Neeranintha Thirumeyni
Siva Yogaswami
Original Script
நீறணிந்த திருமேனி
நீறணிந்த திருமேனி பொலிந்து தோன்றும்
நெற்றிமேற் கண்தோன்றும் மதியந் தோன்றும்
ஆறணிந்த சடைதோன்றும் அம்மை தோன்றும்
அரைக்கசைத்த புலியாடை அசைந்து தோன்றும்
ஏறமர்ந்த எழில்தோன்றும் இசையுந் தோன்றும்
எடுத்ததிருப் பதந்தோன்றும் மழுமான் தோன்றும்
பேறளிக்குந் திருக்கரத்தின் பெருமை தோன்றும்
பிரியாமல் என்னையாள் பெருமா னார்க்கே
கறுத்திருண்ட கண்டத்தின் பெருமை தோன்றும்
கதிகாட்டுங் கண்ணிணைகள் கலந்து தோன்றும்
செறுத்தவர்தம் புரமட்ட சிரிப்புத் தோன்றும்
தேவர்கணம் சூழ்ந்திருக்கும் சிறப்புத் தோன்றும்
ஒறுத்தவர்த மென்பெல்லா முடம்பிற் றோன்றும்
ஒளிதோன்றும் ஓங்கார வாசி தோன்றும்
சிறுத்தவிடை யுமையாளோர் பாகந் தோன்றும்
சிவசிவா சீவன்சிவ னெனக்கண் டேனே
Transliteration
neeranintha thirumeyni polinthu thohndrum
nettrimeyr kan thohndrum mathiyan thohndrum
aaranintha sadai thohndrum ammai thohndrum
araikkasaittha puliyaadai asainthu thohndrum
eyramarntha el.il thohndrum isaiyum thohndrum
eduttha thiruppatham thohndrum mal.umaan thohndrum
peyralikkum thirukkaratthin perumai thohndrum
piriyaamal ennaiyaal perumaanaarkkey
karutthirunda kandatthin perumai thohndrum
gathi kaattung kanninaigal kalanthu thohndrum
serutthavar tham puramatta sirippu thohndrum
theyvar ganam sool.nthirukkum sirappu thohndrum
orutthavartha menbellaam udambil tohndrum
oli thohndrum ohngaara vaasi thohndrum
sirutthavidai umaiyaalohr paagan thohndrum
sivasivaa seevan sivanena kandeyney
Translation
Ash Wearing Holy Body Shining
ash wearing - Holy Body - shining - will appear
on the forehead - eye - will appear - moon also - will appear
wearing the river - matted locks - will appear - mother - will appear
around the waist - tigerskin - moving - will appear
seated on the bull - beauty - will appear - music also - will appear
picked up - Holy Foot - will appear - axe and deer - will appear
boon granting - of the Holy Hands - greatness - will appear
inseparable - ruling me - to the Lord, indeed!
black and darkened - of the throat - greatness - will appear
refuge - showing - pair of eyes - permeating - will appear
prideful people - their - to curtail - smile - will appear
devas - group - surrounded by - uniqueness - will appear
humble people - all the love - in the body - will appear
light - will appear - Om - breath - will appear
small waisted - Uma who is One - Part of Him - will appear
Siva Siva! - life - is Siva, thus - I saw, indeed!