Kannapiraanung Kaanaa
Siva Yogaswami
Original Script
கண்ணபிரானுங் காணா
கண்ணபிரானுங் காணாக் கழலிணை என்றும் எம்துணை ஓம்
விண்ணும் மண்ணும் ஒன்றாய்நின்ற மெய்யடி எம்துணை ஓம்
எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி எம்துணை ஓம்
நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எம்துணை ஓம்
பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எம்துணை ஓம்
மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எம்துணை ஓம்
நன்றுந்தீதுந் தானா காத நல்லடி எம்துணை ஓம்
மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எம்துணை ஓம்
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எம்துணை ஓம்
வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எம்துணை ஓம்
பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எம்துணை ஓம்
தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எம்துணை ஓம்
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எம்துணை ஓம்
சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும் எம்துணை ஓம்
தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும் எம்துணை ஓம்
அனைத்துந் தானா யாடிய அடியிணை என்றும் எம்துணை ஓம்
Transliteration
kannapiraanung kaanaak kal.alinai endrum emthunai aum
vinnum mannum ondraay nindra meyyadi emthunai aum
ennum ennam ellaam ariyum inaiyadi emthunai aum
nannum adiyaar naavil nirkum nalladi emthunai aum
pandum indrum endrum ulla paranadi emthunai aum
mandu peyyohd aadum malaradi endrum emthunai aum
nandrum theethum thaan aagaatha nalladi emthunai aum
mandrulaadum malaradi inaigal endrum emthunai aum
antham aathi illaa vadiyinai endrum emthunai aum
vantha kaalan uyirai vaangiya malaradi emthunai aum
pantha paasam neekki aanda paranadi emthunai aum
thanthai thaayaay nindra thaalinai endrum emthunai aum
ninaikkum adiyarai urukkum adiyinai endrum emthunai aum
sinattha kaalanai serukkum adiyinai endrum emthunai aum
thanattha thanathana thaandava thaalinai endrum emthunai aum
anaitthun thaanaay aadiya adiyinai endrum emthunai aum
Translation
Even Lord Kannan Did Not See
even the Lord Kannan - did not see - pair of Feet - always - our support - Aum
space and - earth and - as one - stood - Feet of Truth - our support Aum
thinking - thoughts - all - knowing - pair of Feet - our support - Aum
approaching - devotees - on the tongue - standing - Good Feet - our support - Aum
yesterday and - today and - always - God's Feet - our support - Aum
terrifying - with ghost - dancing - Flower Feet - always - our support - Aum
good and - bad also - self - not become - Good Feet - our support - Aum
in the dancing hall - Flower Feet - pair of - always - our support - Aum
ending and - begining - no - Feet pair - our support - Aum
came - Lord of Death - life - took - Flower Feet - our support - Aum
bondage - ties - removed and conquered - God's Feet - our support - Aum
father - mother thus - standing - pair of Feet - always - our support - Aum
thinking - devotees (about) - melting - pair of Feet - always - our support - Aum
furious - Lord of Death - pride and - pair of Feet - always - our support - Aum
thanattha - thanathana - dancing - pair of Feet - always - our support - Aum
everything - as Himself, thus - danced - pair of Feet - always - our support - Aum