர் மாதத்தில் வரும் பத்து நாள் திருவிழா. பத்தாவது நாளை அவருக்கு விடைகொடுத்து அனுப்பும் நாளாக கணேச விசார்ஜனம் என்று சொல்லப் படுகிறது. §

கர்மவினை: ஒரு செயலின் பலன் அல்லது நல்வினை தீவினையின் பயன். காரண காரிய கோட்பாடு. §

கலை: கலைத்திறன் கொண்ட கலாச்சாரத்தில் வாழ்தல். எடுத்துக்காட்டாக பாடல், ஆடல், மாலை கட்டுதல் போன்ற கலைகள். §

காசிவிஸ்வநாதா: இந்தியாவில் பனாரசிலுள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயம். §

காரைக்கால் அம்மையார்: ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் அருளாளர். அவர் எளிமையாக வாழந்து யோகப் பயிற்சி செய்து வந்தார். §

காவடி: ஆன்மீகப் பரிகாரம் செய்தல். வளைந்த அலங்கரிக்கப்பட்ட காவடியின் இரண்டு முனைகளிலும் பால் செம்பு கட்டப்பட்டு முருகப் பெருமானின் விழாவில் கோயிலுக்குக் (தை பூசம்) கொண்டு செல்லுதல். §

காவாய் இந்து ஆஸ்ரமம்: காவாய் ஆதீனம், இந்து துறவி மடம், கோயில் வளாகம் அனைத்தும் ஒன்றாக சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹவாயில் நிறுவப்பட்டது. §

கான்ஃபியூசினிசிய மதம்: சீனாவில் பு.பி.மு 500 ஆண்டுகளுக்கு முன்னால் கான்ஃபியூசினிசியஸ் அவர்களால் நிறுவப்பட்ட தத்துவங்களும் நன்னெறிகளும் கொண்ட மதம். §

கிராண்ட் பேசின்: மாரிசியஸின் மத்தியிலுள்ள இயற்கையாய் அமைந்துள்ள இயற்கையாய் அமைந்துள்ள ஏரி. மகாசிவராத்தியின்போது இந்துக்கள் தலயாத்திரை போவார்கள். §

கிறிஸ்துவம்: இயேசுநாதரின் போதனைகள் அடிப்படையாகக் கொண்ட மதம். §

குங்குமம்: சிவப்பு நிறத்தூள். இரு புருவங்களுக்கு இடையில் பொட்டாக அணியப்படுவது. §

கும்பமேளா: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு முக்கிய இடங்களில் இந்துக்கள் கூடுமிடம். கும்பமேளா பிராயக், நாஸிக், ஹரித்துவார். உஜ்ஜெயினி ஆகிய நான்கு இடங்களிலும் மாறி மாறி வரும். பிராக்கில் 20 கோடி மக்கள் கூடுவர். இவ்வுலகத்தில் மிக அதிகமான மக்கள் கூடும் நிகழ்வு இது ஒன்றேயாகும். §

கும்பளவானை கோயில்: ஸ்ரீலங்கா ஆலவேட்டியிலுள்ள சக்தி வாய்ந்த கணேசர் ஆலயம். §

குரு: ஓர் ஆசிரியர். மிக மேலான அருளாளாரும் ஞானியுமாவார். நமக்கு சமயம் போதிப்பவர்.§

குருதேவா: குருவை அன்பாக குருதேவா என்று அழைத்தல். சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமியை குருதேவா என்று அழைப்பார்கள். §

குருபரம்பரை: குருபரம்பரையின் தொடர்ச்சி. ஆன்மீகச் சக்திகள் ஒரு குருவிடமிருந்து அடுத்த குருவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. §

குருபூசை: குருவின் பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து காணிக்கை செலுத்தி வழிபடுவது. §

குருபூர்ணிமா: நமது குருவுக்கு பெருமதிப்பளிக்கும் நாள். இது ஜீலை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளன்று கொண்டாடப்படும். §

கேரளா: இந்தியாவின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு மாநிலம். §

கைலாசம்: இமயமலை சிவபெருமானுக்குரிய புனித தலம். §

கைலாசப் பரம்பரை: குருதேவரின் குரு பரம்பரை. போதிநாதா மற்றும் அவருக்கு முன்னால் இருந்தவர்கள். §

கைவினைப் பொருட்கள்: மனிதன் தன் கைகளால் செய்யப்படும் பொருட்கள். உதாரணமாக தெய்வ விக்கிரகம். §

கோயில்: வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடம். கடவுளின் இல்லம். §

கோரக்சநாதர்: ஏறக்குறைய 950 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவிலும் நேப்பாளிலும் வாழ்ந்த புகழ் பெற்ற ஒரு சைவ குரு. §

கோலம்: விழாக்காலங்களில் வண்ண வண்ண அரிசியாலும் அரிசி மாவாலும் அலங்காரமாகத் தரையில் போடப்படும் ஒரு வடிவமைப்பு. §

சகிப்புத் தன்மை: ஒருவரது சொந்தப் போதனையிலிருந்து மாறுபட்டிருக்கும் மற்ற மத நம்பிக்கை மற்றும் போதனைகளை விருப்பத்தோடும் சகிப்புத் தன்மையுடனும் ஏற்கக் கூடிய மனப்பான்மை. §

சக்தி: “ஆற்றல்” சிவபெருமானின் ஆக்ககரமான சக்தி அல்லது ஆற்றல். சாக்த மதத்தினர் சக்தி எனும் பெண் தெய்வத்தை வழிபடுகின்றனர். சைவசமயத்தில் இவ்வாற்றலை சிவபெருமானின் ஆற்றலாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் ஆணாகவும் பெண்ணாகவும் திகழ்கிறார். §

சத்சங்கம்: மற்ற இந்து சமய மக்களோடு ஒன்று கூடுதல். §

சந்தோஷம்: "மனநிறைவுப் புன்னகை" ஒருவரிடம் உள்ளத்தைக் கொண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டிருத்தல். §

சந்நியாசி: ஓர் இந்து துறவி. குடும்பம், செல்வம், தொழில் ஆகியவற்றை துறந்து தன் வாழ்நாளை சமய வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்வார். வேறொரு சந்நியாசி அல்லது பெரும்பாலும் ஒரு குருவிடம் தீட்சை பெற்ற பிறகு அவர் சந்நியாசி ஆவார். §

சமயாச்சாரியார்கள்: நான்கு அருளாளர்கள். அவர்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர். §

சம்ஸ்காரம்: ஒருவர் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கான பல சடங்குகள். பெயர் சூட்டுவிழா, முதல் திட உணவு ஊட்டுதல், காதுகுத்துதல் வித்தியாரம் அல்லது கல்வி தொடங்குதல், பூப்படைதல், திருமணம் மற்றும் சவ அடக்கம் முதலியன. §

சமார்த்தர்: சமார்த்த மதத்தைப் பின்பற்றுவர். இந்து சமயத்தின் நான்கு முக்கிய பிரிவுகளில் ஒன்று. §

சமார்த்த மதம்: இந்து சமயத்தின் நான்கு முக்கியப் பிரிவுகளில் ஒன்று. §

சமஸ்கிரதம்: இந்தியாவின் பழமையான மொழி. பெரும்பாலான இந்து சமய திருமறைகள் இம்மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. §

சம்பந்தர்: குழந்தை அருளாளர். பல தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார். இவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். §

சற்குரு: ஒரு புகழ்மிக்க சமய ஆசிரியர். கடவுளைக் கண்டவர். மற்றவர்களைச் சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். §

சனாதன தர்மம்: என்றுமுள்ள மதம் அல்லது நிலைத்த மார்க்கம். சமஸ்கிரத மொழியில் இந்து சமயத்துக்குள்ள மரபுவழி பெயர். §

சாக்தர்கள்: சாக்த மதத்தைப் பின்பற்றுவோர். இந்து சமயத்தின் நான்கு முக்கியப் பிரிவுகளில் ஒன்று சாக்த மதம். §

சாக்த மதம்: முழுமுதற் கடவுளைத் தெய்வத் தாயாக வணங்குபவர்கள் சாக்த மதத்தினர். இந்து சமயத்தின் நான்கு முக்கியப் பிரிவுகளில் ஒன்று. §

சாதனை: சமய மற்றும் ஆன்மீகக் கட்டொழுங்கு. கடவுளின் பெயரை திரும்பத் திரும்ப ஓதுதல் மற்றும் தியானம் செய்தல். §

சாது: கடவுளைக்காண முயற்சியில் இருக்கும் ஒரு புனிதர். §

சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்: இருபாதம் நூற்றாண்டு இறுதியில் தென் இந்தியாவின் பிரசித்திப் பெற்ற சைவ குருக்கள். §

சிதம்பரம்: தென் இந்தியாவின் புகழ் மிக்க சிவ நடராஜ ஆலயம். §

சிவபெருமான்: முழுமுதற் கடவுள் அல்லது அனைத்திற்கும் மேலானவர். பிரபஞ்சத்தைப் படைத்தவர். §

சிவதொண்டு: "சிவபெருமானுக்குச் சேவை" பிரதிபலன் எதிர்ப் பார்க்காமல் சேவை செய்தல். §

சிவலிங்கம்: அடிப்பக்கம் வட்டவடிவில் அமைந்துள்ள கடவுளுக்கான ஓர் அடையாளம் (விக்கிரகம்). இது கடவுள் பெயருக்கும் உருவத்துக்கும் அப்பாற்பட்டவர் என்பதைக் குறிக்கிறது. §

சிவலோகம்: சிவபெருமானின் உலகம். தெய்வங்களும் உயர்நிலை எய்திய ஆன்மாக்களும் இங்கே உண்டு. சொர்க்கலோகத்தின் உயர்ந்த தளம். §

சீக்கிய மதம்: 500 ஆண்டுகளுக்கு முன் குருநானக் அவர்களால் நிறுவப்பட்டது. §

சுந்தரநாதர்: திருமூலரின் உண்மை பெயர். §

சுந்தரர்: நான்கு முக்கிய அருளாளர்களில் ஒருவர். பு.பி.பி 800 இல் வாழ்ந்தவர். §

சுப்பிரமுனியசுவாமி, சற்குரு சிவாய: சற்குரு (1971 - 2001) நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையைச் சார்ந்தவர். §

சுருதி: கேட்கப்பட்டது என்று பொருள். இந்து சமயத்தின் வேதங்களும் ஆகமங்களும் வெளிப்படுத்தப்பட்ட புனித நூல்கள் ஆகும். §

சுவாமி: ஒர் இந்து துறவி. திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்.§

சுவாமி சிதானந்த சரஸ்வதி: இந்தியாவில் ரிஷிகேசில் வாழும் நவீன அருளாளர். §

சுற்றுச் சுழல்: மனித உடலைச் சுற்றுயுள்ள நுண்ணுணர்வுள்ள சக்தி. இதைச் சிலரால் மட்டுமே காணமுடியும். §

சூக்கும் உலகங்கள்: காண முடியாத அந்தர்லோகம் மற்றும் சிவலோகம். §

செல்லப்ப சுவாமி: ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் (1840-1915) வாழ்ந்த சற்குரு. சாது யோகசுவாமியின் குரு இவர். §

சேவை: "தொண்டு" பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு நன்மை தரும் வேலையைச் செய்தல். §

சைவம்: சைவ சமயத் தொடர்புடையது அல்லது பின்பற்றுபவர்கள். இவ்வுலகில் 400 கோடி சைவர்களும் சைவத் தொடர்பு உள்ளவர்களுமாக இருக்கிறார்கள். §

சைவசமயம்: சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதம். §

சைவர்கள்: இந்து சமயத்தின் நான்கு முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக சைவ சமயத் தொடர்புடையவர்கள். §

தர்மம்: பிரபஞ்சத்தின் இயல்பான நிலை. பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கு உள்ள கடவுளின் சட்டம். §

தம்மபதம்: புத்தமதத்தின் மிக முக்கியமான புனித நூல். §

தமிழ்: தமிழர்களின் பழமையான திராவிட மொழி. சுமார் 60 கோடி மக்கள் இம்மொழியைப் பேசுகிறார்கள். §

தமிழ்நாடு: தென் இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம். §

தாவோ மதம்: பழுமையான சீனர்களின் மதம். §

திருக்குறள்: பு.பி.மு. 200இல் வாழ்ந்த திருவள்ளுவர் ஒழுக்க நெறிகள் பற்றிப் பாடியுள்ளார். இறைவன், நன்னெறி, தர்மம், நன்னடத்தை, செல்வம், அரசு, ஆசை முதலியவற்றைப்பற்றிப் பாடியுள்ளார்.§

திருக்கதீஸ்வரர்: வட ஸ்ரீலங்கா கடற்கரையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம். §

திருக்கோவையார்: அருளாளர் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பு. §

திருநாவுக்கரசர்: நான்கு சமய குரவர்களில் ஒருவர். இவர் அப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் மீது அநேகப் பாடல்கள் பாடியுள்ளார். §

தியானம்: அமைதியாக அமர்ந்து, ஒரே சீரான சுவாசம்விட்டு குறிப்பிட்ட ஒன்றின் மீது குறிப்பிட்ட நேரம் ஆழ்ந்து கவனம் செலுத்துதல். §

திருச்செந்தூர்: இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோயில். §

திருஞானசம்பந்தர்: நான்கு சமயக் குரவர்களில் ஒருவர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானக்குழந்தை. §

திருநீறு: புனித நீறு. குறிப்பாக அனைத்து சைவ சமயத்தவர்களுக்கும் புனிதமானதாகும். பசுஞ்சாணம், பால், நெய், தேன் போன்றவற்றோடு மற்றும் சில பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது இது தூய்மையைக் காட்டுகிறது. §

திருமுறை: தென் இந்திய சைவ அருளாளர்கள் பாடிய பாடல் தொகுப்பு. §

திருமூலர்: நந்திநாத சம்பிரதாயத்தின் முதல் குருக்களில் ஒருவர். இவர் பு.பி.மு. 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் திருமந்திரம் எழுதினார். §

திருவாசகம்: அருளாளர் மாணிக்கவாசகரால் பாடப்பட்ட பாடல் தொகுப்பு. §

திருவிழா: விஷேசமான சமய விழா. §

திலகம்: இந்துக்களால் நெற்றியில் அணியப்படும் ஓர் அடையாளம். இதை பொட்டு என்றும் அழைப்பார்கள். §

துறவி: சந்நியாசி அல்லது சந்நியாசினி. திருமண மாகாத ஆண் அல்லது பெண் துறவிகள் வாழ்நாள் முழுதும் சமயத் துறவு வாழ்க்கை வாழ்வர். §

துறவு வாழ்க்கை: ஆடம்பரம் அல்லது சுகபோகம் இல்லாமல் வாழ்தல். §

தெய்வங்கள்: சிவபெருமானால் படைக்கப்பட்ட கணபதி முருகன் போன்ற அதிமுன்னேற்றம் கொண்டவர்கள். §

தேவர்: இவர்கள் சூக்கும் உலகின் ஒளி உடல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெளதிக உடல் இல்லை. அந்தர் (சூக்கும்) லோகத்தின் மேல் தளத்தில் வாழ்கிறார்கள். §

தேவாரம்: சமயக்குரவர்களில் மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது. §

தை பொங்கல்: ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் வரும் நான்கு நாள் விழா. இது முதல் நெல் அறுவடை விழாவாகும். §

தை பூசம்: ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் வரும் முருகனுக்குரிய பெரிய விழா. §

தொடர்ச்சியான: இடைவிடாத, விட்டுவிடாமல் தொடர்ந்த என்று பொருள். §

தோன்றும் சக்தி: கண்டு உணரக் கூடிய சக்தி. §

நந்திநாதா: நந்திநாத சம்பிரதாயத்தின் முதல் குரு. பு.பி.மு. 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.§

நமசிவாய: சைவசமயத்தவர்களுக்கான மிகமுக்கிய புனித மந்திரம். "சிவ பெருமானே போற்றி" என்பது இதன் பொருள். யஜூர் வேதத்தில் உள்ளது. §

நமஸ்காரம்: இந்து முறையிலான வாழ்த்துக் கூறுதல். மார்புக்கு முன் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து சற்று தலை குனிந்து வணங்குதல். §

நமஸ்தே: "உங்களுக்கு மதிப்புக்குரிய வாழ்த்துகள்" பாரம்பரிய வாழ்த்து கூறும் முறையாகும். §

நர்மதா: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பாயும் புனித நதி. §

நல்லூர்: ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்து பிரசித்திப் பெற்ற முருகப் பெருமான் கோயில். §

நோன்பு: குறிப்பிட்ட காலத்துக்கு உணவு சாப்பிடுவதில்லை அல்லது குறிப்பிட்ட உணவு அல்லது பானம் அருந்துவதில்லை.§

பக்தி: சமயம் சார்ந்த அன்பு அல்லது பக்தி. §

பசுபதிநாதர்: நேப்பாளிலுள்ள சிவபெருமானின் முக்கிய ஆலயம். §

பெங்களூர்: தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு நகரம். §

பஞ்சாட்சரம்: ஐந்தெழுத்து மந்திரம் "நமசிவாய" சைவசமயத்தின் உன்னத மந்திரம் §

பத்துமலை: மலேசியாவில் கோலாலம்பூருக்கு வெளியே சுமார் 12 கி.மீ தூரத்திலுள்ள குகைக் கோயில் இது ஒரு பிரசித்திப் பெற்ற முருகன் கோயில். §

பரம்பரை: வழி வழி வரும் குரு பரம்பரை. தீட்சை வழங்குவதன் மூலம் ஆன்மீகச் சக்தியை ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொடுத்தல். §

பரிகாரம்: செய்த தவற்றுக்குக் கழுவாய் தேடுதல். §

பழனி மலை: தமிழ் நாட்டிலுள்ள முருகன் கோயில். §

பஜனை: ஒருவர் அல்லது பலர் சேர்ந்து பாடும் எளிமையான பக்திப் பாடல்கள். பெரும்பாலும் ஒருவர் பாடிய பின்னர் குழுவினர் பின்பற்றி அதையே பாடுவர். §

பார்வதி: மலைமகள். பிரபஞ்சத் தாய்க்குள்ள பல பெயர்களில் இதுவும் ஒன்று. §

பிரசாதம்: இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவு (நைவேத்தியம்). பின்னர் பக்தர்கள் பகிர்ந்து உண்ணுவர். §

புத்தமதம்: கௌதம புத்தர் எனப்படும் (பு.பி.பி 624-544) சித்தார்த்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட மதம். §

பூசை: இறைவனை வழிபட நடத்தப்படும் சடங்கு. மந்திரம் ஓதுதல், ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, நீர், நைவேத்தியம் (உணவு), மலர்கள் முதலியவற்றோடு சமஸ்கிரத சுலோகங்களும் ஓதப்படும். §

பூலோகம்: பௌதிக உலகம். பௌதிக உடலோடு நாம் வாழும் உலகம். §

பொட்டு: நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் குங்குமம் அல்லது சந்தனத்தால் சிறிய வட்டமாக அணியப்படுவது. இப்பொட்டை அணிபவர் ஓர் இந்து என்பதற்கு அடையாளமாகும். §

போகரிஷி: பழனி மலையில் வாழ்ந்த பிரசித்திப் பெற்ற சைவ அருளாளர். §

போதிநாத வேலன் சுவாமி: கைலாச பரம்பரையின் தற்போதைய குரு. சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிக்குப் பிறகு அவர் பீடத்தை அலங்கரிப்பவர். இப்பரம்பரையின் 163 வது குரு. §

மகரிஷி: ஒரு மகான். சிறந்த அருளாளர். §

மகாகாளீஸ்வார்: இந்தியாவில் உஜ்ஜெயினியில் உள்ள சிவாலயம்.§

மகாசிவராத்திரி: ஆண்டின் மிகப் பெரிய சிவனுக்குரிய விழா. பிப்ரவரி-மார்ச் மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் புதுப் பிறையில் கொண்டாடப்படும். நோம்பு இருந்து இரவு முழுதும் கண்விழித்து வழிபாடு செய்யப்படும். §

மச்சேந்திரநாதர்: ஒன்பதாம் நூற்றாண்டில் நேப்பாளில் வாழ்ந்த நாத குரு. இவர் ஒரு அருளாளர். §

மதப் பிரிவு: ஒரு மதத்தின் முக்கியப் பிரிவுகள். §

மதுரை: தென் இந்தியாவிலுள்ள பழம்பெரு நகரம். புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இங்குள்ளது. §

மந்திரம்: திருமறையிலுள்ள சமஸ்கிரத சொல் அல்லது வாக்கியம். பூசையின் போதும், இறைவன் நமது உணவை ஆசீர்வதிக்கும் போதும், மற்றும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரும் கூறப்படும். §

மறுபிறவி: "மறுபடியும் பூதவுடல் எடுத்தல்" நமது ஆன்மா மறுபடியும் பௌதிக உடலில் பிறப்பெடுக்கும் நிகழ்வை புனர் ஜென்மம் என்று சமஸ்கிரதத்தில் கூறப்படுகிறது. §

மறைபொருள்: ஒருவர், வாழ்வின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு இறைவனோடு ஒன்றிணைய நாடுதல். §

மாணிக்கவாசகர்: இவர் ஒரு சைவ அருளாளர். இவர் ஏறத்தாழ 850ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் சிவபெருமான் மீது பாடிய அனேக பாடல்கள் திருவாசகம் எனப்படும். §

மாதா அமிர்தானந்தமாயி: நவீன கால பெண் அருளாளர். அவரிடம் வரும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் அணைத்து அருள் வழங்கிப் புகழ் பெற்றவர். §

மாரிஷியஸ்: ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைக்கு அப்பாலுள்ள ஒரு தீவு நாடு இந்நாட்டில் அதிகமான இந்துக்களும் பல கோயில்களும் உள்ளன. §

மும்பாய்: இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரம். இதன் பழைய பெயர் பம்பாய். §

முருகன்: சிவபெருமானின் இரண்டாவது மகன். கணேசப் பெருமானின் தம்பி. இவர் ஒரு மகாதேவர், யோகக் கடவுள். இந்தியாவிலும் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் இவர் வழிபடப்படுகிறார். §

மூர்த்தி: பூசையின் போது வணங்கப்படும் மூர்த்தம் அல்லது விக்கிரகம். கருங்கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். சில வேளைகளில் மரத்தாலும் ஆக்கப்பட்டிருக்கும்.
§

மூன்று உலகங்கள்: பூலோகம்-மனிதர் உலகம், அந்தர்லோகம்-தேவர் உலகம் மற்றும் சிவலோகம்-தெய்வங்களின் உலகம். §

மேற்கத்திய: பூர்வீகமாக ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவிருந்து வந்து கலந்துவிட்ட கருத்துகளும், கலாச்சாரங்களும். §

மோட்சம்: "விடுதலை" பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை. எல்லா கர்ம வினைகளும் தீர்ந்த பின் கடவுளை உணர்ந்த பின்னர் கிடைக்கும். §

யஜீர் வேதம்: நான்கு வேதங்களில் மூன்றாவது வேதம். இதில் அக்கினி வழிபாடு அல்லது யாகம் வளர்ப்பதற்கான மந்திரங்களும் கட்டளைகளும் உள்ளன. §

யாழ்ப்பாணம்: வட ஸ்ரீலங்காவின் முக்கிய நகரம். சற்குரு யோகசுவாமியின் இருப்பிடம். §

யோகம்: தியானம், சுவாசம், ஜபம், உடல் கை கால்களால் செய்யப்படும் பயிற்சிகள் போன்றவை தெய்வீக நிலையை எய்துவதற்கு யோகிகளால் செய்யப்படுகின்றன. §

யோகசுவாமி, சற்குரு: ஸ்ரீலங்காவின் பிரசித்திப் பெற்ற குரு. இவரது காலம் 1872-1964. சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிக்கு முன் இருந்தவர். §

யோகினி: யோகப் பயிற்சியில் திறமை பெற்ற பெண்.§

யோசனைக்குரிய: உணர்வுப்பூர்வமாக மற்றவர்களின் உணர்ச்சியையும் தேவையையும் எண்ணிப்பார்த்தல். §

ரியூனியன்: ஆப்பிரிக்கா கரைக்கு அப்பாலுள்ள ஒரு தீவு. பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தம். இங்கே பல இந்துக்கள் வாழ்கிறார்கள். §

ரிஷி: அறிவார்ந்த ஒரு யோகி. §

ரிஷிகேஸ்: இமாலய மலையடிவாரத்தின் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஒரு பட்டணம். இங்கு பல ஆஸ்ரமங்கள் உள்ளன. §

ருத்ராக்சம்: மரத்தில் காய்க்கும் சிவப்பு நிற விதை. சிவபெருமானுக்குரிய புனிதப் பொருள். §

வணக்கம்: நமஸ்காரம் என்று கூறுவது போல் தமிழில் வாழ்த்துக் கூறல். §

வன்முறையற்ற: அகிம்சை. உடலால், மனத்தால் மற்றும் உணர்ச்சியால் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமை. §

விக்கிரகம்: கடவுள் அல்லது தெய்வம். கல் அல்லது உலோகத்தால் ஆனது. இறைவனைக் குறிக்கும் ஓர் அடையாளம். §

விடுதலை: காண்க-மோட்சம் §

விபூதி: காண்க-திருநீறு §

விஷ்ணு: "எங்கும் நிறைந்த" வைஷ்ணவ இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள். §

வீணை: தந்திக் கம்பிகளால் மீட்டக்கூடிய இந்து இசைக் கருவி. §

வேதம்: இந்து புனித திருமறை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டது. §

வைஷ்ணவம்: விஷ்ணு பெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கக் கூடிய மதம். நான்கு முக்கிய இந்து மதப்பிரிவுகளில் இதுவும் ஒன்று. §

வைஷ்ணவர்: வைஷ்ணவ மதத்தைப் பின்பற்றுபவர். §

ஜபம்: புனித சொல் அல்லது மந்திரத்தைக் கவனமுடன் திரும்பத் திரும்பக் கூறதல். ஜபம் மௌனமாக அல்லது உரக்கக் கூறப்படும். மாலை மணிகள் 108 எண்ணும்போது கூறப்படும். §

ஜெயந்தி: "பிறந்த நாள்" ஒரு குருவின் பிறந்த நாளை குரு ஜெயந்தி என்பர்.§

ஜீடாய்ஸம்: 3,700 ஆண்டுகளுக்கு முன் கிழக்கில் நிறுவப்பட்ட யூதர்களின் மதம். இவர்களின் அடிப்படை புனித நூல் தோரா. §

ஜைனம்: இந்தியாவின் பு.பி.பி 700ஆண்டுகளுக்கு முன் இருந்த வேதத்தைக் கொண்டிராத மதம். §

ஸ்தூபி: வட்டவடிவிலான கூரையும் தரையும் கொண்ட புத்த மாடம். §

ஷிண்டோயிஸம்: ஜப்பானின் பழமையான மதம். §

ஸ்ரீலங்கா: இந்தியாவின் தெற்கு முனையிலுள்ள ஒரு தீவு நாடு. சில கோடி சைவத் தமிழர்கள் இங்கே வாழ்கின்றனர். §

குறிப்பு: பு.பி.முன் என்றால் புத்தர் பிறப்பதற்கு முன் என்று பொருள். §