To attend worship at Kadavul Hindu Temple make a reservation here
FRONT GROUNDS ARE OPEN DAILY FROM 9AM to 12PM WITHOUT A RESERVATION

Iruvarum Theydi


 • Genre: natchintanai Deity: Siva
 • Artists: Mrs. Meena Thavaratnam
 • Original Script

  இருவருந் தேடி

  இருவருந் தேடிக் காணா இறைவ னென்போ லுருத்தாங்கி
  இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னா னிவனென்ன
  ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த முகத்தினராய்
  ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு மிலையென்று
  அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் கப்பாலாம்
  அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி யில்லாச்
  சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில் மாட்டி விட்டான்
  துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி சிவசோதி

  சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த தினிமேலே
  தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு மிறந்ததுவே
  அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம் ஐம்பொறி வழிச்செல்லோம்
  அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம் நாம்நன்றாய்
  தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம் தன்னைத்தானறிவோம்
  சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத மணிந்துகொள்வோம்
  உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங் குறைவில்லோம்
  உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம்

  கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு
  கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப் பூசனைசெய்
  அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி வழிச்செல்லாது
  ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை வென்றிடலாம்
  முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி சொன்னமொழி
  முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற் சேர்ந்திடலாம்
  இதிலோர் ஐய மில்லை யில்லை யெல்லா மவன்செயலே
  இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஓம்தத்சத்

  எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன் உறைகோயில்
  இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும் ஏத்திப் பணிவோமே
  புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு வரவில்லாப்
  பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை நாட்டாதே
  மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும் மாமா யையிதனை
  மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை
  எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு மஞ்சாதே
  இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக ஓம்தத்சத்

  Transliteration

  iruvarum theydik kaanaa iraivan en pohl urutthaangi
  inangi evarum vanangum nallaiyil innaa ivan enna
  oruvarum ariyaa thohdiyulaavi uvagai poottha mugatthinaraay
  oru naalendr enai uttru nohkki ohr pollaappumilai endru
  aruvamung kaatti uruvamung kaatti appaark appaalaam
  arul nilai kaatti kaattik kaatti antham aathi illaa
  soroopamung kaatti summaa virukkum soodchatthil maatti vittaan
  thunbam iranthana inba iranthana sohthi sohthi sivasohthi

  sivatthinai valarkkum paakkiyam emakku sitthitthath inimeyley
  theyvam veyrey undena ennum sinthaiyum iranthathuvey
  avatthinir sellum manatthinai velvohm aimbori val.icchellohm
  al.iyaa meypporul aagiya aanmaa arivohm naam nandraay
  thava val.is selvohm gurumol.i kolvohm thannai thaan arivohm
  saantham porumai eyyntha narpani santhatham aninthu kolvohm
  uvatthalung kaaythalum ohdi olitthana ondrung kuraivillohm
  unmai mul.uthum nee ohthuga thinamum aum thath sath aum

  kathiravan el.umun kaalai el.unthu kaigaal mugang kal.uvu
  kadimalar edutthu maalai thodutthu kadavulai poosanaisey
  athira varaamun manatthinai adakki aimbori val.icchellaathu
  aandavan thivviya paathatthai veyndi aasaiyai vendridalaam
  muthira muthira mul.uvathum unmai ena muni sonna mol.i
  mugamugamaaga kandu thelinthu mutthiyir seyrnthidalaam
  ithilohr aiyam illai illai ellaam avan seyaley
  iravum pagalum ithaya velikkul eytthuga aum thath sath

  enni enni panivaar nenjey eesan urai kohyil
  irunthung kidanthum nadanthun thodarnthum eytthip panivohmey
  punniya paavam irandung karpanai pohkkodu varavillaa
  poruley naangal arul kondari nee putthiyai naattaathey
  mannil vanthu piranthathum vaal.nthathum maamaayai ithanai
  maathavar arivaar mattravar ariyaar mathiyaathey ithanai
  ennil kaalam uyirohdiruppohm eythukkum anjaathey
  iyainthapadi nee nadanthu kol endrum eytthuga aum tat sat

  Translation

  Both Persons to Search and See Not God

  both persons - to search and - see not - God - my self - like - holding form
  agreeing - who ever - worshipping - in Nalloor - this is who - He is - thus
  even one - not knowing - ran and wandered - pleasantly - flowered - as persons with faces
  one - day - me - deeply - observed (and) - one - evil not even - thus
  formless - showed - form - showed - beyond - the beyond
  Grace - stage - showed - showed - showed - ending - beginning - without
  form also - showed - still - being - in the subtlety of - hooked - He did
  troubles - died - happiness - died - light - light - Siva's Light

  Sivaness - to grow - fortune - our - attainment - hereafter
  God - other - is there thus - thinking - died indeed
  unnecessary - goes - the mind that - we will conquer - five organs - we will not go the way of
  indestructible - true matter - which is - soul - let us know - we - very well
  meditation - way - we will go - Guru's word - we will hold - our Self - by ourself - we will know
  peace - patience - upholding - good work - with pride - wear - we will
  enjoyment and - remorse - ran - hidden - even one - complaint, we will not have
  truth - whole - you - utter - daily - Aum - That - Sat - Aum.

  sun - rising before - morning - rise and - hands and legs - face - wash
  budding flowers - take and - garland - make and - God (about) - pooja do
  fear - before (it) comes - the mind - control and - five organs - go not the way of
  God's - Divine - Feet - pray to and - desire - we will win
  maturing and - (more) maturing - whole indeed - truth - thus said - the Silent One - said - words
  face to face thus - saw and - cleared and - in liberation - we will join
  in this one (even) - doubt - no - no - all - His - action indeed
  night and - day also - in the heart space - adore - Aum - That - is Truth

  think and - think - those that bow - O heart! -- God - living - Temple
  sitting and - lying and - walking and - continuously - adore and bow, we will indeed!
  virtue - sin - both - imagination - going and - coming not
  matter indeed - (are) we - Grace - with, know - you - intellect , do not indulge
  on Earth - came and - born and - lived and - big illusion - of this
  great meditators - know - others - know not - don't bother - about this
  countless - time - we will live - for anything - do not fear, indeed
  as well as you can - you - conduct yourself - always - adore - Aum - That - is Truth